Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ன்றைய தேதியில் அதிகம் ட்ரோல் பண்ணப்படும் பாலிவுட் பிரபலம் யாரென்றால் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான்தான். அவரின் நவநாகரிக ஃபேஷன் உடை களாலேயே சமூக வலைதளங்களில் கேலி செய்யப்படுபவர் இம்முறை வேறொன்றுக்காக விமர்சிக்கப்படுகிறார். உலகப்புகழ்பெற்ற ‘Vougue’ என்ற ஃபேஷன் உலகின் நம்பர் ஒன் இதழின் அட்டைப்படத்தில் இடம்பிடித்தி ருக்கிறார். ‘ஷாரூக் கான் பணம் கொடுத்துத் தன் மகளை வளர்த்து விடுகிறார். அவர் ஒரு சாதாரண மாணவி மட்டுமே. அவ்ளோ வொர்த் எல்லாம் இல்லை’ என்று ஒரு குரூப்பும், ‘என்ன இல்லை என் அழகு செல்லத்துக்கு!’ என சுஹானாவுக்கு ஆதரவாக இன்னொரு குரூப்பும் சோஷியல் மீடியாவில் களமாடி வருகிறார்கள். `என் மகளை முதன்முதலில் கைகளில் தூக்கிச் சுமந்தபோது அடைந்த பெருமிதத்தை அவள் புகைப்படம் தாங்கிய வோக் இதழைக் கையில் ஏந்தியபோது கிடைத்தது!’ என வெளியீட்டின்போது ஏகத்துக்கும் நெகிழ்ந்தி ருக்கிறார் ஷாரூக். மகளைப் பெற்ற அப்பா!

இன்பாக்ஸ்

‘பாகுபலி’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடித்த சிவகாமி கதாபாத்திரத்தை வைத்து ‘ரைஸ் ஆஃப்  சிவகாமி’ என்ற நாவலை ஆனந்த் நீலகண்டன் 2015-ல் எழுதினார்.  தற்போது அந்த நாவலை நெட் ஃபிளிக்ஸில் வெப் சீரிஸாகத் தயாரிக்க வுள்ளனர்.    ‘பாகுபலி - தி பிகினிங், ‘பாகுபலி - தி கன்க்ளூஷன்’ என இரண்டு படங்களும் பாகுபலியைப் பற்றிப் பேசிய நிலையில், மகாராணி சிவகாமியைப் பற்றிய இக்கதைக்கு ‘பாகுபலி - பிஃபோர் தி பிகினிங்’ என்று பெயரிட்டுள்ளனர். ராஜமாதா ரிட்டர்ன்ஸ்!

இன்பாக்ஸ்

ந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாதான் இப்போது இங்கிலாந்து கிரிக்கெட்டில் சென்சேஷன். அவரது அதிரடி ஆட்டத்தைக்கண்டு இங்கிலாந்தே மிரண்டுகிடக்கிறது. இங்கிலாந்தின் கியா பெண்கள் டி20 சூப்பர் லீக் போட்டியில் லங்காஷயர் தண்டர் அணிக்காக விளையாடிவருகிறார் ஸ்மிரிதி. சென்றவாரம் நடந்தபோட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, கலக்கியிருந்தார். இந்த வாரம் 60 பந்துகளில் செஞ்சுரி போட்டிருக்கிறார். கியா சூப்பர் லீகில் ஆடிய எல்லாப் போட்டிகளிலும் எதிரணிப் பந்துவீச்சை அடித்துநொறுக்கி மிக அதிக ரன்குவித்தோர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ஸ்மிரிதி. வெற்றிக்கொடிகட்டு...

சாமா பின்லேடனின் தாயார் பேட்டி ‘தி கார்டியன்’ இதழில் வெளியானதுதான் இந்த வார வைரல். முதன்முறையாக மீடியாவுக்கு முகம் காட்டியிருக்கிறார். சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமைதியாக வாழ்ந்து வரும் ஆலியா கானம் என்ற அந்தப் பாட்டி, ஒசாமாவின் மென்மையான பக்கங்களையும், எப்படி 20 வயதுக்குள்ளே தீவிரவாதியாக மூளைச்சலவை செய்யப்பட்டு ஒசாமா பின்லேடன் மாற்றப்பட்டார் என்றெல்லாம் எமோஷனலாகப் பேசியிருக்கிறார். பாசக்கார பாட்டிம்மா

ரொம்ப சுமாரான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த ஹன்னா எட்வர்ட் என்ற 36 வயதுப் பெண் இப்போது உலகமெங்கும் விமர்சிக்கப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த  ஹன்னா எட்வர்ட் ஒரே நாளில் இணைய உலகின் சென்சேஷனல் ஆகிவிட்டார். கேக் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வந்த அவர் செய்த ஒரு விஷயம் இன்று பாராட்டுகளையும் வசவுகளையும் ஒருங்கே கிடைக்கச் செய்திருக்கிறது. அச்சு அசலான விலங்குகளின் உருவங்களை கேக்கில் சிலைகளாக வடிவமைத்து விற்பனை செய்ததுதான் அது. இணையத்தில் வைரலானாலும் ‘மிக மட்டமான ரசனை இது. என்னால் ஒரு நாயையோ குதிரையையோ வெட்டிச் சாப்பிட முடியாது!’, ‘கலையைத் தவறாகப் பயன்படுத்தி விட்டார்!’ என்றெல்லாம் நெகட்டிவ் கமென்ட்டுகளால் விமர்சிக்கப்படுகிறார். ஆனாலும், சத்தமில்லாமல் விற்பனை பத்து மடங்கு உயர்ந்து லாபம் பார்த்துள்ளார் அம்மணி. ஃபாரின் ஆர்டர்களும் குவிகிறதாம். கேக்ஸ்டர்

இன்பாக்ஸ்

ந்தி நடிகரும், டி-சீரிஸ் ஆடியோ நிறுவனத்தின் நிறுவனருமான குல்ஷன் குமாரின் வாழ்க்கையைப் படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். இப்படத்தை டி-சீரிஸுடன் இணைந்து அமீர்கான் தயாரிக்கவுள்ளார். 1997-ல் குல்ஷன் குமார் கோயில் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கொலையின் பின்னணியில் நிழலுலக தாதா தாவுத் இமப்ராஹிமுக்கும், கூட்டாளி  அபு சலீமுக்கும்  தொடர்புள்ளது என இன்றுவரை சந்தேகம் இருக்கிறது. இந்த பயோபிக்கில்  குல்ஷனின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் பல முன்னணி கதாநாயகர்களுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் முன் வரவில்லையாம். அடுத்த ஹிட்டு!

இன்பாக்ஸ்

ன்னைப் பற்றி வரும் நெகட்டிவ் விமர்சனங்களை ஆர்வமாகப் படிப்பவர் அஜித். சமீபமாக தோற்றம் குறித்த விமர்சனங்கள் அதிகமாக வருவதைக் கண்டு தன் உதவியாளர்களிடம்  `ஏன் இப்படியெல்லாம் வருது?’ எனக் கேட்டிருக்கிறார். ‘அஜித் என்றாலே அழகு என்ற இமேஜ் உண்டு. பொது இடங்களில் மேக்-அப் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும்போது எடுக்கப்படும் படங்களைத்தான் சிலர் விமர்சிக்கிறார்கள்’ என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.  ஷாலினியின் அட்வைஸ்படி தோற்றத்தைப் பொலிவாக்க கேரளா போய் வந்திருக்கிறார் அஜித். விரைவில் சால்ட் அண்டு பெப்பர் லுக்குக்கு குட் பை சொல்லி யங் லுக்கில் வலம் வரப்போகிறாராம் அஜித். வாங்க தல வாங்க!