‘மாமன் மகளைப் பெண்கேட்டுப் போய், போன இடத்தில் அவமானப்பட்டு, மாமனிடம் சவால்விட்டு அதில் ஜெயிக்கும் நாயகன்’ என்கிற 80-களின் கதைதான் ‘மணியார் குடும்பம்.’ இந்தப் பழைய ஒன் லைனைக் கொஞ்சம் அப்டேட் செய்து புதிய பாணியில் கொடுக்க முயன்றிருக்கிறார் தம்பி ராமையா.

தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கு நடனமும் சண்டையும் நன்றாகவே வருகின்றன. ‘நாயகியாக மிருதுளா முரளி நடித்துள்ளார்’ என்கிற வரியை எழுத மட்டுமே அவருக்கு ஸ்கோப். விவேக் பிரசன்னா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், பவன், சமுத்திரக்கனி, ராதாரவி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ராமர், டைகர் கார்டன் தங்கதுரை என்று காஸ்டிங் பட்டாளம்.

படத்தின் திரைக்கதை, பாடல்கள், இசை, இயக்கம் என்ற பொறுப்புகளுடன் நடிப்பையும் ஏற்றிருக்கிறார் தம்பி ராமையா. கதாபாத்திரங்களை வடிவமைத்ததில், ஓர் இயக்குநராக ஜெயித்திருக்கிறார். ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் ஊதாரித் தந்தை பாத்திரத்துக்கான அளவான நடிப்பை வெகுளித்தனத்தின் கச்சிதத்தில் வெளிப்படுத்தும் தம்பி ராமையா, ஒருகட்டத்தில் வெடித்துப் புலம்பி ஓவர் ஆக்டிங்கில் சோதிக்கவும் செய்கிறார்.

கண்ணுக்குக் குளிர்ச்சியான லொகேஷன், கலகல நடிகர்கள், காமெடி, காதல் என்று பயணித்து இடைவேளைக்குப் பிறகு நகராத திரைக்கதையால் தொய்வடைகிறது படம். அந்த ‘சைக்கோ மாப்பிள்ளை’ போர்ஷனும் வில்லனின் கனவு போர்ஷனும் சீரியஸா, காமெடியா என்று தெரியாமல் பார்வையாளர்களைச் சோதிக்கின்றன.

முதல் பாடலிலும் இடைவேளை வரையிலான பின்னணி இசையிலும் தம்பி ராமையா கைத்தட்டல் பெறுகிறார். படத்தொகுப்பில் இன்னும் கச்சிதம் காட்டியிருக்க வேண்டும். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு கிராமத்து நிலவெளிகளைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியி ருக்கிறது. பழைய கதை என்பதுகூட ஓகே; அரதப்பழசான வசனமும் என்பது நியாயமா இயக்குநரே?

ஓகே ரக கதை, கல கல காஸ்டிங்.ஆனால் இரண்டாம் பாதியின் தடுமாற்றத்தால், முழுக்கிணறு தாண்டச் சிரமப்பட்டிருக்கிறது மணியார் குடும்பம்.

- விகடன் விமர்சனக் குழு