மறதிநோயால் அவதிப்படும் ஹீரோ, மறக்காமல் அதை மறைத்துக் காதலிக்கிறார். இறுதியில், மறதி நோயை வென்றாரா, காதலியைக் கரம் பிடித்தாரா என்பதே படத்தின் ஒன்லைன்.

பெட்ரோல் பில்லின் பின்னால் எழுதிவிட முடியும் இந்தக் கதையை, இரண்டரை மணி நேர நான் ஸ்டாப் காமெடி காக்டெய்லாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார். ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்கள் தந்து தமிழில் `A’டல்ட் காமெடி இயக்குநர் எனப் பெயரெடுத்தவரின் ‘U’ டர்ன் தான் இந்தப் படம்.

தெலுங்கில் ஹிட் அடித்த ‘பலே பலே மஹாதிவோய்’ படத்தின் ரீமேக் தான் இந்த கஜினிகாந்த். மறதியை மறைத்து சமாளிபிகேஷன் தட்டும் இடத்திலும் மாட்டிக்கொண்டு பல்புகள் வாங்கும் இடத்தில் ஆர்யா அசால்ட்டுதான். ஆனால் எமோஷனல் ஆகும் இடங்களில் தடுமாறுவது தெரிகிறது.

சாயிஷா..! `பார்த்தவுடன் காதலித்துவிடவும்!’ சொல்ல வைக்கும் அழகு. நடனத்தையும் நடிப்பையும் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்.

சம்பத், `ஆடுகளம்’ நரேன், சதீஷ், கருணாகரன், ராஜேந்திரன், உமா பத்மநாபன், காளிவெங்கட் என நிறைய கேரக்டர்கள் இருக்கிறார்கள். சம்பத்தைத் தவிர எல்லோரும் சிரிக்க வைக்க மெனக்கெட்டிருக் கிறார்கள். ஆர்யாவின் பெற்றோராக வரும் நரேன் - உமா கூட்டணி சம்பத்தை சமாளிக்க அண்ணன் - தங்கையாக வேஷம் போடும் இடத்தில் தியேட்டரே அதிர்ந்து சிரிக்கிறது. சதீஷுக்கு `கூடவே வரும் செவ்வாழை’ ரோல். மனிதர் தன் வழக்கமான; நமக்குப் பழக்கமான ஒன்லைனர்களால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் கடுப்படிக்கிறார்.

பல்லுவின் `பளிச்’ ஒளிப்பதிவும், பிரசன்னா ஜி.கேவின் `நறுக்’ எடிட்டிங்கும் காமெடி படத்தையும் விறுவிறுப்பாக்குகின்றன. இசைதான் படத்தின் பெரிய ஸ்பீடு பிரேக். பாடல்கள் ஒவ்வொன்றும் மினி இன்டெர்வெல்!

லிஜீஷின் வில்லன் ரோல் பவர்ஃபுல்லாக இல்லாமல் படம் முழுக்க இடைச்செருகலாகவே இருக்கிறது. டயலாக் போர்ஷனில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் சீரியல் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

அந்த க்ளைமாக்ஸ் காட்சியெல்லாம் சிரிக்கவும் வைக்காமல் பரபரக்கவும் வைக்காமல் கடுப்பேற்றுகிறது. தமிழுக்கு ஏற்றாற்போல காமெடி ட்ரீட்மென்ட்டில்... சில பல திரைக்கதை மாற்றங்களைத் தயவுதாட்சண்யமின்றி செய்திருந்தால் படம் இன்னும் வேற லெவலுக்குச் சென்றிருக்கும்.

ஆனாலும், லாஜிக்கையெல்லாம் மறந்து சிரிக்க வைத்த இந்த மறதிக்கார கஜினிகாந்தை மறக்காமல் ஒருமுறை பார்க்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு