Published:Updated:

“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!”

“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!”

ஆர்.வைதேகி - படம்: ஜெ.வேங்கட்ராஜ்

“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!”

ஆர்.வைதேகி - படம்: ஜெ.வேங்கட்ராஜ்

Published:Updated:
“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!”

சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் செம ஃபிட்டாக இருக்கிறார் மிலிந்த் சோமன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ கண்டெடுத்த பாலிவுட் வில்லன். தனது ‘பிங்கத்தான்’ அமைப்பு சார்பாக சென்னை டு பாண்டிச்சேரி மாராத்தான் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்.

“வாழ்க்கை என்பது சூதாட்டமில்லை!”

“ஃபிட்னெஸ் எனக்கு வாழ்க்கையில நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்தது. 9 வயசுலேருந்து ஸ்விம்மிங் பண்றேன். நேஷனல் லெவல் ஸ்விம்மரா இருந்திருக்கேன். தினமும் ஜிம்முக்குப் போறதுதான் ஃபிட்னெஸ்னு அர்த்தமில்லை. நேற்றைவிட இன்னிக்கு ஆரோக்கியமா இருக்கோமாங்கிறதுதான் ஃபிட்னெஸ். அந்த வயசுலயே தினமும் 12 கிலோமீட்டர் ஸ்விம் பண்ணியிருக்கேன். ‘உங்களுக்கு ஏன் இட்லி, சாம்பார் பிடிக்குது’னு ஒரு சவுத் இந்தியன்கிட்ட கேட்டா என்ன பதில் சொல்வாங்களோ, அப்படித்தான் ‘உங்களுக்கு ஏன் ஃபிட்னெஸ்மேல அவ்வளவு ஆர்வம்’ என்ற கேள்விக்கான என் பதிலும். அது எனக்கு வழக்கமில்லை, வாழ்க்கை...’’ முறுக்கேறிய உடலின் ஒவ்வொரு நரம்பும் அதையே பிரதிபலிக்கிறது.

 “அப்புறம்... தமிழ்ப்படங்களில் பார்க்க முடியலையே?”


“சில தமிழ்ப்படங்கள் பண்ணிட்டேன். ஆனால், இன்னிக்கும் என் ஃபேவரைட்னா ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’தான்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு எல்லா  மொழிகளிலும் கூப்பிடறாங்க.  சின்ன கேரக்டர்னாலும் ஓகே.  பாசிட்டிவ் கேரக்டரா இருக்கணும்.  அண்ணன், அப்பா கேரக்டர்னாலும் நான் ரெடி. ஆனா ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ லாரன்ஸ் மாதிரி எதிர்பார்த்து வந்தாங்கன்னா, ஸாரி... என்னால ஒரே மாதிரி கேரக்டர்ஸ் பண்ண முடியாது.

ஒரு நல்ல நடிகனுக்கு நல்ல இயக்குநர் அமையணும்.  அதே மாதிரி ஓர் இயக்குநருக்கு நல்ல நடிகன் அமையணும். அப்படி எந்த டைரக்டருக்காவது என் முகம் மனசுல வரணும். 18 வருஷமா சினிமாவுல இருக்கேன். பெரிய பெரிய டைரக்டர்ஸ் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டறாங்க. ஆனாலும் நான் எதிர்பார்க்கிற ஸ்க்ரிப்ட் அமையலையே...’’

“உங்கள் திருமணம் பலராலும் பரபரப்பா பேசப்பட்டதே...”


“2014-ல சென்னையிலதான் அங்கிதாவை முதல் முறையா மீட் பண்ணினேன். எனக்கு  லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். ஆனா அவங்களுக்கு முடிவு பண்ண ஆறு மாசமாச்சு. நான் மாடலிங்ல பிசியா இருந்தபோது அங்கிதா அஞ்சு வயசுக் குழந்தை. இப்போ அவங்களுக்கு 27 வயசு. எங்க ரெண்டு பேருக்கும் அது பிரச்னையா தெரியலை. ஆனா, ரெண்டு பேர் வீட்டுக்கும் அது பெரிய தடையா இருந்தது. நாங்க அவங்களை கன்வின்ஸ் பண்ணவெல்லாம் முயற்சி பண்ணலை. ‘வயசு வித்தியாசம் வாழ்க்கைக்குப் பிரச்னையா இருக்கும்’னு சொன்னாங்க. வாழ்க்கைங்கிறது சூதாட்டமில்லை. நம்பிக்கை. பரஸ்பர மரியாதை. கமிட்மென்ட். அதை நானும் அங்கிதாவும் புரிஞ்சுக்கிட்டோம்.

ஏப்ரல் மாசம் மும்பையில முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ‘ஒருவேளை நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் வொயிட் டிரெஸ்தான் போட்டுப்பேன்’னு அங்கிதா விளையாட்டாச் சொல்வாங்க. அங்கிதாவின் ஆசையை நிறைவேத்தணும்னு நினைச்சேன். நார்த் ஸ்பெயின்ல உள்ள செயின்ட் ஜேம்ஸ் சர்ச்சுக்குக் கூட்டிட்டுப் போனேன். லிஸ்பென்லேருந்து சாண்டியாகோ வரைக்கும் நடந்தே போனோம். அந்தச் சர்ச்சைப் பார்த்ததும் அங்கிதாவின் மனசு மாறிடுச்சு. நாங்க தங்கியிருந்த அந்த இடத்துல வயலும் அருவியுமா இருந்ததைப் பார்த்துட்டு அங்கே இன்னொரு முறை கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க அங்கிதா. பண்ணிக்கிட்டோம். அங்கிதா வந்தபிறகு என் வாழ்க்கையின் அர்த்தம் இன்னும் கூடியிருக்கு.’’

சொல்லும்போதே சோமன் முகத்தில் உற்சாகமும் மலர்ச்சியும்.