Published:Updated:

''27 கிலோ கேமராவை தோளில் தூக்கிட்டு ஓடுவோம்..!’’ - 'லிசா' ராஜு விஸ்வநாத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''27 கிலோ கேமராவை தோளில் தூக்கிட்டு ஓடுவோம்..!’’ - 'லிசா' ராஜு விஸ்வநாத்
''27 கிலோ கேமராவை தோளில் தூக்கிட்டு ஓடுவோம்..!’’ - 'லிசா' ராஜு விஸ்வநாத்

"100 கோடி, 200 கோடி பட்ஜெட் இருந்தால்தான் ஒரு 3டி படம் எடுக்க முடியும்னு பயமுறுத்தி வெச்சிருக்காங்க. அப்படியெல்லாம் இல்லை; குறைவான செலவுகளிலும்  பிரமாண்டமான விஷூவல்ஸ் கொண்டு வரலாம். அதை ‘லிசா’வில் பண்ணியிருக்கோம்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'பலூன்’ படத்திற்குப் பிறகு ’லிசா’ என்கிற பேய்ப்படத்தில் நடித்து வருகிறார், அஞ்சலி. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கிலி கிளப்பியது. 'லிசா’ படத்தின் அப்டேட்ஸைத் தெரிந்துகொள்ள இயக்குநர் ராஜு விஸ்வநாத்திடன் பேசினோம்.
 
பேய் படத்தை முதல் படமா எடுத்தா தப்பிச்சுக்கலாம்னு நினைச்சு இந்தக் கதையை எழுதுனீங்களா..?

’’உண்மைதான். ஆனால், ’லிசா’ கதையை முதலில் த்ரில்லர் ஸ்டோரியாகத்தான் எழுதியிருந்தேன். பி.ஜி.முத்தையா சார், ’என் பேனர்ல ஒரு பேய் படம் பண்றீங்களா’னு கேட்டதுக்கு அப்பறம்தான் இதைப் பேய் கதையாக மாற்றினேன். பேய் பட ட்ரெண்ட் ஒரு புயல் மாதிரி அடிச்சு இப்போதான் கொஞ்சம் ஓய்ந்திருக்கு. இந்த நேரத்தில் நாமளும் ஒரு சாதாரண பேய் படத்தை எடுத்தால் மக்களுக்குப் போர் அடிச்சிடும்னு நினைச்சோம். அப்போதுதான் 3டியில் இதை எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம். அதனால் இந்தப் படத்தை 3டி ஸ்டிரீயோஸ்கோப்பில் எடுத்திருக்கோம். பொதுவா 4K ஃபார்மெட்டில் படத்தை ஷூட் பண்ணி அதை 2Kக்கு மாத்துவாங்க. நாங்க 8K ஃபார்மெட்டில் ஷூட் பண்ணி அதை 2Kக்கு மாத்தியிருக்கோம். அதுனால படம் செம குவாலிட்டியாகவும், பார்க்கும் போது புது அனுபவமாகவும் இருக்கும்.’’

அஞ்சலிகிட்ட கதை சொன்ன அனுபவம்..?

’’கதை எழுதி முடிச்சதும் இதில் அஞ்சலி நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு; அவங்ககிட்ட பேசி கதை கேட்கிறதுக்கு நேரமும் கொடுத்துட்டாங்க. அதில் என்ன சிக்கல்னா ஒரு மணி நேரம்தான் கொடுத்தாங்க. எனக்கு அப்படிக் கதை சொல்லி பழக்கம் இல்லை. நான் கதை சொல்ல ஆரம்பிச்சா 2, 3 மணி நேரம் போகும். ’எப்படி ஒரு மணி நேரத்தில் சொல்லப் போறோம்; அந்த டைம்குள்ள எல்லாத்தையும் புரிய வைக்க முடியுமா’னு பல குழப்பங்களோடுதான் அஞ்சலிகிட்ட கதை சொன்னேன். நான்தான் குழப்பமா இருந்தேன்; அவங்க நல்லா என்ஜாய் பண்ணிதான் கதை கேட்டாங்க. கதை சொல்லி முடிச்சதும், ’நான் பண்றேன்’னு சொல்லிட்டாங்க. நான் அவங்ககிட்ட, ’உண்மையாகவே உங்களுக்கு கதை புரிஞ்சதா; ஏன்னா, எனக்கே நான் கதை சொன்னதில் முழு திருப்தி இல்லை’னு கேட்டேன். ’ராஜு, நான் எத்தனைக் கதை கேட்டிருப்பேன்; நீங்க என்ன சொல்ல வரீங்கனு எனக்கு புரியாமையா ஓகே சொல்லுவேன். கதை நல்லா இருக்கு கண்டிப்பா பண்றேன்’னு சொன்னாங்க. அன்னையில இருந்து ஷூட்டிங் முடியுற வரைக்கும் செம ஜாலியா பழகுனாங்க; நல்லா நடிச்சுக்கொடுத்தாங்க.’’

நீங்க நினைச்சதைப் படமாக்க என்னென்ன சிக்கல்கள் இருந்துச்சு..?

’’நார்மல் ரெட் கேமராவில் எடுத்து அதை 3டியா மாத்துறதுக்கு ஆகுற செலவைவிட 3டி கேமராவில் ஷூட் பண்ற செலவு குறைவு. ஆனால், அந்த கேமரா 27 கிலோ இருக்கும். அதனால ட்ராலி ஷாட்ஸ் மட்டும்தான் எடுக்க முடியும். ஒரு பேய் படத்துக்கு ட்ராலி ஷாட்ஸ் வெச்சா நாடகம் மாதிரி இருக்கும். தேவையான இடத்துல ஷேக் பண்ணணும்; ஒரு லைவ் ஃபீல் கேமரா மூலமா கொடுக்கணும். அதுனால வெயிட்டான அந்த கேமராவை தோளில் தூக்கி வெச்சுக்கிட்டுதான் பாதி படத்தை ஷூட் பண்ணினார் முத்தையா சார். அவருக்கு உதவியா நாங்களும் அப்பப்போ கேமராவை தோளில் தூக்கி வெச்சுக்கிட்டு, ஷூட் பண்ணினோம். ஒளிப்பதிவுக்காக ரொம்பவே மெனக்கெட்டார்.’’

டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் முயற்சி பண்ணியிருக்கீங்க... இந்த வசதிகளெல்லாம் இருக்கிற தியேட்டர்ல மட்டும்தான் படத்தை ரிலீஸ் பண்ணுவீங்களா..?

’’3டில மட்டும் இல்ல, 2டிலேயும் படத்தைப் பார்க்கலாம். ஆனால், 8K குவாலிட்டி, 3டினு எடுத்திருக்கப் படத்தை அந்த வசதிகள் உள்ள தியேட்டரில் பார்க்கும் போதுதான் முழுமையான அனுபவம் கிடைக்கும். ஏன்னா, ’2.0’ படத்துல வொர்க் பண்ணின சிஜி டீம் அண்டு 3டி டெக்னீஷியன்ஸ்தான் இதுலேயும் வொர்க் பண்ணியிருக்காங்க. டெக்னிக்கலா எடுத்திருக்கப் படத்தை நல்ல தியேட்டரில் பார்க்கும் போதுதான் முழு திருப்தி கிடைக்கும். இந்த வசதிகள் இருக்கிற 100 தியேட்டர்கள் தமிழ்நாட்டில் கிடைச்சா போதும்னு நானும் தயாரிப்பாளரும் முடிவு பண்ணியிருக்கோம். அடுத்தடுத்த நாள்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகும்னு நம்பிக்கை இருக்கு.

100 கோடி, 200 கோடி பட்ஜெட் இருந்தால்தான் ஒரு 3டி படம் எடுக்க முடியும்னு பயமுறுத்தி வெச்சிருக்காங்க. அப்படியெல்லாம் இல்லை; குறைவான செலவுகளிலும்  பிரமாண்டமான விஷூவல்ஸ் கொண்டு வரலாம். அதை ‘லிசா’வில் பண்ணியிருக்கோம்.’’

அஞ்சலியைத் தவிர வேற யாரெல்லம் நடிச்சிருக்காங்க..?

’’ஹீரோவா சாம் ஜோன்ஸ்னு ஒரு புதுமுகம் நடிச்சிருக்கிறார். பாலிவுட் நடிகர் மக்ராந்த் தேஷ்பாண்டே, 20 வருஷங்களா நடிக்காம இருந்த தெலுங்கு நடிகை சலீமா, தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம், யோகி பாபு, மைம் கோபினு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. தமிழ், தெலுங்கு பைலிங்குவலாகவும் ஹிந்தியில டப் பண்ணியும் ரிலீஸ் பண்றனால நடிகர், நடிகைகளை மூணு லாங்வேஜ்ல இருந்தும் எடுத்திருக்கோம்.’’

ராஜு விஸ்வ நாத்தின் முழுமையான பேட்டியை வருகிற வியாழக்கிழமையன்று ஆனந்த விகடன் இதழில் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு