திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையின் குவியலில் எதையோ துழாவிக் கொண்டிருந்தபோது, அந்தப் புத்தகம் கண்ணில்பட்டது. `Love and Love only’ என்ற தலைப்பைப் பார்த்ததும் `எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோமே!’ என்கிற யோசனை உள்ளுக்குள் ஓடியது. பழுப்பு நிற முதல் பக்கத்தின் மேல் ஓரமாக `மினி’ என எழுதியிருந்தது. கோமாவிலிருந்து சட்டென மீள்வதுபோல எனக்கு எல்லாம் ஞாபகம் வந்தது. சுருள் சுருளாக இருபது வருடங்கள் பின்னோக்கிப் போய் நின்றது. உற்சாகம் மேலிட, புத்தகத்தை மொபைலில் க்ளிக் செய்து விக்னாவுக்கு மெசேஜ் பண்ணினேன்.

`ரியல்ல்லி!’ என்று ரிப்ளை வந்தது.

விக்னா காபியை உறிஞ்சியபடி, ``ஆமா, மினிதான். ஜீவானந்தம், பெரிய மனசோடு மினிக்கு விட்டுக்கொடுத்த புக்தான். ஆனா, இந்த புக்கையும் அதுல ஹீரோ பென்ல எழுதிய `மினி’ங்கிற பேரையும் வெச்சு அவங்களை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? நான் என்ன ஷெர்லாக் ஹோம்ஸா... இல்ல, கணியன் பூங்குன்றனா?” என்றாள்.

``ஆனா, நான் கொஞ்சம் `துப்பறியும் சாம்பு' வேலை பார்த்துட்டேன். அந்தப் பழைய புத்தகக் கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன். சாந்தோம் பக்கத்துல இருந்துதான் யாரோ பழைய பேப்பர் எடுக்கிற ஆள் இதைக் கொடுத்தானாம். சாந்தோம் பக்கத்துலன்னா, கண்டிப்பா மினி வீடு அங்கே எங்கேயாவது இருக்கலாம். ஆனா, அடுத்த நகர்வு என்ன பண்றதுன்னுதான் தெரியலை. பழைய இன்வெஸ்டிகேஷன் படங்கள்ல எல்லாம் டெலிபோன் டைரக்டரியைப் பார்த்துதான் பேரையும் அட்ரஸையும் கண்டுபிடிப்பாங்க. மொபைல்போன் காலத்துல யாரு டைரக்டரியெல்லாம் வெச்சிருப்பாங்க?” என்றேன் நான் சோகமாக.

``சாந்தோம் ஏரியாவுலதான்னா... சாந்தோம் சர்ச்சுக்கு மினி வர சான்ஸ் இருக்குல்ல” என்றாள் விக்னா.

``சர்ச்ல எத்தனையோ பேர் வருவாங்க, நாம எப்படி விசாரிக்கிறது?”

``அங்கதான் இருக்கு சூட்சுமம். கேரளாவைவிட்டா இந்தியாவுல எங்கேயும் மினிங்கிற பேருல யாரும் இருக்க மாட்டாங்க. ஸோ, தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே மினி இந்த அம்மணி மட்டும்தான். லெட்ஸ் கோ” என்று எழும்பினாள். அடுத்து சர்ச்...

`மினி ஜீவானந்தம்’ என்கிற பெயரை சர்ச் ரெக்கார்டு புக்கில் பார்த்ததும் விக்னாவின் தலைக்குமேல் வெள்ளையாகக் குட்டி ஏஞ்சல்கள் பறப்பதைப் பார்த்தேன்.

‘Love and Love only’ புத்தகத்தை நீட்டியபடி விக்னா சொன்னாள்... ``எப்படி மேடம் இதை எடைக்குப் போட மனசு வந்துச்சு. ஜீவானந்தம் உங்களுக்கு ஆசையா கொடுத்ததாச்சே!”

``அய்யோ நான் ஒரு வருஷமா இந்தப் புத்தகத்தைத் தேடிட்டு இருக்கேன். எங்க மாமனார் பழைய புத்தகத்தையெல்லாம் எடைக்குப் போடும்போது தவறுதலா இதையும் போட்டிருக்கார். நீங்க இப்போ இதை எனக்குக் கண்டுபிடிச்சு கொடுத் துட்டீங்க. தேங்க்ஸ்” என்றார், புத்தகத்தை மார்போடு அணைத்தபடி.

``ஆக்சுவலி இந்தப் புத்தகம்தான் உங்களை எங்களுக்குக் கண்டுபிடிச்சு கொடுத்திருக்கு. நாங்க புத்தகத்துக்கு ஒரு தடவை தேங்க்ஸ் சொல்லிக்கிறோம். தேங்க்ஸ்” என்றேன் நான்.

மினி அதே கூச்சத்துடன் சிரித்தார். இப்போதும் கூந்தலைத் தூக்கித் தோளுக்கு முன் போட்டுவைக்கும் பழக்கத்தைவிடவில்லை என்பதையும் கவனித்தேன்.

``அந்தக் காலத்துலேயே எம்.பி.ஏ பண்ணிய ஜீவானந்தம், இப்போது தொழிலதிபராதான் இருக்கணும் இல்லையா?” என்றாள் விக்னா.

``ஆமா. ஆபீஸ் போயிருக்கிறார். நீங்க கிளம்புறதுக்குள்ள வந்துடுவார்...”

``அன்னிக்கு நீங்களும் ஜீவானந்தமும் கடைசி நேரத்துல எடுத்த அந்த முடிவு, யாரும் எதிர்பார்க்காதது. தமிழ்நாட்டுக்கே அது புதுசா தெரிஞ்சுது. வழக்கமா பெற்றோரையும் உற்றோரையும் பற்றிக் கவலைப்படாத காதல்களுக்கு மத்தியில, அந்த முடிவு வேற லெவல்!” என்றாள் விக்னா.

``பெற்றோரின் முரட்டுப்பிடிவாதமும் தப்புதானே? அதைப் பற்றி `காதலுக்கு அவமரியாதை’ என யாரோ பத்திரிகையில் எழுதியதைப் படித்த ஞாபகம்...” என்றேன் நான்.

``சரிதான். நானும் அதைக் கேள்விப் பட்டிருக்கேன். நாங்க பிரிஞ்சு வந்தாலும் சமூகத்துக்கான தவறான செய்தியாகிடும்.”

``மதம் தாண்டிய திருமணம் இது. திருமண வாழ்வில் என்னென்ன போராட்டங்களை எதிர்கொண்டீர்கள்?”

``இந்தியக் குடும்பங்களின் மிகப் பெரிய கவலை, சமூகத்தைப் பற்றிதான்.

தனிநபராகப் பார்த்தால் நல்லவரா, விசால மனம் படைத்தவரா இருப்பாங்க. நாலு பேருக்குப் பதில் சொல்லணுமேங்கிறதால, குழந்தைகளின் விருப்பத்துக்கு மாறா முடிவெடுத்து, அவங்களைக் கஷ்டப்படுத்திக்கிட்டு, தானும் கஷ்டப்படுவாங்க. சமூகம்கிறது நம்மையும் ள்ளடக்கியதுதான்னு புரிஞ்சவங்க, தானே மாற்றத்துக்கு வந்துடுவாங்க. நாங்க ரெண்டாவது கேட்டகிரி.

எங்க காதல் ஏத்துக்கப்பட்டதோடு ஒரு போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சுன்னு சொல்லலாம். அதுக்கப்புறம் இன்னும் பெரிய பெரிய விஷயங்கள். யாருடைய மதத்தைப் பின்பற்றணும்? `மனைவிதான் கணவனு டையதைப் பின்பற்றணும்’னு அவங்க உறவினர்களும், `ஜீவாவை ஞானஸ்நானம் பண்ணினாத்தான் உறவில் ஏத்துக்க முடியும்’னு எங்க பக்கத்துலயும் ரொம்பப் பிடிவாதமா இருந்தாங்க. நானும் ஜீவாவும் சேர்ந்தே எடுத்த ஒரு முடிவுதான் இன்னிக்கு வரை தொடருது. இந்த உலகின் ஆதி மதம், மனிதம்தான். நாங்க ரெண்டு பேருமே ரெண்டையும் விட்டுக் கொடுக்காம இருக்கோம். எங்க வீட்ல கிறிஸ்துமஸும் உண்டு; தீபாவளி, பொங்கலும் உண்டு. விழாக்கள் நம் வாழ்க்கையை வண்ணமயமாக்குதுன்னா, எங்களுக்கு எல்லா வண்ணமும் அமைஞ்ச திருப்தி!”

``குழந்தைகள்?” என்றாள் விக்னா. அவளுக்கு அநேகமாக குட்டி மினியையோ, குட்டி ஜீவானந்தத்தையோ பார்த்துவிடும் ஆவல் வந்திருக்க வேண்டும்!

``அவங்களுக்குப் பெயர் வெக்கிறதுல சிக்கல், பள்ளியில மதம் எதுன்னு கொடுப்பதுல சிக்கல்னு திரும்பவும் பல போராட்டங்களைச் சந்திச் சோம். பல காதல் திருமணங்கள் தோல்வியுறுவதுக்குக் காரணம், சாதி தவிர்க்கும், மதம் தவிர்க்கும் மனிதர் களுக்காக இணக்கம் காட்டாத அரசும் சூழலும்

தான். எங்கு போனாலும், எந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தாலும், எதை வேண்டுமானாலும் எழுது. ஆனா, மதம் என்று ஒன்றையாவது எழுது என்றே நிர்பந்தம். யாருடைய மதத்தை எழுதுவது கிறதுல ஆரம்பிக்குது ஈகோ யுத்தம்.”

``எங்கள் குழந்தைகளுக்கு மதம் சார்பில்லாத பெயர்களைச் சூட்டியிருக்கிறோம். அதையும் மீறி `என்ன மதம்?’னு கேட்பவரிடம் `மனிதம்’னு சொல்லச் சொல்லியிருக்கிறோம். சந்தோஷமான ஒரு செய்தி, எங்க மகளும் மதம் மறுக்கும் திருமணம் செய்யப் போகிறாள். மாப்பிள்ளை பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர். ஜீவா போலவே நன்றாகப் பாடுவார்.”

அதுவரை தீர்க்கமாக ஒலித்துக் கொண்டிருந்த மினியின் குரலில், கடைசி வாக்கியத்தைச் சொல்லும்போது நாணம் ஒட்டிக்கொண்டது.

நிச்சயதார்த்தப் புகைப்படங்களைக் காட்டினார். மகள், அப்படியே அச்சு அசல் மினி. அதே சூரிய ஒளி புக முடியாத அடர்காட்டு கூந்தல். எளிமையான அலங் காரத்தோடு மிகமிக வசீகரமாக இருந்தார்.

தான் இதுவரை பேசியதே அதிகம் என்பதுபோல மினி மெளனமானார். எங்களுக்கும் அவரை சங்கடப்படுத்திப்பார்க்க விருப்பமில்லை. பேச்சை மாற்றினோம். ``ஜீவா ஃப்ரெண்ட்ஸ் எப்படியிருக்காங்க?”

உடனே மினி முகத்தில் சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. ``இன்னமும் எல்லாரும் சந்திச்சுக்கிறோம். அந்த `ஹலோ, ஹலோ’ என்றே சொல்லிக்கொண்டிருந் தோமே, ஞாபகமிருக்கா?” அடக்க முடியாமல் சிரித்தார்.

நாங்கள் கிளம்ப தயாராகும் போது ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்தார்.

கண்ணாடிக்குள் கண் இமை களை அடிக்கடி சிமிட்டும் மேனரிசம் உண்டுபோல. புன்னகைத்தைபடி, ``வணக்கம். மினி போன்ல சொன்னா. சந்தோஷம்” உதட்டைத் திறக் காமல் பேச்சு மட்டும் வெளியே வருவதைக் கவனித்தேன்.

``மகிழ்ச்சி ஜீவா. உங்க ரெண்டு பேரையும் சந்திச்சதுல” என்றோம்.

மினி வழியனுப்ப வாசல் வரை வந்தார்.

``ஆமா... நீங்க என் மாமனார்கிட்ட பேசலியே. தோட்டத்துல பூச்செடிகளுக்குத் தண்ணி ஊத்திட்டு இருக்கார். ஒரு நிமிஷம், கூப்பிடுறேன்” என்றார் மினி.

``அய்யோ டயமாச்சு கிளம்புறோம்க. இன்னொரு வாட்டி பார்த்துக்கலாம்” என்றாள் விக்னா படபடப்பாக.

``ஓகே” என்று விடை கொடுத்தார் மினி.

விக்னா ஸ்கூட்டியைக் கிளப்பும்போது கேட்டேன் ``ஏன், மினி மாமனார்கிட்ட பேச ணும்னு சொன்னதும் டென்ஷன் ஆயிட்ட?”

``அவர் பேசி நீ கேட்டதில்ல இல்லே. அவர் ரிட்டையர்டு ஆன பிறகு முழு நேர மேடைப் பேச்சாளரா மாறிட்டார்போல!”

``அதெப்படி உனக்குத் தெரியும்” என்றேன் அப்பாவியாக.

``மினியைப் பற்றி நேற்று ஃபேஸ்புக்ல தேடும்போது அவர் மாமனார் மேடையில பேசின சில வீடியோக்களைப் பார்த்தேன். முடியலடா சாமீ...” என்று ஆக்ஸிலேட்டரை முறுக்கினாள்!

காதலுக்கு மரியாதை, வெளியான ஆண்டு: 1997

நடிப்பு: விஜய், ஷாலினி, இயக்கம்: ஃபாசில்.