ஹீரோயின் மீனா... அந்த பிஸியான காலத்தில் எப்படி இருந்தாங்க?

- உ.ஹேமலதா, திருச்சி

பாவம்... ஓய்வுக்காக ரொம்ப ஏங்கின காலகட்டம் அது. 1990-களிலிருந்து தொடர்ச்சியா 15 வருஷங்கள் தென்னிந்திய சினிமாவில் எல்லா சூப்பர் ஸ்டார்களுடனும் நடிச்சிருக்கேன். ‘நம்பர் ஒன் நடிகை’ங்கிற புகழையும் பார்த்திருக்கேன். ஆனா, அதை அனுபவிச்சு சந்தோஷப்படக்கூட நேரமில்லாம அடுத்த புராஜெக்ட்டுக்கு ஓடிட்டு இருந்தேன். என் கால்ஷீட்டுக்காக சண்டை போட்டவங்க பலர் உண்டு. பண்டிகை டைம்லகூட ரெஸ்ட் கிடைக்காது. நல்ல தூக்கம்னா என்னன்னு தெரியாத நாள்கள்தான் அதிகம்.

என்னால பொதுவா அதிக சூடு தாங்க முடியாது. ஆந்திராவுல ராஜமுந்திரி கோதாவரி ஆத்துல ஷூட்டிங் நடக்கும். அங்க சுத்தமா தண்ணி இல்லாம, மணல் மட்டும்தான் இருக்கும். சித்திரை வெயில்ல செருப்பு போடாம நடிக்கிறது, டான்ஸ் ஆடுறதுனு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். சூடு தாங்க முடியாம, தண்ணியில டவலை நனைச்சு முகத்தை அடிக்கடி துடைச்சுப்பேன். சில விநாடிகள்ல முகம் உலர்ந்திடும். ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட முடியாது. இப்படிப் போச்சு அந்தக் காலம்.

‘இவர்கூட நடிக்க முடியலையே’னு நினைச்சு வருத்தப்பட்டது உண்டா?

- தனலட்சுமி கண்ணன், ராமேஸ்வரம்

அரவிந்த் சாமிகூட மட்டும்தான் நான் வொர்க் பண்ணலை. ‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ஒரு படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்தும், கால்ஷீட் பிரச்னையால் அது கைகூடலை. ‘மிஸ் பண்ணிட்டோம்’னுதான் இப்போதும் தோணும். விஜய் சார்கூட நிறைய படம் ஹீரோயினா கமிட் ஆகி, நடிக்க முடியாம போயிடுச்சு. ‘தெறி’ பட ஷூட்டிங் டைம்ல, ‘வேணும்னேதானே என்கூட நடிக்காம இருந்தீங்க’னு கேட்டுட்டு, ‘அப்போ உங்க டைரி தெரியும், சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்’னு சிரிச்சார். அவர்கூட நடிக்காத குறையைப் போக்கவே, ‘ஷாஜகான்’ படத்துல விஜய் சார்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். ‘ஃப்ரெண்ட்ஸ்’ (தேவயானி ரோல்), ‘ப்ரியமுடன்’ (கெளசல்யா ரோல்), ‘வாலி’ (சிம்ரன் ரோல்), ‘தேவர் மகன்’ (ரேவதி ரோல்), ‘படையப்பா’ (ரம்யா கிருஷ்ணன் ரோல்), ‘பொன்னுமணி’ (செளந்தர்யா ரோல்) என்று நான் கதைகேட்டு, நடிக்க முடியாம போன படங்களின் பட்டியல் ரொம்ப நீளம்.

குழந்தை நட்சத்திரங்கள் மீனா - நைனிகா... ஒப்பிடுங்க!

- ராணி சந்திரன், செங்கல்பட்டு

மீனா, சாதாரணமான ஒரு குழந்தை நட்சத்திரம். அதனால, எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு எல்லாம் இருக்காது. அவுட்டோர் ஷூட்டுக்கு, டெக்னீஷியன்ஸ் கூட்டத்துடன்தான் என்னையும் அனுப்புவாங்க. நைனிகா செலிப்ரிட்டியின் குழந்தை. அதனால ஸ்பெஷல் கவனிப்புகள் கிடைக்குது. குட்டி மேடம் தனி கார்ல ஷூட்டிங் போறாங்க. ‘தெறி’ படத்துல நைனிகா நடிச்சு முடிச்சு, முதன்முறை டப்பிங் பேச போனப்போ, அந்த இருட்டு ரூமைப் பார்த்துட்டு, ‘பேச மாட்டேன்’னு சொல்லிட்டாங்க. அப்புறம் நான் கூடவே இருந்து, எல்லாம் சொல்லிக் கொடுத்தேன். அதனால பேபி நைனிகா, பேபி மீனாவைவிட வெரி லக்கி.

குடும்பத் தலைவி மீனா எப்படி?

- தி.ராஜேஸ்வரி, நாமக்கல்

(இமைகள் படபடக்க சிரிக்கிறார்) உண்மையான பதிலை சொல்லணுமே... மாட்டிப்பேனே (மீண்டும் சிரிக்கிறார்). இப்போவரை வீட்டு நிர்வாகம் மொத்தத்தை யும் அம்மா மல்லிகாதான் பார்த்துக்கிறாங்க. என்னைச் சமைக்கச் சொல்லி கெஞ்சிக் கெஞ்சி, அம்மா டயர்ட் ஆகிட்டாங்க. ஆனாலும் நான் கிச்சனுக்குள் போறதா இல்லை. வழக்கமா, நைனிகாவை அம்மாதான் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் விடுவாங்க, சாயங்காலம் ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வருவாங்க. சமீபத்தில் ஒருநாள் அவங்களுக்கு உடம்பு சரியில்லை. டிரைவரும் லீவ். அதனால, காரை நான் டிரைவ் பண்ணிட்டு நைனிகாவை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனேன். ஸ்கூல்ல போய் காரை நிறுத்தினதும்தான், லஞ்ச் பாக்ஸை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டது தெரிஞ்சது. மறுபடியும் வீட்டுக்கு வந்து லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு போய் ஸ்கூல்ல கொடுத்துட்டு வந்தேன். மறுபடியும் ஈவினிங் போய் ரிட்டர்ன் கூட்டிட்டு வந்ததோடு... `ஹப்பாடா’னு இருந்தது. ‘ஒரு நாள் டியூட்டிக்கே இப்படி ஆகிட்டோமே, அப்போ அம்மா தினமும் இந்த வேலையோடு சேர்த்து இன்னும் எத்தனை வேலைகளைப் பண்றாங்க!’னு அம்மாவோட பொறுப்பும் சுமையும் எனக்குப் புரிஞ்சது. இனி முடிஞ்சவரை வீட்டு நிர்வாகத்தில் அம்மாவுக்கு சப்போர்ட்டிவ் வாக இருக்கணும்னு நினைச்சிருக்கேன்.

திருமண வாழ்க்கை எப்படிப் போகிறது?

ரம்யா ராகவேந்திரன், கரூர்

கல்யாணமாகி ஒன்பது வருஷங்கள் முடிஞ்சுடுச்சு. கல்யாண வாழ்க்கை, ரொம்ப நல்லா போகுது. நடிகை என்ற பிம்பத்துக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இருக்கிற இடைவெளியைச் சரியா புரிஞ்சுக்கிட்டு நடக்கிறேன். எங்க வீட்டுல நான் ஒரே பொண்ணு. அதனால, என் விஷயத்துல நான் எடுக்கிறதுதான் ஃபைனல் முடிவா இருக்கும். கல்யாணத்துக்குப் பிறகுதான், குடும்ப நிர்வாகத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுக்கணும் என்கிற சிஸ்டத்தையே தெரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்துல எனக்கும் என் கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கு. ஆனா, விஷயத்தைப் பொறுத்து டிஸ்கஸ் பண்ணி யாராச்சும் ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போகிற அழகான பண்பு எங்ககிட்ட வளர்ந்திருக்கு.

இன்ஜினீயரான என் கணவர் வித்யாசாகர், பெங்களூரு, சென்னைன்னு ரெண்டு ஊர்கள்லயும் வொர்க் பண்றாரு. அதனால நானும் மாறி மாறி டிராவல் பண்ணிக்கிட்டு, ஆக்டிங் வொர்க்கையும் பார்த்துக்கிறேன். ஹீரோயினா நடிச்சப்போ, டிரஸ் டிசைன் பண்ணித் தருவது, தலை சீவிவிடுவது, ஜூஸ் கொடுக்கிறதுனு எனக்கான வேலைகளைச் செய்ய பலர் இருப்பாங்க. அப்படி சொகுசா இருந்த வாழ்க்கையை இப்போ நினைச்சா திகட்டும். இந்த எதார்த்த வாழ்க்கையின் அழகுதான் பிடிச்சிருக்கு.

‘அம்மா’ மீனா... சூப்பர் ஹேப்பியா?

திவ்யதர்ஷினி செல்வம், பவானி

சூப்பரோ சூப்பர் ஹேப்பி! பெண் குழந்தைதான் பிறக்கணும்கிற என் ஆசைப்படியே, நைனிகா பிறந்தா. அவதான் என் உலகம். அவ குழந்தையா இருக்கும்போது ஒவ்வொரு முறை ‘அம்மா’னு மழலையில் கூப்பிடும்போதும் அவ்ளோ ரசிப்பேன். இப்போ, நைனிகா எங்க போனாலும் அவ பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஹோம்வொர்க், ப்ளே டைம், நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறது, அளவுக்கு மீறின செல்லம் கொடுக்காம தேவைப்படும் நேரத்துல கண்டிக்கிறதுனு நானும் எல்லோரையும்போல ஒரு குட் மம்மி. எக்ஸ்ட்ராவா, வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவும், பொருளாதார விஷயத்துல நிறைவாகவும் இருக்காதுனு சொல்லிச் சொல்லி வளர்க்கிறேன்.

நைனிகா சமர்த்தா, குறும்பா?

நந்தினி முத்துகிருஷ்ணன், கோவை

குறும்புத்தனம் இல்லாம குழந்தையா? அது அவங்களுக்கே உண்டான குணமில்லையா! நைனிகா... குறும்பு, பொறுப்பு, அமைதினு எல்லாம் கலந்த கலவை. ‘நீ ரொம்ப குறும்பு பண்ணுவியா?’னு யாராச்சும் அவகிட்ட கேட்டா, ‘நீங்க குழந்தையா இருந்தப்போவும் அப்படித்தானே இருந்திருப்பீங்க?’னு திருப்பிக் கேட்பா. செம வாயாடி. அதனால அவளைச் செல்லமா ‘ரவுடி’னுதான் கூப்பிடுவேன். நடிப்பால குழந்தையின் படிப்பு பாதிக்குமோனு ஆரம்பத்தில் பயந்தேன். ஆனா, கரெக்ட்டா ஹோம்வொர்க் முடிக்கிறது, கேட்டதை நடிச்சுக்கொடுக்கிறது, நான் என் வேலையில் கவனம் செலுத்த ஒத்துழைப்புத் தர்றதுனு... ‘தெறி’ பேபி ரொம்ப சமர்த்து பேபி!

நீங்கள் ஜோடியாக நடித்த ஹீரோக்களுடன், எதிர்காலத்தில் ‘தெறி’ பேபி ஜோடியாகும் வாய்ப்பு அமைந்தால, உங்கள் முடிவு என்ன?

இ.அருள்செல்வி, திண்டுக்கல்

நைனிகா நடிக்க வந்தது இப்போகூட எனக்கு ஆச்சர்யம்தான். ‘தெறி’ படத்தைப் பத்தி அட்லி பேச வந்தப்போ, என்னைத்தான் நடிக்கக் கேட்க வர்றார்னு நினைச்சேன். நைனிகாவை நடிக்கக் கேட்டதும், ஷாக் ப்ளஸ் சர்ப்ரைஸ். ‘நாலு வயசுல குழந்தைக்குச் சினிமாவைப் பத்தி என்னங்க தெரியும்? இதெல்லாம் சரியா வராது’னு சொல்லி அனுப்பிட்டேன். ஆனா, நானும் அந்த வயசுலதான் நடிக்க ஆரம்பிச்சேங்கிறதை அந்தக் கணம் மறந்துட்டேன். தொடர்ந்து அட்லி கேட்டுட்டே இருந்தார். ‘நான் சைல்ட் ஆர்ட்டிஸ்ட்தான். அதுக்காக என் பொண்ணும் அப்படியிருக்க அவசியமில்லையே’னு நிறைய குழப்பங்கள். முடிவெடுக்கப் பல நாள்கள் ஆச்சு. கடைசியில, ஞாபகார்த்தமா ஒரு படம் மட்டும் நடிக்கட்டும்னு ஒப்புக்கிட்டேன். ஆனா, இப்போ ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துலயும் நடிச்சுட்டா. எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு நம்மால யூகிக்க முடியாது. ‘ரஜினிக்கு மகளா நடிச்சுட்டு, நீங்க அவர்கூட டூயட் பாடினீங்க. அதே மாதிரி விஜய்க்கு மகளா நடிச்ச நைனிகா, ஃப்யூச்சர்ல அவர்கூட ஜோடியா நடிப்பாங்களா?’னு பலரும் கேட்கிறாங்க. இந்த அவசரக் கேள்விகளுக்கு எல்லாம் என்கிட்ட பதில் இல்லை. என் பொண்ணு அவளுக்குப் பிடிச்ச துறையில், தன் திறமையால் சாதிக்கட்டும். ஒருவேளை அது சினிமாவா இருந்தா, எங்கம்மா எனக்கு பலமா இருந்த மாதிரி நான் அவளுக்கு இருப்பேன்.

35 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

மஞ்சுளா ரவி, செஞ்சி

இந்தக் கேள்வியை கேட்டதுக்கு உங்களுக்கு நன்றி. இத்தனை வருஷம் ஆகிடுச்சு இல்ல. அதுக்கு எனக்கு ஆதரவு கொடுத்துவர்ற மக்களுக்கு நன்றி. நான் வெறும் கருவி. நான் இயங்க முழு முதல் காரணம் என் அம்மாதான். ‘நடிக்கிறது மட்டும்தான் உன் வேலை. மத்த எதையும் நீ கண்டுக்கக்கூடாது. அப்போதான் முழு ஈடுபாட்டுடன் நடிக்க முடியும்’னு சொல்லுவாங்க. எனக்குப் பாதுகாப்பு அரணாவும் இருந்தாங்க. என் வெற்றியில என்னைவிட அவங்களுக்குதான் அதிகப் பங்கு இருக்கு. அவங்க இல்லைன்னா, என் சினிமா பயணம் இவ்வளவு தூரம் வந்தடைஞ்சிருக்காது... இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது. அதனால, ‘35 வருஷமா’னு நினைச்சுப் பார்க்கும்போது என் அம்மாதான் ஞாபகம் வர்றாங்க.

நெருங்கிய தோழிகள்..?

கனிமொழி ரவீந்திரன், தூத்துக்குடி

“சங்கவி, மகேஸ்வரி, ரம்பா, ப்ரீத்தா ஹரி, சுமா, இந்திரா, ரேணு, சீதானு எனக்குச் சினிமா இண்டஸ்ட்ரி ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அடிக்கடி நாங்க மீட் பண்ணுவோம். வெளியூர் ட்ரிப் போவோம். நாங்க ஒண்ணுகூடினா ரகளை, கேலி, கிண்டல் நிறைய இருக்கும். ஆனா, அந்த கேங்லயே அமைதியான ஜீவன் நான்தான். ‘பாவம் பொண்ணு’ன்னு என்னை யாரும் கிண்டல் பண்ணமாட்டாங்க, நானும் யாரையும் கிண்டல் பண்ணமாட்டேன். ஒரு கெளரவ உறுப்பினர் மாதிரி, நடக்கிறதை எல்லாம் ரசிச்சிட்டு இருப்பேன்.

நீங்கள் அதிகம் கோபப்படுவீர்களாமே?

தி.மல்லிகா, சென்னை

கோபப்படாத மனுஷங்க இருக்காங்களா என்ன? பொதுவா நான் ரொம்ப அமைதி யான டைப்தான். ஆனா, நான் ‘நாட் ஓகே’னு நினைக்கிற விஷயங்களுக்கு ரியாக்ட் பண்ணிடுவேன். இடத்துக்குத் தகுந்த மாதிரி ஒருத்தரைப் பத்தி இன்னொருத்தர்கிட்ட தப்பா பேசுற பழக்கம் எனக்கு அறவே கிடையாது, அப்படிப் பேசறவங்களையும் பிடிக்காது; சொன்ன சொல்லை காப்பாத்தலைன்னா எனக்குக் கோபம் வரும்; நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்கலைன்னா கோபம் வரும். இப்படி என் கோபம் நியாயமானதா இருக்கும். அது அவசியமானதுதானே?

உங்களுக்கு அரசியல் ஆர்வம் உண்டா? ரஜினி, கமல்... இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு?

ஸ்ரீதேவி சுரேஷ், சுசீந்திரம்

நான் ஓரளவுக்கு அரசியல் நிகழ்வுகளை தெரிஞ்சு வெச்சுப்பேன். யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் ஆதரவைப் பெறலாம். அது ரஜினி சார், கமல் சார் இருவருக்கும் பொருந்தும். அவங்க ரெண்டு பேரும் சினிமாவைப் போல அரசியல்லயும் வெற்றி பெற வாழ்த்துகள். அரசியல்ல தனிப்பட்ட முறையில நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கமாட்டேன்.

நடிகைகளுக்குத் திருமணத்துக்குப் பிறகு முக்கியத்துவம் மறுக்கப்படுவது பற்றி..?

வே.ரஞ்சனி, சேலம்

இந்தி சினிமா உலகில் நடக்கிற மாதிரி, இப்போ நம்ம தென்னிந்திய சினிமா விலும், திருமணத்துக்குப் பிறகும் நடிகைகளுக்கு லீடு ரோல் வாய்ப்புகள் கொடுக்கிற வழக்கம் வருது. இந்த மாற்றம் ரொம்ப ஸ்லோவாக நடந்தாலும், அதை வரவேற்கணும். கல்யாணத்தைக் காரணம் சொல்லி நடிகைகளின் திறமைக்கு மதிப்புக் கொடுக்காம இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

காஸ்டிங் கவுச், மீ டூ... இந்த விஷயங்கள் எல்லாம் திரைத்துரையில் அதிகம் பேசப்படுது. இது பற்றி உங்கள் கருத்து?

இந்துமதி விக்னேஷ், தஞ்சாவூர்

ரொம்ப துயரமான விஷயம். எல்லா துறைகள்லயும் பெண்களுக்கு பிரச்னை உண்டு. நான் எதிர்கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலேயும் இந்தப் பிரச்னை இருந்தது. வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பொண்ணுகிட்ட ‘டீல்’ பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்காங்கனு உணரணும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும்.

தொகுப்பு : கு.ஆனந்தராஜ்

படங்கள் : சு.குமரேசன்