Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இலியானா. அந்த வகையில், பிங்க் நிற பிகினியில் இலியானா தண்ணீரில் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தைக் கலக்கிவருகிறது.

மிஸ்டர் மியாவ்

• ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்புக்காக உக்ரைன் சென்றிருந்தபோது, ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தன் பெற்றோரை அழைத்துச்சென்று ஊர் சுற்றிக் காட்டியிருக்கிறார் ரகுல்ப்ரீத் சிங். இதற்கு முன்னர், ஒரு தெலுங்குப் படத்துக்காக அங்கு சென்றிருந்ததால், அத்தனை இடங்களும் அம்மணிக்கு அத்துப்படியாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

தெ
லுங்கில் பவன் கல்யாண் நடித்து வெளியான ‘அத்தரிண்டிக்கி தரேடி’ படத்தின் ரீமேக்கை சுந்தர்.சி இயக்க, சிம்பு நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

• எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கான படப்பிடிப்பு, ஒருமாத காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஹீரோயின் நயன்தாரா இப்போதுதான் படக்குழுவினருடன் இணைந்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

‘சர்கார்’ படத்தின் பாடல் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டன. வெளிநாட்டவருடன் ஒரு பாடலுக்கு விஜய் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் அதிர்ச்சியில் உள்ளது படக்குழு.

மிஸ்டர் மியாவ்

• அறிமுக இயக்குநர் வினோ வெங்கடேஷ் ‘சிண்ட்ரெல்லா’ எனும் ஹாரர் படத்தை இயக்கவிருக்கிறார். இதில் ராய் லட்சுமி, இசைக்கலைஞர் வேடத்தில் நடிக்கிறார்.

• செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்த் படம் என பிஸியாக இருக்கிறார் நடிகர் சூர்யா. இவற்றைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் கமிட் ஆகியிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவிருக்கிறது. அதை, சூர்யாவின் 2டி நிறுவனம்தான் தயாரிக்கிறது.

மிஸ்டர் மியாவ்

• ‘கிகி சேலஞ்ச்’ செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான பிறகும், சிலர் அதைச் செய்துவருகின்றனர். அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த நடிகை காஜல் அகர்வாலும் நடிகர் ஸ்ரீனிவாச பெல்லம்கொண்டாவும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் காஜல். அந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

மிஸ்டர் மியாவ்

• ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்துவரும் அமலா பாலுக்கு ஆக்‌ஷன் காட்சியின்போது, தசைநார்களில் காயம் ஏற்பட்டது. இப்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார். அமலா குணமடைந்தபிறகு, மீதம் உள்ள சில காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.