பிக் பாஸ் முடிந்தவுடன் விளம்பரங்கள், திரைப் படங்கள் என பிஸியாக இருக்கும் ரைசாவின் அடுத்த படம் ‘வர்மா’. ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றியால் செம ஹாப்பி மோடில் இருந்த ரைசாவிடம் பேசினோம்.

முதல் பட ஷூட்டிங் அனுபவம்?

ஷூட்டிங்னு வந்ததும் நான் முதல்ல விட்டுக்கொடுத்தது என் தூக்கத்தைதான். சீக்கிரமே எழணும், லேட் நைட் வரைக்கும் வேலை பார்க்கணும். கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. இந்தப் படத்தின் இயக்குநர் இளனும் நடிகர் ஹரிஷும் எப்போ பார்த்தாலும் என்னைக் கலாய்ச்சுக்கிட்டே இருப்பாங்க. நானும் ஹரிஷும் எலியும் பூனையும் மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருப்போம். அதனாலேயே ஹரிஷ் கூட வேலை பார்க்கிறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. ஹரிஷ் ஒரு சீரியஸான பர்சனாலிடியா இருந்தா, நான் ஷூட்டிங் ஸ்பாட்ல எதுவுமே பேசாம ரொம்ப அமைதியா இருந்திருப்பேன். எல்லோரும் ‘நல்ல கெமிஸ்ட்ரி’னு சொல்றாங்களே... எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நல்ல புரிந்துணர்வு இருந்ததனாலதான் அது நடந்துச்சு. தவிர, டான்ஸ் கிளாஸ், ஆக்டிங் கிளாஸுக்குச் சேர்ந்து போய் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு வர்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த நொடி வரைக்கும் ரைசா சிங்கிள்தான்!

ஒரு தயாரிப்பாளரா யுவன் ஷங்கர் ராஜாவை எப்படிப் பார்க்கறீங்க?

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு யுவன் சார் குடும்பத்தோடு வருவார். அவர் மனைவிதான் இந்தப் படத்துல எனக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணியிருக்காங்க. இதுவரை யுவன் சார் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. ரொம்ப அமைதியானவர்; பாசிட்டிவ் எனர்ஜியோட இருக்கிறவர். அவர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கு. இனி எத்தனை படங்கள்ல நான் நடிச்சாலும், யுவன் சார் கம்போஸ் பண்ண என் முதல் படப் பாடல்கள்தான் ஆல்டைம் ஃபேவரைட்டா இருக்கும்!

‘பிக் பாஸ்' நிகழ்ச்சி என்ன தந்தது?

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் மெச்சூரிட்டி லெவல் அதிகமாயிருக்குனு சொல்லலாம். யார்கிட்ட எப்படிப் பேசணும், பழகணும்னு தெரிஞ்சுகிட்டேன். மக்கள்கிட்ட போய் சேர்றதுக்கான முக்கியமான அடையாளமா பிக் பாஸ்தான் இருந்துச்சு. ‘தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாது. அப்போதான் வாழ்க்கையில நிறைய கத்துக்க முடியும்’னு எனக்குச் சொல்லிக்கொடுத்ததும் பிக் பாஸ்தான்.

`பிக் பாஸ் 2' பார்க்கிறீங்களா?

வீட்ல கேபிள் கனெக்ஷன் கிடையாது. ஷூட்டிங் இருந்ததனால நேரம் கிடைக்கலை. தவிர, பிக் பாஸ் பார்த்தா ஆரம்பத்துல இருந்து பார்க்கணும். முக்கியமா, இன்னொரு தடவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டா போகவே கூடாது. ஏன்னா, மொபைல் இல்லாம வாழ்றதை நினைச்சுக்கூட பார்க்க முடியலை.

‘வர்மா’ படத்தில் என்ன ரோல்?

நடிக்க ஆரம்பிச்ச உடனேயே பாலா சார் படத்துல வாய்ப்பு கிடைக்கிறது பெரிய விஷயம். அவர் படத்துல என்ன கதாபாத்திரம் கிடைச்சாலும் பண்ணுவேன். ‘வர்மா’ படத்துல எனக்கு முக்கியமான கேரக்டர்தான் கொடுத்திருக்கார். நானும் துருவ்வும் ஷூட்டிங் நேரத்துல பேசிக்கிட்டே இருப்போம். துருவ் ரொம்ப கூல். அவர் வெளிநாட்டுல படிச்ச அனுபவம், விக்ரம் சார் பத்தியெல்லாம் என்கிட்ட நிறைய பேசியிருக்கார். இந்தப் படத்துக்காகவே லுக் அண்டு ஸ்டைலை மொத்தமா மாத்தியிருக்கார்.

பாலா சார் ஸ்பாட்ல ரொம்ப ஸ்ட்ரிக்டாமே?

இல்லவே இல்லை. அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் உள்ள இயக்குநர், பாலா சார். அவர் படத்துல உங்களுக்கு நடிக்கத் தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்ல. அவரே உங்களை அந்தக் கேரக்டரா மோல்டு பண்ணிடுவார். நிறைய செய்திகளைத் தெரிஞ்சு வெச்சிருப்பார். கொஞ்சமா பேசினாலும் நிறைவா பேசுவார்.

ரைசா குடும்பம்?

அப்பாவின் பூர்வீகம் கேரளா. வளர்ந்தது டெல்லி. அம்மாவின் சொந்த ஊரும் டெல்லிதான். காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நான் பிறந்தும் வளர்ந்ததும் ஊட்டி. ஸ்கூல் முடிக்கிற வரை அங்கேதான் இருந்தேன். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கத்துக்கிட்டேன். காலேஜ் பெங்களூருல.

படிப்பு முடிஞ்சதும் சில வருடங்கள் சேல்ஸ் உமனா வேலை பார்த்தேன். அந்த நேரத்துலதான் நண்பர்கள் உதவி யோடு மாடலிங் துறைக்கு வந்தேன்.

மிஸ் இந்தியா சவுத் 2011 அழகிப் போட்டியில கலந்துகிட்டேன். ஃபெமினா மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல் பட்டம் வென்றேன். பிறகுதான், ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்துல வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து, பிக் பாஸ். இப்போ ஹீரோயின்!

- சுஜிதா சென்

- படம் : க.பாலாஜி