இயற்கை விவசாயத்தை நேசிப்பவர் களைத் தங்கள் ‘பஃபல்லோ பேக்’ பண்ணை யின் கதவுகளை அகலத் திறந்துவைத்து அன்புடன் வரவேற்கிறார்கள் நடிகர் கிஷோரும் அவர் மனைவி விஷாலாவும். பெங்களூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரியப்பனதொட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இவர்களின் இயற்கை வசிப்பிடம்.

“எனக்குத் தமிழ்நாடு பூர்வீகம் என்றாலும், கர்நாடகாவுலதான் பிறந்து வளர்ந்தேன். அவருக்குக் கர்நாடகா பூர்வீகம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரெண்டு பேரும் பி.எஸ்ஸி விலங்கியல் படிச்சோம். யெஸ்... அவர் எனக்கு காலேஜ் சீனியர். நாங்க படிச்ச ‘நேஷனல் காலேஜ்’ல இருந்த தியேட்டர் கிளப்ல பயிற்சிபெற்ற நிறைய பேர் நாடகம், சினிமா ஆர்ட்டிஸ்ட்ஸ்னு பிரபலமடைந்திருக்காங்க. ஒரு டிராமாவில் சேர்ந்து நடிக்கும்போதுதான் இருவரும் அறிமுகமானோம்; காதலிச்சோம்’’ என்கிற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறார் விஷாலா.

“அவர் மாஸ்டர் டிகிரி படிக்கப் போனார். நான் லேப் ஆராய்ச்சி வேலைக்குப் போனேன். 1999-ல் எங்களுக்குக் கல்யாணமாச்சு. பேராசிரியர் பணி, ஃபேஷன் டிசைனிங், டிராயிங் ஆர்ட்டிஸ்ட்னு பல துறைகள்ல அவர் கவனம் செலுத்தினார். அப்புறம் கன்னட சினிமாக்களில் நடிக்க ஆரம்பிச்சார். பெரிய பிரேக் கிடைக்கலை. வருமானம் குறைவு; நிறையப் போராடினோம். ஆனா, எங்களுக்குள் இருந்த புரிந்துணர்வால் பொருளாதார அழுத்தங்களை வென்றோம். அவர் சீக்கிரமே சினிமாவில் நல்ல நிலைக்கு வருவார்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. அதுவரை குடும்பத்தைச் சிரமமில்லாம நடத்தணுமே... அதனால, நான் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் படிப்பை முடிச்சுட்டு, கார்ப்பரேட் வேலைக்குப் போனேன். அந்த நேரத்தில் அவரும் சினிமாவில் புகழ் பெற ஆரம்பிச்சார். அப்போதான், ‘இனி பணம் பிரச்னையில்லை. வாழ்க்கையில் அர்த்தமுள்ள விஷயமா என்ன செய்யலாம்?’னு சிந்திச்சோம்’’ என்கிறவர், இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்த தருணம் பற்றித் தொடர்ந்தார்.

‘`நாங்க ரெண்டு பேருமே விலங்குகளை நேசிக்கிறவங்க; ரசாயன உரத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்றா சிந்திக்கிறவங்க. அதனால இயற்கை விவசாயம் செய்ய லாம்னு முடிவெடுத்தோம். இருவரின் வருமானத்திலும் ஒரு பகுதியைச் சேமிச்சு, 2009-ல் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினோம். அடுத்த ஆறு மாதங்கள்ல என் வேலையை விட்டுட்டேன். இயற்கை விவசாயிகள் பலரைச் சந்திச்சு, இயற்கை விவசாய வழிமுறைகளைக் கத்துக்கிட்டோம். கூடவே, அவர் நடிப்பையும் தொடர்ந்தார்...’’ என்கிற விவசாயி விஷாலா, ஆரம்பகாலத்தில் எதிர்கொண்ட சவால்கள் பற்றிக் கூறுகிறார்.

“முதல் அஞ்சு வருஷங்களுக்குப் பிறகுதான் வெற்றி கிடைச்சது. இடைப்பட்ட காலத்தில் நாங்க சோர்ந்துபோகலை. ஏன்னா, லாப நோக்கத்தை முன்னிலைப்படுத்தி நாங்க விவசாயத்துக்கு வரலை. பிறகு படிப்படியா வளர்ந்து, இன்னிக்கு எட்டு ஏக்கர்ல விவசாயம் செய்றோம். அதில் சிறுதானியங்கள், ஏராளமான பழ வகை மரங்கள், காய்கறிகளை விளைவிக்கிறோம். நாட்டு மாடுகள், கோழிகளையும் வளர்க்கிறோம். வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் எங்க தோட்டம் இருப்பதால், அடிக்கடி யானைகள், காட்டுப் பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகிடுச்சு. ‘விலங்குகளை நேசிச்சுதானே வனப்பகுதி பக்கத்துல குடியேறினோம்... அந்தக் கானுயிர்களுக்கு, பேருயிர்களுக்கு உணவளிப்பதைவிட என்ன பெரிய சந்தோஷம் இருக்கு?’னு நினைச்சுப்போம்.

இடைத்தரகர் இல்லாம நேரடி விற்பனை செய்வதால், எங்களுக்கு உரிய விலை கிடைக்குது. நிறைய புதுப்புது இயற்கை யுக்திகளைப் பின்பற்றி விவசாயம் செய்றோம். சுற்றுவட்டார மக்களுக்கு ‘கிச்சன் கார்ட’னில் தங்கள் தேவைக்கான காய்கறிகளை விளைவிப்பதைக் கற்றுக் கொடுக்கிறதோடு, அதில் வருமானம் பார்க்கவும் வழிகாட்டுறோம். இதுவரை 45 குடும்பங்கள் பயனடைந்திருக்காங்க. இயற்கை ஆர்வலர்கள் பலரும் எங்க பண்ணைக்கு வந்து பயிற்சி எடுத்துட்டுப் போறாங்க. எல்லாவற்றுக்கும் அன்பு மட்டுமே கைம்மாறு. அதில் எங்களுக்கு அளவில்லா சந்தோஷம்” என்கிறார் அழகான புன்னகையுடன்.

“எங்க வீட்டில் டி.வி கிடையாது. கணவர் நடிச்ச படங்களையே செலக்டிவாகத்தான் பார்ப்பேன். அவர் நடிப்பில் கடைசியா, ‘கபாலி’ பார்த்தேன். பெரியவன் ஏழாவதும், சின்னவன் நாலாவதும் படிக்கிறாங்க. கேட்ஜெட்ஸை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவாங்க. ப்ரீ டைம்ல எல்லோருமா சேர்ந்து மரத்தடிகளில் உட்கார்ந்து கதை பேசிட்டு இருப்போம். ‘கணவரை நடிகரா பிடிக்குமா... விவசாயியா பிடிக்குமா?’னு பலரும் என்னைக் கேட்பாங்க. முதலில் மனிதராகவும், பிறகு அற்புதமான விவசாயியாகவும் பிடிக்கும். 19 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில எங்களுக்குள் காதல் கூடிட்டேதான் இருக்கு. நிறைவான ஒரு வாழ்க்கையில் கரைஞ்சிருக்கோம்’’ என்று விஷாலா சொல்ல, ஒவ்வொரு வார்த்தைக்கும் தன் மனைவியை ரசித்துக்கொண்டிருந்தார் கிஷோர்.

- கு.ஆனந்தராஜ்