Published:Updated:

`ரெளடி பேபி' சீக்ரெட்; அதகளத்துக்குத் தயாராகும் நயன்தாரா..!? #Inbox

`ரெளடி பேபி' சீக்ரெட்; அதகளத்துக்குத் தயாராகும் நயன்தாரா..!? #Inbox
`ரெளடி பேபி' சீக்ரெட்; அதகளத்துக்குத் தயாராகும் நயன்தாரா..!? #Inbox

`ரெளடி பேபி' சீக்ரெட்; அதகளத்துக்குத் தயாராகும் நயன்தாரா..!? #Inbox

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் `மாரி 2’ படத்தின் `ரெளடி பேபி’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸாகி யூடியூப்பில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்தப் பாடலின் மூலம் முதன் முதலாக தனுஷும் பிரபு தேவாவும் இணைந்திருக்கிறார்கள். இந்தப் பாடலின் சுவாரஸ்யம் குறித்து பாலாஜி மோகனிடம் பேசினோம்.

`` `ரெளடி பேபி' பாடலைக் கேட்டதும் இந்தப் பாடலுக்கு பிரபு தேவாதான் கோரியோகிராபி பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன். தனுஷ் சார்கிட்ட இதைச் சொன்னதும், அவரே பிரபுதேவா சாருக்கு போன் பண்ணி கமிட் பண்ணிட்டார். பாட்டை கேட்காமலேயே ஓகே சொல்லிட்டார் பிரபு தேவா. அப்புறம் அவருக்குப் பாட்டை அனுப்பி வெச்சோம்; ரொம்ப உற்சாகமாகிட்டார். எனக்கு பிரபுதேவா சார் வொர்க் பண்றதைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. நிறைய படங்கள் வொர்க் பண்ணி; நிறைய விருதுகள் வாங்கி, ஒரு பெரிய இடத்தில் இருக்கிறவர், சின்னச் சின்ன விஷயங்களிலும் அவரே இறங்கி வேலை பார்க்கிறார். தனுஷ் சாருக்கும், சாய் பல்லவிக்கும் ஷூட்டிங்கிற்கு முன்னாடியே ஒரு வாரம் ரிகர்ஷல் கொடுத்து, ஷாட்ல அந்த நேர்த்தியை வரவெச்சு, அந்தப் பாட்டு முடியுற வரைக்கும் அவர் அவ்வளவு ஈடுபாடோ வேலை பார்த்தார்.  அதெல்லாம் பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன். அந்தப் பாட்டு முழுக்கவே பிரபுதேவா சாரோட டச் இருக்கும். தனுஷ் சாரும் சாய் பல்லவியும் நல்ல டான்ஸரா இருந்தனால பிரபுதேவா சார் நல்லா வேலையும் வாங்கியிருக்கார்’’ என்றார்.


`மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து மூன்றாவதாக `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ராஜீவ் மேனன். இந்தப் படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் எப்படி உழைத்திருக்கிறார் என ராஜீவ் மேனனிடம் கேட்டோம்.

``ஜி.வி இந்தப் படத்துக்கு பயங்கரமா உழைச்சிருக்கார். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி உமையாள்புரம் சிவராமன் சார்கிட்ட ஒரு வருஷம் மிருதங்கம் க்ளாஸுக்கு ஜி.வி.யை அனுப்பி வெச்சேன். ஜி.வி.க்கு மிருதங்கம் சொல்லிக்கொடுறதுல உமையாள்புரம் சிவராமன் ரொம்ப ஆர்வமா இருந்தார். ஒரு நாள் லேட்டானாலும் எனக்கு போன் பண்ணி, `என்ன சார் இன்னும் ஜி.வி வரலை’னு கேட்டுடுவார். அப்பறம் நான் போன் பண்ணி, `ஜி.வி லேட் பண்ணாம சீக்கிரம் போங்க’னு சொல்லுவேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தவறாமல் ஒரு வருஷம் முழுக்க க்ளாஸுக்கு போனார் ஜி.வி’’ என்றார்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு எழுபது சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. படத்தின் பாடல் காட்சிகளையும் மற்றும் சில காட்சிகளையும் எடுக்க வெளிநாடு செல்லவிருக்கிறது படக்குழு. தவிர, சிவகார்த்திகேயனுடன் `வேலைக்காரன்' படத்தில் சின்ன ரோலில் நடித்த தம்பி ராமையா, இப்படத்தில் படம் முழுக்க வருகிறாராம். 

`உன்னைப்போல் ஒருவன்', `பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் `கொலையுதிர் காலம்'. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, யுவன் சங்கர் ராஜாவின் நிறுவனத்துக்கு பதிலாக, எட்சட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவிருக்கிறது. அஜித்துடன் இவர் நடித்த `விஸ்வாசம்’ படமும் ஜனவரி மாதம்தான் ரிலீஸாகவுள்ளது. இதைத் தொடர்ந்து, நயன்தாராவின் `ஐரா' படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

பாலிவுட் இயக்குநர் குணால் கோலி, டோலிவுட் இயக்கியிருக்கும் முதல் படம், `நெக்ஸ்ட் ஏன்ட்டி'. இதில் சந்தீப் கிஷன் - தமன்னா நடித்திருக்கிறார்கள். ரொமான்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்தை வெறும் இருபத்து நான்கு நாள்களில், ஒரே ஷெட்யூலாக எடுத்து முடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 7 ம் தேதி வெளியாக இருக்கிறது. 

`2.0' படத்தில் பக்‌ஷி ராஜன் என்ற கேரக்டரில் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஆனால், அந்தத் தோற்றத்தை, படம் ரிலீஸாகும் வரை வெளிவிடாமல் வைத்திருந்தது படக்குழு . படம் பார்த்த பிறகு, இந்தியப் பறவையியல் வல்லுநர் சலீம் அலியின் தோற்றத்திலேயே அக்‌ஷய் குமார் இருக்கிறார் என்றும் பக்‌ஷிராஜன் கேரக்டருக்கு இவர்தான் இன்ஸ்பிரேஷனோ என்றும் பல மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.    

அடுத்த கட்டுரைக்கு