தொடர்கள்
Published:Updated:

“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்!”

“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்!”

“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்!”

“கணவன் மனைவி ரெண்டுபேருமே வேலைக்குப் போறவங்க. குழந்தைகளை ஸ்கூலில் விட்டுட்டு, மனைவியை ஆபீஸில் விட்டுட்டு, கணவன் ஆபீஸுக்குப் போனதும் அவனுக்கு ஸ்கூலிலிருந்து அழைப்பு. ‘உங்க குழந்தை ரொம்ப அழறாங்க சார். வந்து அழைச்சுட்டுப் போங்க’னு சொல்றாங்க. உடனே மறுபடியும் அடிச்சுப் பிடிச்சு ஸ்கூலுக்குப் போறான். இப்படியே ஓடிக்கிட்டிருக்கிறவங்க, ஒருநாள் நிதானமா உட்கார்ந்து பேசுறாங்க. ‘நம்ம குழந்தைகளுக் காகத்தான் நாம இவ்வளவு ஓடுறோம். ஆனால், அவங்க சந்தோஷமா இல்லையே’னு சொல்லிட்டு, ‘நம்ம ரெண்டுபேரில் அதிகமாக சம்பளம் வாங்குற ஒரு ஆள் வேலைக்குப் போலாம். இன்னொருத்தர் வீட்டுல இருந்து குழந்தைகளைப் பார்க்கலாம்’னு முடிவெடுக்குறாங்க. கணவன் ஹவுஸ் ஹஸ்பண்டா ஆகுறார். இப்படி ஒரு கதையை இயக்குநர் தாமிரா சொன்னார். 

“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்!”

இன்னைக்கு வேலைக்குப் போகும் பெற்றோர்கள் படுகிற வேதனைகளைப் பதிவு பண்ணணும்னு எப்பவுமே எனக்குத் தோணும். தாமிரா அப்படி ஒரு விஷயத்தைச் சொல்லவும் உடனே `ஆண் தேவதை’ ஆரம்பமாச்சு.’’ என நிதானமாகப் பேச ஆரம்பித்தார் `ஆண்தேவதை’ சமுத்திரக்கனி.

“ஹவுஸ் ஹஸ்பண்ட்ஸ் அதிகமா இருக்கணும்னு நினைக்கிறீங்களா?”

“ஆல்ரெடி நிறைய பேர் இருக்காங்க. அவங்களோட சூழல் காரணமா ஹவுஸ் ஹஸ்பண்டா வாழ்ந்துகிட்டிருக்காங்க. ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆகுறதுக்கு கெளரவப் பிரச்னை ஒரு தடையா இருக்கு. இதெல்லாம் தாண்டி நிறைய ஆண் தேவதைகள் இருக்காங்க. அவங்க எல்லோரும் கவனிக்கப்படாம இருக்காங்க. ‘ஆண்தேவதைகள்’ படத்துல அதைத்தான் அழுத்தமா சொல்லியிருக்கோம்.’’

“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்!”

“சமுத்திரக்கனின்னா அட்வைஸ் பண்ணுவார்னு அடையாளம் வந்துச்சே. உங்களுக்கு இது பிடிச்சுதான் அதைத் தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்கீங்களா?”

“மத்தவங்க மாதிரி நானும் ஒரு எளிய மனிதன்தான். என்னைப் பொறுத்தவரை அதை அட்வைஸா பார்க்கலை; ஒரு அக்கறையாதான் பார்க்கிறேன். ஆனால், சமுத்திரக்கனின்னா அட்வைஸ்னு ஒரு பேரை இவங்களா வெச்சுட்டாங்க. இதை நான் கடமையாகத்தான் நினைக்கிறேன். மாற்றம் நாளைக்கே வந்திடாது; அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போம்னு இதைப் பண்ணிக்கிட்டிருக்கேன். கத்துனா காதுல போய் விழும்னுதான் கத்திக்கிட்டிருக்கேன். அப்படிக் கத்தியும் யாரும் திரும்பலை. அவங்க திரும்புற வரை கத்துறதுதான் என் நோக்கம்.’’

“வீட்டில் பிரசவம் பார்த்து திருப்பூரில் ஒரு பெண் இறந்தபோது, நிறைய விமர்சனங்கள் வந்தன. உங்களோட ‘அப்பா’ படத்திலும் வீட்டில் பிரசவம் பார்க்கிற மாதிரி ஒரு காட்சி வெச்சிருப்பீங்க. வீட்டில் பிரசவம் பார்ப்பது இப்போதுள்ள காலகட்டத்திற்கு சரிப்பட்டு வருமா?”

“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்!”

“சரியாப் பண்ணுனா சரிப்பட்டு வரும். கரு உருவானதில் இருந்தே வீட்டுப் பிரசவத்திற்கான வழிமுறைகளைத் தொடங்கணும். கடைசி நேரத்தில் யூட்யூப்ல பார்த்துப் பண்ணுனா, இந்த மாதிரி கஷ்டமான நிலைமையில்தான் முடியும். எங்க அம்மா காலையில விறகு வெட்ட காட்டுக்குப் போயிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு வந்து, மாட்டுக்குத் தீனி வைக்கும்போது பிரசவ வலி வந்திருக்கு. அங்கேயே பிரசவம் பார்த்து நான் பிறந்தேன். கிராமங்களில் இது ரொம்ப சாதாரணமா நடக்கிற விஷயம். நகரத்தில் இதை ரொம்பக் கடுமையாக்கிட்டோம். உடம்பை அதுக்காகத் தயார்படுத்திக்கிட்டு, ஆரம்பத்தில் இருந்தே சரியான வழிமுறைகளை ஃபாலோ பண்ணுனா, வீட்டில் பிரசவம் சாத்தியம்தான்.’’

“ ‘வடசென்னை’யில உங்க ரோல் என்ன?”

“எனக்கு சென்னைத்தமிழ் வராது. அதைச் சொல்லிக்கொடுத்து, இப்போ டப்பிங்கும் பேச வெச்சிருக்கார் வெற்றிமாறன் சார். இந்த குணா கதாபாத்திரம் வெற்றிமாறன் சார் பெற்றெடுத்த குழந்தை.’’

“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்!”

“ ஒரு பக்கம் இயக்குநராகவும் இன்னொரு பக்கம் நடிகராகவும் பிஸியா இருக்கீங்க. உங்க கரியரை எப்படிக் கட்டமைச்சுக்கணும்னு நினைக்கிறீங்க?”

“ஒரு நடிகரா இப்படித்தான் போகணும்னு எந்த பிளானும் பண்ணல. தானா நடக்குது; அதுல நான் இருக்கேன். அவ்வளவுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காலகட்டத்தில் `போதும்’கிற மனநிலை வரும். அது எனக்கு இப்போ வந்திருக்கு. இப்போ இருக்கிற படங்களை முடிச்சுட்டு ஊருக்குப் போய் விவசாயம் பண்ணலாம்னு இருக்கேன். தோணும்போது மீண்டும் படம் பண்ணுவேன். இப்படி மாத்தி, மாத்திப் பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்கேன். அதை நோக்கித்தான் நகர்ந்துகிட்டிருக்கேன்.”

மா.பாண்டியராஜன்