Published:Updated:

சினிமா துளிகள்!

சினிமா துளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா துளிகள்!

சினிமா துளிகள்!

சினிமா துளிகள்!

ரபரவென  பிஸியாக ஆரம்பித்துவிட்டார் அஜித்.  பில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கத் தயாராகிவருகிறார். டைட்டில் தேர்வு நடைபெற்று வருகிறது. 

சினிமா துளிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`சர்கார்’ ரெடி. கௌதம் மேனனுடன் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’க்கு ரெடியாகலாம் என்று பேசியிருக்கிறார்கள். ‘இப்ப விஜய் சார் ரேஞ்ச் இன்னும் உயரம். பக்காவா ரெடிபண்ணிட்டு சொல்றேன்’ என்றிருக்கிறார் கௌதம்.

சினிமா துளிகள்!

சிறுவயதிலிருந்தே பாரதிராஜா படங்கள் என்றால் விஜய்சேதுபதிக்கு மிகவும் இஷ்டம். விஜய்சேதுபதி முதியவர் வேடத்தில் நடிக்கும் சீதக்காதி படத்தில் பாரதிராஜாவும் நடிக்க இருக்கிறார். அதுவும் பாரதிராஜாவாகவே வருகிறாராம். இதனால் விசே செம உற்சாகத்தில் இருக்கிறார்!

சினிமா துளிகள்!

`எழுமின்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடிக்கொடுத்திருக்கிறார் தனுஷ். இந்தப்பாடல் பதிவை வெறும் ஒன்றரை மணிநேரத்தில் முடித்துக்கொடுத்திருக்கிறார்.

சினிமா துளிகள்!

‘கோலமாவு கோகிலா’ முதல் ஷோ முதல் காட்சிக்கு சிவகார்த்திகேயன் நண்பர்களுடன் ஆஜர். சில வருடங்களுக்கு முன் சிம்பு நடிக்க நெல்சன் இயக்கத்தில், பாதி தயாராகி நின்ற ‘வேட்டை மன்னன்’ படத்தில் நெல்சனுக்கு உதவி இயக்குநராகவும் இருந்து ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவும் செய்திருந்தார் எஸ்கே. அந்த நட்புதான் காரணம்.

சினிமா துளிகள்!

டேராடூனில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் படப்பிடிப்பு. பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சியில் பிஸியாக இருக்க, ‘கூப்பிடுங்க அவரை’ என்றார் ரஜினி. கேக் தயாராக இருக்க பீட்டர் ஹெய்னின் பர்த்டே கொண்டாட்டம் தடாலடியாக நடந்தது. நெகிழ்ந்துபோய்விட்டாராம் பீட்டர் ஹெய்ன்.

சினிமா துளிகள்!

சினிமாவில் புதிய டெக்னாலஜி எதுவந்தாலும் சடாரென்று பின்பற்றும் கமல், தன் அன்றாட நிகழ்வுகளைக் குறித்துவைக்க, காலக்குறிப்பேடாக உபயோகிப்பதென்னமோ டைரிதான். இப்போது ’மய்ய’ நிகழ்வுகளால் நிரம்பிவழிகிறதாம் அது.