தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

மிழில் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, அதர்வாவுடன் ‘பூமராங்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார், மேகா ஆகாஷ். இரண்டு படங்களிலும் தனக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும் என்பதால், தமிழ் தெலுங்கு என அடுத்து எந்தப் படமும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்துவருகிறார். இந்நிலையில் சுந்தர்.சி - சிம்பு இணையும், படத்தில் மேகாவை நடிக்க வைப்பதற்குப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சீக்கிரம் வாங்க!

இன்பாக்ஸ்

குங்ஃபூ கலைஞராக இருந்து இன்று உலகளவில் பேசப்படும் நடிகராக வளர்ந்திருப்பவர், ஜாக்கி சான். தன் வாழ்க்கை நிகழ்வுகளையும், தான் சந்தித்த மனிதர்களையும் பற்றி ‘ஜாக்கி சான் நெவர் குரோ அப், ஒன்லி கெட் ஓல்டர் (Jackie Chan: Never Grow Up, Only Get Older)’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். புத்தகத்தின்  ஐம்பதாயிரம் பிரதிகளைத் தன் தொண்டு நிறுவனம் மூலம் பீஜிங்கிலுள்ள ஒரு மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு வழங்கியுள்ளார். 
சிம்பிள் ஜாக்கி!

இன்பாக்ஸ்

1980-ல் ஆரம்பித்துத் தொடர்ந்து 20 ஆண்டுகள் பாப் உலகைக் கலக்கிய மடோனா பல கார்கள் வைத்திருந்தாலும் அவரின் மினி கூப்பர் ரொம்பவே ஸ்பெஷல். இந்தக் காரைப் பற்றி `அமெரிக்கன் லைஃப்’ எனும் ஆல்பத்தில் பாடி ஹிட்டும் அடித்தார். `ஆட்டோ டிரேடர்’ எனும் இணையதளத்தில் இந்தக் கார் இப்போது விற்பனைக்கு நிற்கிறது. இந்தக் கார் இன்னும் மடோனாவின் பெயரில் தான் இருக்கிறதாம். காரின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?  மடோனாவும் அவரின் அப்போதைய பாய் ஃப்ரெண்டு கை ரிச்சியும் `டாப் டூ பாட்டம்’ பார்த்துப் பார்த்து வடிவமைத்த கார் இது. மடோனாவின் கைபட்ட மினியின் ஆரம்ப விலை 5 கோடி... முந்துங்க முந்துங்க!

இன்பாக்ஸ்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வெப்சீரிஸாக எடுக்கப்படவுள்ளதாம். இதைத் தயாரிக்க இருப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித். தன் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இந்த வாழ்க்கை வரலாற்றைத் தயாரிக்கவிருக்கிறார் என்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வருமாம். ஷ்யூர் ஹிட்!

இன்பாக்ஸ்

‘டைட்டானிக்’, ‘தி ரீடர்’ படங்களில் நடித்த கேட் வின்ஸ்லெட் சைவ உணவுக்கு மாறிவிட்டார். மாமிச உணவுப் பழக்கத்தால் ஏற்படும் இழப்புகளைக் கூறும் ‘ஈட்டிங் அவர் வே டு எக்ஸ்டின்க்‌ஷன் (Eating Our Way to Extinction)’ என்ற ஆவணப் படத்திற்கு கேட் வின்ஸ்லெட் பின்னணிக் குரல் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார் கேட். பொறுப்பான ரோஸ்!

சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் ரஹ்மான். டிவி திரை அல்ல... வெப்சீரிஸ். ‘ஹார்மொனி’ என்கிற ரஹ்மானின் நிகழ்ச்சி ஒன்றை சுதந்திர தினம் முதல் ஒளிபரப்புகிறது ‘அமேசான் ப்ரைம்’. இதில் இந்திய இசையின் நேற்று இன்று நாளைகளை அலசுகிறார் ரஹ்மான். இந்நிகழ்ச்சியை கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி தயாரிக்க, தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியம் இயக்கியிருக்கிறார். இந்தியாவின் பாரம்பர்ய இசைக்கலைகள், இசைக்கலைஞர்கள் என நிறைய விஷயங்களை அலசப்போகிறாராம் ரஹ்மான். இணையப்புயல்

டகளப்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட உசேன் போல்ட், கால்பந்தாட்டப் போட்டிகளில் களம் காணப்போகிறார். ஆஸ்திரேலியாவின் ஏ-லீக் போட்டிகளில் சென்ட்ரல் கோஸ்ட் மரினர்ஸ் அணிக்காக விளையாடப்போகிறார் உசேன் போல்ட். கடந்த ஓராண்டாக அதற்கான கடுமையான பயிற்சிகளில் இருந்த போல்ட், கால்பந்திலும் சிறப்பாக ஆடி, பேர் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடின காலும்....

டுத்த ஆண்டு ஆஸ்கரில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். கூடுதலாக பிரபலமான படங்களுக்கான விருதுகளும் சேர்க்கப்படவுள்ளன என்று கூறியிருக்கிறார்கள். உலகின் எல்லாத் தரப்பு மக்களும் லைவாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் நேரத்தையும் மாற்றப்போகிறார்களாம். பாப்புலர் படங்களுக்கும் இனி விருதுகள் இருக்கும் என்று கூறியிருப்பதால் குஷியில் இருக்கிறது ஹாலிவுட். நாலு வாங்குறோம்!