பிரீமியம் ஸ்டோரி

• என்.டி.ராமா ராவ் வாழ்க்கை வரலாறு படத்தில், அவரின் மருமகனும், தற்போதைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கேரக்டரில்  ராணா நடிக்கவுள்ளார். ராமா ராவின் மனைவி புவனேஸ்வரியின் வேடத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

மிஸ்டர் மியாவ்

• ஓவியா நடித்துள்ள ‘90 எம்.எல்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இப்படத்தில், ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ள ஓவியாவுக்கு லிப்லாக் காட்சி ஒன்றும் உள்ளதாம்.

மிஸ்டர் மியாவ்

• பாட்டி, அம்மா, மகள் ஆகியோருடன் இருக்கும் போட்டோவை ‘ஒரே ஃப்ரேமில் நான்கு தலைமுறைகள்’ என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன். அந்த போட்டோவுக்கு ஏராளமான லைக்ஸ்!

மிஸ்டர் மியாவ்

• சல்மான் கானுடன் ‘பாரத்’ படத்தில் இணைந்துள்ளார் நடிகை கேத்ரீனா கைஃப். மால்டா, அபுதாபி, பஞ்சாப் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• நாக சைதன்யாவும் சமந்தாவும் தனித்தனியாக அவரவர் படங்களில் பிஸி. ஷிவ் நாராயணா இயக்கத்தில் இந்த ஜோடி நான்காவது முறையாக இணைந்து நடிக்கவிருக்கிறது. இப்படத்திற்கு ‘மஜிலி’ என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது.

• கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளில் ஈடுபட்டுள்ளார் அமலா பால். காயம் காரணமாகக் கையில் கட்டுடன் காணப்படும் அவர், இந்த நிலையிலேயே களத்தில் இறங்கி நிவாரணப் பொருள்கள் வாங்கிவரும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

மிஸ்டர் மியாவ்

• பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் ஆகியோர் காதலித்துவருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. பிரியங்காவின் பிறந்த நாளுக்கு வைர மோதிரம் பரிசளித்தார் நிக். இந்நிலையில் ஆகஸ்ட் 18-ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் பஞ்சாபி முறையில் நடந்தது. ‘இந்த பூமியிலேயே நான் அதிர்ஷ்டசாலி’ என நெகிழ்ந்திருக்கிறார் நிக்.

• தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்ற ‘ஆர்.எக்ஸ் 100’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆரா சினிமாஸ் பெற்றுள்ளது. அதில், ஹீரோவாக நடிக்கிறார் ஆதி. அவருக்கு ஜோடியாக நடிக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஜோடி இதற்குமுன் இரண்டு தெலுங்கு படங்களில் சேர்ந்து நடித்துள்ளது.

மிஸ்டர் மியாவ்

• ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. ரொமான்டிக் என்டர்டெயினராக உருவாகியிருக்கும் இப்படத்தில் பாக்ஸராக ஹரிஷும் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் மாணவியாக ஷில்பாவும் நடித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு