தொடர்கள்
Published:Updated:

ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்

ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்

ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்

டக்கே பாலிவுட்டிலிருந்து தெற்கே கோலிவுட் வரை இந்திய சினிமாவுக்கு இப்போது `பயோபிக் ஃபீவர்’ (Biopic) பிடித்து ஆட்டுகிறது.  மோடியிலிருந்து ஜெயலலிதா வரை பல அரசியல் பிரபலங்களின் வாழ்க்கையும், இந்தியாவை உலக அரங்கில் தெரியவைத்த விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையும் சுடச்சுட படங்களாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அவை பற்றிய சிறு அறிமுகம் இங்கே...

ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்

என்.டி.ராமாராவ்: ‘என்.டி.ஆர்’

அப்பாவைப்போலவே பிள்ளை என்பார்கள். அது கடந்த ஆகஸ்ட் 15-ல் ரிலீஸான என்.டி.ஆரின் பயோபிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிந்தது. அப்பாவின் வார்ப்பாக உருமாறியிருந்தார் அவரின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா. ‘மகாநடி’ என சாவித்ரியின் சுயசரிதைப் படத்தை இயக்கிய க்ரிஷ்,  இப்படத்தை இயக்குகிறார்.  சந்திரபாபு நாயுடுவாக ராணாவும், என்.டி.ஆரின் முதல் மனைவி பசவதம்மாவாக வித்யா பாலனும் நடிக்கிறார்கள். 2019-ல் சட்டமன்றத் தேர்தலின்போது இதை அஸ்திரமாக்கிப் பெரிய அளவில் களத்தில் இறங்க முடிவெடுத்திருக்கிறார் பாலகிருஷ்ணா. பெத்த ஐடியாலு!

பால் தாக்கரே: ‘தாக்கரே’

மும்பையைத் தனிப்பெரும் ஆளுமையாகக் கட்டுப்படுத்திப் பரபரப்பு கிளப்பிய சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயின் வாழ்க்கையைத் திரைப்படமாக அபிஜித் பன்ஸி இயக்குகிறார். பாலிவுட்டின் `நடிப்பு முகம்’ என்றழைக்கப்படும் நவாஸுதீன் சித்திக்கி அப்படியே தாக்கரேபோல உருமாறி நடித்திருக்கிறார். அடுத்த ஆண்டு ரிலீஸாகவிருக்கும் இந்தப் படத்தில் நடித்ததற்காகவே நவாஸுதீனை ஒரு பக்கம் பாராட்டவும், இன்னொரு பக்கம் கலாய்க்கவும் செய்கிறது ஒரு கும்பல். தாக்குங்க!

மன்மோகன் சிங்

 The Accidental Prime Minister


 பரபரப்பைக் கிளப்பிய சஞ்சய் பாருவின் ‘தி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்’ புத்தகத்தைத் தழுவி இப்படம் உருவாகிறது. மன்மோகன் சிங்கின் வாழ்க்கைக் கதையை எழுதி, தயாரித்து இயக்குகிறார் பாலிவுட் தயாரிப்பாளர் விஜய் ரத்னாகர். நடிப்புக்குப் பேர்போன அனுபம் கெர் மன்மோகன் சிங்காக நடிக்கிறார். தேசிய முற்போக்குக் கூட்டணியில் 2004-லிருந்து 2014 வரை  பிரதமர் பதவியை அலங்கரித்த மன்மோகன்சிங்கின் வாழ்க்கையை 360 டிகிரி அலசுகிறது இப்படம். புத்தகத்தை எழுதிய சஞ்சய் பாருவாக அக்‌ஷய் கன்னாவும், சோனியா காந்தியாக சூசான் பெர்னர்ட்டும், பிரியங்கா காந்தியாக ஆஹானாவும், ராகுல் காந்தியாக அர்ஜுன் மாத்தூரும் நடித்திருக்கிறார்கள். லண்டனில் ஷூட்டிங் முடித்து இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும்  படத்தை டிசம்பரில் ரிலீஸுக்கு ரெடி பண்ணியிருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில், ``படம் ரிலீஸாக வேண்டுமென்றால் மன்மோகன் சிங்கிடமும் ராகுல் காந்தியிடமும் தயாரிப்பாளர்  தரப்பு ‘நோ அப்ஜெக்‌ஷன் சர்டிஃபிகேட்’ வாங்கி சென்சாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்!’’ என்று சொல்லியிருக்கிறார்  சென்சார் போர்டின் தலைவர் பஹ்லஜ் நிஹலானி. ‘சைலன்ட் ஃபிலிம்’மா இருக்குமோ?’ 

ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி : ‘யாத்ரா’

ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வராக 2004-2009 வரை பதவி வகித்து ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கைப் பயணம்தான் ‘யாத்ரா’வாக உருவாகி வருகிறது.  ஒய்.எஸ்.ஆராக மம்மூட்டி நடிக்கிறார். அவர் மகன் ஜெகன்மோகன் ரெட்டி பாத்திரத்தில் நடிக்க கார்த்தியைக் கேட்டிருக்கிறார்கள். ‘பாடசாலா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கவன ஈர்ப்பைப் பெற்ற இயக்குநர் மஹி ராகவ் இப்படத்தை இயக்குகிறார். தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாகப் படமாகி வரும் ‘யாத்ரா’, ஜனவரி ரிலீஸ். மம்மூட்டிகாரு சால பாகுன்னாரு!
 
இந்திரா காந்தி

Indira: The Most Powerful Prime Minister


பத்திரிகையாளர் சஹாரிகா கோஷின் ‘India’s Most Powerful Prime Minister’ என்ற புத்தகத்தைத் திரைப்படமாக்கும் உரிமையை பாலிவுட் நடிகை வித்யா பாலன் வாங்கி வைத்திருக்கிறார். இந்திரா காந்தி ரோலில் தான் நடிக்கப்போவதாக மட்டும் சொல்லியிருக்கிறார். இயக்குநர் மற்றும் டீம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. படத்தை வெப் சீரிஸாகக் கொடுப்பதா அல்லது இரண்டரை மணிநேரத் திரைப்படமாக எடுப்பதா என இன்னும் வித்யா முடிவு செய்யவில்லை. ``காந்தி குடும்பத்திடம் அனுமதி வாங்கிட்டீங்களா?’ என மீடியாக்கள் கேட்டபோது, ``கோஷின் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படும் படத்துக்காக அவர்களிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்? மேலும், இந்திரா காந்தியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்காமல் இந்தப்படத்தை எடுக்கப்போகிறோம்’’ என்றும் பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் வித்து.  டர்ட்டி பிக்சர் மாதிரி இது பொலிடிக்கல் பிக்சர்!

லால் பகதூர் சாஸ்திரி: Tashkent

ஜனவரி 11, 1966-ல் உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கன்ட்டில் பாகிஸ்தானுடனான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டு, மாரடைப்பால் மரணமடைந்த லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கையை த்ரில்லர் பாணியில் எடுக்கப்போகி றார்கள். `ஹேட் ஸ்டோரி’ படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இந்தப் படத்தை இயக்குகிறார். ‘பாரத் கே லால்’ என்ற டைட்டிலையும் பதிவு செய்திருக்கிறது படக்குழு. 

ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்

``நாட்டின் இரண்டாவது பிரதமர் இயற்கையான முறையில்தான் மரணமடைந்தாரா என்பதைப் பற்றிய சர்ச்சை அப்போது இருந்ததை நாம் மறந்துவிட்டோம். இந்தப்படம் அதைத் தேடிக் கண்டுபிடித்துத் தரும். லால் பகதூர் சாஸ்திரியின் 51-வது நினைவு நாளுக்காக இதைச் சமர்ப்பிக்கிறோம். முழுக்க முழுக்க கிரவுடு ஃபண்டிங் முறையில் எடுக்கப் படும் படம் என்பதால், படம் பற்றிய உங்கள் யோசனைகளையும், பணத்தையும் உடனடியாக எனக்கு அனுப்பி வையுங்கள்’’ என்று அறிக்கை விட்டிருக்கிறார் விவேக் அக்னி ஹோத்ரி. மரணம்... மர்மம்!

மோடி

இன்னும் டைட்டில் வைக்கப் படாத இந்தப் படத்தை பி.ஜே.பியின் எம்.பியும் நடிகருமான பரேஷ் ராவல் நடித்து இயக்குகிறார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சஞ்சய் தத் வாழ்க்கையைப் பேசிய ‘சஞ்சு’ படத்தில் சஞ்சய் தத்தின் அப்பா சுனில் தத் ரோலில் நடித்தவர்தான் இவர். ஏற்கெனவே ‘சர்தார் வல்லபாய் படேல்’ பயோபிக்கிலும் நடித்திருக் கிறார். தன் நண்பரான அக்‌ஷய் குமாரின் உதவியோடு ஸ்கிரிப்ட்டை முடித்து அண்மையில் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அக்டோபரில் குஜராத்தில் ஷூட்டிங் ஆரம்பமாகப் போகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துதான் பரேஷ் ராவல் இந்தப் படத்தை உருவாக்கு கிறார் என்கிறார்கள். பிரசாரப் படமா இருக்குமோ?

இவர்களும் கூட

அரசியல் மட்டுமல்லாமல் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான சில நபர்களின் வாழ்க்கையும் படங்களாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்

 `ஜான்சி ராணி லட்சுமி பாய்’ வாழ்க்கையை `மணிகர்ணிகா’ என்ற பெயரில் டோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்குத் தாவி இயக்கி முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார் `பயோபிக் புகழ்’ க்ரிஷ். படத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயாகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கங்கனா ரணாவத். ஜனவரியில் ரிலீஸாகப்போகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே மிரட்டலாக இருக்கிறது.

ஷ்ரத்தா கபூர் நடிக்கும் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பயோபிக்,  பிரியங்கா சோப்ரா நடிக்கும் தடகள வீராங்கனை பி.டி.உஷா பயோபிக், டாப்ஸி நடிக்கும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் பயோபிக், தீபிகா படுகோன் நடிக்கும் பேட்மிண்டன் பி.வி.சிந்து பயோபிக் எனப் பல படங்கள் சுடச்சுட தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஸ்ரீதேவி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பல பிரபலங்களின் வாழ்க்கையும் பரிசீலனையில் இருக்கின்றன.

கபில் தேவ்: ‘83’

 சல்மான் கானின் சமீபத்திய ஹிட் படங்களான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘டியூப் லைட்’, ‘ஏக் தா டைகர்’, ‘சுல்தான்’ போன்ற படங்களின் இயக்குநர் கபிர் கான் இயக்கும் இந்தப் படத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவாக நடிக்க விருப்பது ரன்பீர் சிங். 1983-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை முதன்முதலாகப் பெற்றுத் தந்த அந்த நிமிடங்களையும் கேப்டனாக கபில் தேவ் எதிர்கொண்ட சிக்கல்களையும் இப்படம் பேசுகிறது. மிகுந்த பொருட்செலவோடு தயாராகும் இப்படத்தில் கபில் தேவின் நண்பர்களான சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ரவி சாஸ்திரி மற்றும் சந்தீப் பட்டீல் ரோல்களுக்கு ஆட்தேர்வு இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ``எனக்குக் கிடைத்த உச்சபட்ச மரியாதை ‘83’ படம்’’ என சிலாகித்திருக்கிறார் ரன்பீர். சிறப்பு!

 ஜெயலலிதா

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை `நடிகையர் திலக’மாகத் தமிழிலும் ஹிட்டடித்ததால் பயோபிக் ஃபீவர் தமிழிலும் தொற்றியுள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பயோபிக்காக எடுக்கப்போவதாக ஒரே நேரத்தில் இரண்டு பேர் அறிவித்துப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள். ஒருவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். மற்றொருவர் இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி! 

ஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்

``பெரும் ஆளுமையாக எனக்கு ஜெயலலிதா மேடத்தைப் பிடிக்கும்.  இந்தப் படத்தை ‘வைப்ரி மீடியா’ விஷ்ணுவர்தன் இந்துரியும், பிருந்தா பிரசாத்தும் தயாரிக்கிறார்கள். படத்தில் யார் நடிப்பார்கள் என்பதை முடிவெடுத்து செப்டம் பரில் அறிவிப்போம். ஸ்கிரிப்ட் வேலைகள் உட்பட முன் தயாரிப்புப் பணிகள் நிறைய இருப் பதால் யார் ஜெயா மேடம் கேரக்டரில் நடிப்பார் கள் என்பதை இப்போது உறுதியாகச் சொல்லவி யலாது’’ என்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். இவர் இப்படிச் சொன்னாலும் ஏற்கெனவே நயன்தாராவின் கால்ஷீட்டை முன்கூட்டியே 2019-க்காக வாங்கி வைத்திருக்கிறார் என்பதால் அநேகமாக நயன்தாராதான் நடிப்பார் என்கிறார்கள் கோலிவுட் மீடியேட்டர்கள்.

ஒருவேளை நயன்தாரா நடிக்கவில்லை என்றால் அவரின் சாய்ஸ் வித்யா பாலன்,  அனுஷ்கா ஆகியோரைச் சுற்றி இருக்கும். ஏனென்றால் பெரிய நடிகைகள்தாம் இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருப்பார்கள் எனவும் சொல்கிறது அந்த வட்டாரம். த்ரிஷா ஒரு பேட்டியில், ``ஜெயலலிதா பயோபிக்கில் என்னை அழைத்தால் நிச்சயம் நடிப்பேன். ஏனென்றால், நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் என்னை பிரமிக்க வைத்த பெண்மணி அவர்!’’ என்று வான்டடாக வண்டி ஏறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பிரியதர்ஷினியோ, ``நான்கு மாதங்களாக ஜெயலலிதாவின் பயோபிக்கை உருவாக்குவதற்கான பணி மும்முரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அவர் பிறந்ததினமான பிப்ரவரி 24-ல் படப்பிடிப்பு தொடங்கும். செப்டம்பர் 20-ல் அம்மா ரோலில் யார் நடிப்பார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். அதுவரை வெயிட் ப்ளீஸ்!’’ என்கிறார்.

நம்ம டெரர் டைரக்டர் ராம்கோபால் வர்மாவும் தன் பங்குக்கு, ``என் அடுத்த படம் பயோபிக்தான். அது மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா!’’ என்று திரி கொளுத்தியிருக்கிறார்.

வாழ்க்கை ஒரு பாடம் என்பார்கள். சினிமாவைப் பொறுத்தவரை இனி ஒருவரின் வாழ்க்கைதான் படம்போல!

ஆர்.சரண்