Published:Updated:

"மஹத் காட்டுல மழை..!; பிரபுதேவா ஆன் ஃபயர்" #Inbox

"மஹத் காட்டுல மழை..!; பிரபுதேவா ஆன் ஃபயர்" #Inbox
"மஹத் காட்டுல மழை..!; பிரபுதேவா ஆன் ஃபயர்" #Inbox

"மஹத் காட்டுல மழை..!; பிரபுதேவா ஆன் ஃபயர்" #Inbox

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, நடிகர் மஹத் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன், சுந்தர்.சி இயக்கத்தில் தன் நண்பர் சிம்பு நடிக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்தார். அதே நேரத்தில், அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் ரொமான்டிக் காமெடி ஜானரில் ஒரு படம், யாஷிகா ஆனந்துடன் ஹாரர் த்ரில்லர் ஜானரில் ஒரு படம் என மஹத் மிகவும் பிஸி! இது குறித்து மஹத்திடம் பேசிய போது, "ரொம்ப பயமா இருக்கு. அடுத்தடுத்து படங்கள் பண்றேன். என்ன நடக்குதுனே புரியலை. நான் என் பெஸ்டை கொடுக்கிறேன். அதுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும்" என்றார் மகிழ்ச்சியுடன்.

'கும்கி 2' படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் பிரபு சாலமன். தற்போது, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, 'காடன்' படத்தின் இரண்டாவது ஷெட்யூலை ஜனவரி மாதம் கேரளாவில் துவங்க இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். மூன்று மொழிகளிலும் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  ஷாந்தனு மொய்த்ரா எனும் பாலிவுட் இசையமைப்பாளர்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் '3 இடியட்ஸ்' படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  

2016ல் வெளியான 'தேவி' படத்திற்கு பிறகு, நடிகர் பிரபுதேவா நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 'தேவி 2', 'சார்லி சாப்ளின் 2', 'யங் மங் சங்' என பிஸியாக இருக்கிறார். தன்னிடம் இணை இயக்குநராக இருந்த முகில் இயக்கத்தில் 'பொன்.மாணிக்கவேல்' எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இதற்கிடையில், ஹரி குமார் இயக்கத்தில் 'தேள்' படத்திலும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். பிரபுதேவாவின் வருகைக்காக காத்திருக்கும் இயக்குநர் முகில், 'பொன்.மாணிக்கவேல்' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை மைசூர் பகுதியில் எடுக்க உள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு,  நரேஷ் சம்பத் இயக்கத்தில் 'ராஜபீமா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் பற்றி தெரிந்துகொள்ள ஆரவ்வை தொடர்பு கொண்டோம். "இப்படத்தில் நானும் ஆஷிமா நார்வாலும் லீட் ரோல் பண்றோம். கே.எஸ்.ரவிக்குமார் சாரும் நாசர் சாரும் முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறாங்க. இந்தப் படத்துடைய இரண்டாவது ஷெட்யூல் பொள்ளாச்சி போயிட்டு இருக்கு. இது முடிச்சிட்டு, ஒரு பெரிய இயக்குநரில் படத்தில் நடிக்க இருக்கேன். அது பத்தின அறிவிப்பு சீக்கிரம் வெளிவரும்" என்றார். 

'பாகுபலி 2' படத்திற்கு பிறகு, ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார், இயக்குநர் ராஜமெளலி. இந்தப் படத்தில் நடிகை பிரியாமணி முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார், நடிகை மஞ்சிமா மோகன். 'ஜித்தன்' ரமேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்குகிறது.  

அடுத்த கட்டுரைக்கு