Published:Updated:

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

Published:Updated:
“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

‘`என்னை, ‘டேய் ஆனந்த்’னு கூப்பிடுற யோகி பாபு அண்ணனை நான், ‘சொல்லுடா’ன்னு சொல்ற சீன். ‘அண்ணே, இப்படி நடிக்கச் சொல்றாங்க, தப்பா எடுத்துக்காதீங்க’னு அவர்கிட்ட சொன்னேன். ‘டேய்... நீ நல்லா பண்ணுடா’னு அவர் என் தோள்ல தட்டின தட்டுல, என் டென்ஷன் பாதி கரைஞ்சிடுச்சு’’ - ஷூட்டிங் மிரட்சிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன ஆனந்திடம். ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து கலக்கிய சுட்டிப்பையன். ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து, தன் முயற்சியால் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார்.

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

‘`சென்னை, அயனாவரத்துல எங்க வீடு. வீட்டுல என் பாட்டி, நான், என் தம்பி மட்டும்தான். அரசுப் பள்ளியில பதினொன்றாம் வகுப்பு படிக்கிறேன்.’’

‘` ‘கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர் சீஸன் 1’ - பற்றிச் சொல்லுங்க..?”

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”
“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

‘`ஸ்கூல்ல நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். ஒருநாள் விஜய் டி.வி ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ நிகழ்ச்சி விளம்பரம் பார்த்து, நானும், என் நண்பர்களும் அதில் கலந்துக்கணும்னு முடிவு பண்ணினோம். நாங்களே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, கிட்டத்தட்ட எட்டு பேர் ஆடிஷனுக்குப் போனோம். அதில் நானும், என் ஃப்ரெண்ட் அருணும் மட்டும் செலக்ட் ஆனோம். அவன் மூணு எபிசோடுல எலிமினேட் ஆகிட்டான். நான் ஃபைனலுக்கு முன்னாடி வரை வந்தேன்.  அந்த நிகழ்ச்சியில், நான் லேடி கெட்டப் போட்டது செம ஹிட். ஒருநாள் செட்டுல பெண் வேஷம் போடச் சொன்னாங்க. அது எனக்கு செட்டானதும், தொடர்ந்து அந்த கெட்டப்பில் நடிச்சேன்.’’

‘` ‘கோலமாவு கோகிலா’ பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?”

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

‘` ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ செட்டில் என் பர்ஃபாமன்ஸைப் பார்த்த அந்த டீம்ல இருந்த சிவா அண்ணாவும் துரை அண்ணாவும், ‘நெல்சன் ஒரு படம் பண்றார், அதில் நடிக்கிறியா?’னு கேட்டாங்க. ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. செட்டுக்குப் போனதுக்கு அப்புறம்தான், நயன்தாரா மேம்கூட நடிக்கப் போறேன்னு தெரிஞ்சது. என்னால நம்பவே முடியலை. முதல் நாள் ஷூட்டிங்கில், ரொம்ப பயந்துட்டேன். நயன்தாரா மேம், ‘ஒரு பயமும் வேண்டாம்... எப்பவும்போல கலக்குங்க’னு சொன்னாங்க. யோகி பாபு அண்ணா, ரொம்ப ஜாலியான மனுஷன். தன்னைத் தாழ்த்திக்கிட்டு காமெடி பண்றதுக்கு ஒரு கெத்து வேணும். அதை நான் அவர்கிட்ட ஆச்சர்யத்தோட ரசிச்சிட்டிருப்பேன்.”

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

‘`ஆனந்த் இப்போ ஸ்டார் ஆகிட்டாரா?”

‘`ஆரம்பத்துல, காமெடி ஷோவில் கலந்துக்கக் கிளம்பினப்போ எங்க பாட்டி ஏத்துக்கவே இல்ல. இப்போ என்னைத் தேடி நிறைய பேர் வீட்டுக்கு வர்றதையெல்லாம் பார்த்துட்டு பாட்டிக்குப் பெருமை தாங்கலை. ஸ்கூல்ல பசங்க எல்லோரும் என்னை ‘கோலமாவு’ன்னுதான் கூப்பிடுறாங்க. டீச்சர்ஸ் எல்லாம் ‘சூப்பர்டா’னு தட்டிக்கொடுக்கிறாங்க. ஒரே கொண்டாட்டம்தான். என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு நிறைய உதவிகள் பண்ணியிருக்காங்க. ‘நயன்தாரா நம்பர் கொடுடா’ன்னு கேட்கிறவங்ககிட்ட, ‘அதெல்லாம் என்கிட்ட இல்லடா’ன்னு சத்தியம் பண்ணினாலும் நம்பமாட்டேங்கிறாங்க!”

“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”
“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை!”

‘`அடுத்து என்ன?”

‘`ஆனந்த் ஐ.ஏ.எஸ். அதுக்கு என்னவெல்லாம் பண்ணணும்னு இப்போ முழுசா தெரியாது. ஆனா, தெரிஞ்சுக்கிட்டு அதுக்கான உழைப்பைக் கொடுப்பேன். என்னை மாதிரி ஏழைக் குடும்பத்துப் பசங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்.’’

வெ.வித்யா காயத்ரி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்