Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

முதல் இந்திய பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், இன்று வரை தனது ஆளுமையை அப்படியே வைத்திருப்பவர் சுஷ்மிதா சென். 25 வயதில் சிங்கிள் உமனாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தபோது, மொத்த இந்தியாவும் சுஷ்மிதாவை நிமிர்ந்து பார்த்தது. பின்னர் மீண்டும் ஒரு கைக்குழந்தையைத் தத்தெடுத்து, இடுப்பில் ஒரு குழந்தை, கையில் ஒரு குழந்தையுடன் ஃபேஷன் முதல் சினிமா வரை வலம் வந்தார் இந்த ‘மாம் யுனிவர்ஸ்.’ கடைசியாக 2014-இல் ‘நிர்பாக்’ என்னும் வங்காளப் படத்தில் நடித்த அவர், தற்போது டிஜிட்டல் திரைக்குள் தடம் பதிக்கவிருக்கிறார். ஆமாம் அவர் நடித்துக்கொண்டிருக்கும் இரண்டு டிஜிட்டல் புராஜெக்டுகளில் ஒன்றை உறுதிப்படுத்திவிட்டார். வேறெங்குமில்லை. நெட்ஃப்ளிக்ஸ்தான்... வெப் சீரிஸ்தான். வெல்கம் பேக் சுஷ்!

இன்பாக்ஸ்

லகிலேயே மிக அதிகமாகச் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் டாப் டென்னுக்குள் முன்னேறியிருக்கிறார் பி.வி.சிந்து.  ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய பட்டியலின்படி சென்ற ஆண்டு மட்டுமே 59 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார். இதில் மூன்று கோடி மட்டும்தான் சென்ற ஆண்டு விளையாடி ஜெயித்த தொகை. மீதி ஸ்பான்சர்கள் மூலம் கிடைத்தது! ஓடி ஓடி உழைக்கணும்...

இன்பாக்ஸ்

ணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ‘கனா’, விக்ரமுடன் ‘சாமி ஸ்கொயர்’ என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கோபி நயினார் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.   பிஸியோ பிஸி!

16 ஆண்டுகளுக்கு முன்பு அமிதாப் பச்சன் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் `ஆங்க் கேன்.’ இப்போது அதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். முழுக்க சீனாவிலேயே தயாராகவிருக்கும் இந்தப்படத்தில் சுஷாங்க் ராஜ்புத் மற்றும் விக்கி கௌசல் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு ஜாக்கிசானையும் நடிக்க வைக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறது படக்குழு. அபூர்வ சகோதரர்கள்!

இன்பாக்ஸ்

டந்த மாதம் வெளிவந்து டோலிவுட்டில் சக்கை போடு போட்ட தெலுங்குப் படம்  RX100. 4.2 கோடி பட்ஜெட்டில் எடுத்து 21 கோடி வசூல் செய்த இந்தப் படத்தில் முக்கிய ரோலில் வந்துபோனது யமஹா  RX100 பைக். தற்போது கேரளா வெள்ளத்தில் தத்தளிப்பதால், இந்த பைக்கை ஏலத்தில் விட்டு அதில் வரும் தொகையை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளிக்க முடிவு செய்துள்ளனர் இப்படக்குழுவினர். RX100 படக்குழுவினரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் ஹார்ட்டின்கள் குவிகின்றன. மைலேஜ் கூடுது!

இன்பாக்ஸ்

மிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ‘பிங்க்’. இப்படம் தமிழில் ‘பிங்க்’ என்ற பெயரிலேயே ரீமேக் ஆகவிருக்கிறது. அமிதாப் கேரக்டரில் நடிக்கவிருப்பது, அஜித் குமார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்குப் பிறகு, ஹெச்.வினோத் இயக்கவிருக்கும் இப்படத்தில், டாப்ஸி கேரக்டரில் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தைத் தயாரிக்கிறார். கூல் காம்போ!