‘பணம் பத்தாயிரத்து ஐந்நூற்றுப் பதின்மூன்றும் செய்யும்’ எனச் சொல்லும் முந்நூற்றுப் பதினேழாவது படமாக வந்திருக்கிறது ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்.’

வரலெட்சுமியைக் கடத்தி எட்டுக்கோடி பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் கிஷோரும் விவேக் ராஜகோபாலும். வரலெட்சுமியின் அப்பா இந்தப் பிரச்னையைக் காதும் காதும் வைத்தமாதிரி முடிவுக்குக் கொண்டுவர சத்யராஜிடம் உதவி கேட்டுச் செல்கிறார். அதன்பின் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களின் தொகுப்புதான் எ.இ.ம.ந.இடம்.

தன் வாழ்க்கையில் 15 ஆண்டுகளைச் சிறைக்குக் காவு கொடுத்த கொலைகாரனாக கிஷோர். யானைப் பசிக்குக் கிடைத்த பாப்கார்ன் கதாபாத்திரம். ஊதித் தள்ளியிருக்கிறார். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக சத்யராஜ். என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே என வசனம் பேசும் வழக்கமான சத்யராஜாகவே வருகிறார். பைக், கார் திருடனாக வரும் விவேக் ராஜகோபாலின் நடிப்பில் குறும்பட அனுபவங்கள் தெரிகின்றன. வரலெட்சுமி, கதாபாத்திரத்திற்குப் பொருத்தமில்லாத தேர்வு. யோகிபாபுவைப் பார்த்தாலே சிரிப்பவர்களின் கவனத்திற்கு... அவரும் படத்தில் இருக்கிறார்.

ஒரு கட்டத்துகுப் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் முதுகுக்குப் பின்னாலும் குழிகளைத் தோண்டு தோண்டெனத் தோண்டி, கடைசியில் அதில் படத்தைப் போட்டுப் புதைக்கிறார்கள். மிக வழக்கமான திரைக்கதை, அதை நேர்த்தியாகச் செய்ததில் மட்டுமே கவனிக்க வைக்கிறார் இயக்குநர் சர்ஜூன். கதையில் சத்யராஜ் கதாபாத்திரத்துக்கான முடிவு நச். அதுபோன்று திரைக்கதையில் நிறைய புதுமைகள் சேர்த்திருந்தால், ஒரு நேர்த்தியான படமாக மாறியிருக்கலாம்.

சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்றிப் பயணிக்கிறது. ஆனால், பாடல்கள் பல கிலோமீட்டர்கள் விலகி நிற்கின்றன. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இணைந்து செல்கின்றன.

திரைக்கதை அமைப்பதில் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருந்தால், திரையரங்கில் இன்னும் நிறைய ரசிகர்கள் நடமாடியிருப்பார்கள்!

- விகடன் விமர்சனக் குழு