சினிமா
தொடர்கள்
Published:Updated:

லக்ஷ்மி - சினிமா விமர்சனம்

லக்ஷ்மி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
லக்ஷ்மி - சினிமா விமர்சனம்

லக்ஷ்மி - சினிமா விமர்சனம்

திர்ப்புகளையும் தடைகளையும் மீறி கலையும் கலைஞனும் வெல்லும் இன்னொரு தமிழ்ப்படம்.

‘எனக்குத் தமிழ்ல பிடிக்காத வார்த்தை நடனம்’ என்றிருக்கும் அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ், ‘எனக்கு எல்லா மொழிகளிலும் பிடிச்ச வார்த்தை நடனம்’ என்றிருக்கும் மகள் தித்யா, தித்யாவுக்கு உதவும் காபி ஷாப் ஓனர் பிரபுதேவா. இவர்கள் மூவருக்கும் இடையிலான ‘ஆடு’களம்தான் கதை.

லக்ஷ்மி - சினிமா விமர்சனம்

ஷூட்டிங் முடிந்ததும் பிரபுதேவா ஃப்ரிட்ஜில் சென்று அமர்ந்துவிடுவாரோ? அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். சிறுமி தித்யா பாண்டேவைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ‘பிரபுதேவி.’  ஒவ்வொரு செல்லும் நடனமாடுகிறது. அதற்காக  அலர்ஜி ஆகும் அளவுக்கு ஆடவைத்திருக்கக் கூடாது. பப்ளி சிறுவன் அஷ்வந்த்தும், டான்ஸில் கலக்கும் அர்ஜுனும் செம சாய்ஸ். மொபைலில் பேசுவது மட்டுமே ஐஸ்வர்யா ராஜேஷின் அதிகப்படியான வேலை. தமிழ் சினிமாவுக்கு சிக்ஸ்-பேக் வைத்த, டான்ஸ் ஆடத்தெரிந்த வில்லன் கிடைத்துவிட்டார். வெல்கம் சல்மான் யூசுஃப் கான். பள்ளித் தாளாளர் சரஸ்வதியாக வரும் கோவை சரளா காமெடி என்கிற பெயரில் செய்பவை எல்லாம், இன்டெர்வெல்லில் பாப்கார்னுக்குப் பதிலாக, ‘ஒரு பாராசிட்டமால் கொடுங்களேன்’  எனக் கேட்க வைக்கிறது.

லக்ஷ்மி - சினிமா விமர்சனம்நடனங்களில் வேகம், அதற்கு நேர்மாறாகத் திரைக்கதையில் தொய்வு. தித்யாவின் அப்பா யார், யாருக்கு என்ன விபத்து ஆனது என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் படம் முடிந்தும் பதில் இல்லை. எல்லாமே சொல்லி வைத்ததுபோல் அடுத்தடுத்து நடப்பதெல்லாம் சறுக்கல்கள்.

‘ஜெயிச்சதே இல்லாத மாதிரி பிராக்டிஸ் பண்ணு, தோத்ததே இல்லாத மாதிரி பர்ஃபார்ம் பண்ணு’ போன்ற அஜயன் பாலாவின் வசனங்கள் எனர்ஜி பூஸ்டர்ஸ். சாம் சி.எஸ் இசையில் ‘மொராக்கா’ பாடல் நம் கால்களையும் ஆட வைக்கிறது. ஒவ்வொரு நடன அசைவையும் திரையில் அழகாகக் காட்டும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மிகப்பெரிய ப்ளஸ். பரேஷ் ஷிரூகூர் குழுவின் முயற்சியில் சிறுவர்களின் ஒவ்வொரு நடனமும் அப்ளாஸ் அள்ளுகிறது.

லக்ஷ்மி - சினிமா விமர்சனம்

யூகிக்கக்கூடிய திரைக்கதை, பலவீனமான ஃப்ளாஷ்பேக் இரண்டையும் சரிசெய்திருந்தால் லக்ஷ்மிக்கு சாக்லெட் மழை பொழிந்திருக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு