Published:Updated:

அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி

அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி

சிஸ்டர்ஸ்

அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி

சிஸ்டர்ஸ்

Published:Updated:
அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி

டி.டி, பி.டி சிஸ்டர்ஸுக்கு அறிமுகம் அவசியமில்லை. டி.டி வாயைத் திறந்தால் அதிரடி, சரவெடி என்றால் பி.டி அமைதி... அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி டைப்!

‘`நான் வீட்டுக்கு மூத்த பெண். அதனால எனக்கும் டி.டி-க்கும் சண்டையே வந்ததில்லை. டி.டி-யும் எங்க தம்பி சுதர்ஷனும்தான் ஒரு செட். நிறைய அடிச்சுப்பாங்க. அவங்க சண்டையை விலக்கறதுதான் என் வேலை...’’ என்கிற ப்ரியதர்ஷினிதான் முதலில் மீடியாவில் பிரபலமானவர்.

``மீடியாவுக்கு வந்தபோது நான் ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டிருந்தேன். டி.டி அப்போ அஞ்சாவது படிச்சிட்டிருந்தா. நான் ஆங்கரான ஒரு வருஷத்துல டி.டி-யும் குழந்தைகள் நிகழ்ச்சிக்கு ஆங்கர் ஆயிட்டா. ஒன்பதாவது படிச்சிட்டிருந்தபோதே விஜய் டி.வி-க்கு வந்துட்டா. சின்ன வயசுலேயே அவளுக்குனு தனி ஸ்டைல் இருந்தது. இப்போ சினிமா, டி.வி-னு அவ நிறைய பண்ணிட்டிருக்கா. எங்கே போனாலும் ‘நீங்க டி.டி-யோட சிஸ்டர்தானே’னு கேட்கறாங்க. அதைவிடவா எனக்குப் பெரிய பப்ளிசிட்டி வேணும்!’’ - தங்கை புகழ் பாடுகிற அக்காவுக்கு, மீடியாவில் இது 25-வது வருடம்!

அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்! - திவ்யதர்ஷினி, ப்ரியதர்ஷினி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அக்கா எனக்கு இன்னோர் அம்மா மாதிரி. நிறைய திட்டுவாங்க. அதைவிட அதிகமா அட்வைஸ் பண்ணுவாங்க. அவங்க எக்ஸ்பீரியன்ஸும் பக்குவமும் எனக்குப் பெரிய சப்போர்ட். முதல் முதல்ல என்னைப் பத்திக் கிசுகிசுக்கள் வந்தபோது கொஞ்சம் ஷாக்கா இருந்தது. ‘மீடியாவில் இதெல்லாம் சகஜம். உன்னைப் பத்தின செய்திகளில் உண்மையில்லாதபோது நீ அதைப் பத்திக் கவலைப்படத் தேவையில்லை. அந்தப் பக்குவம் இருந்தாதான் மீடியாவுல தாக்குப்பிடிக்க முடியும்’னு அக்காதான் எனக்குப் புரிய வெச்சாங்க. இன்னிக்குவரைக்கும் அந்த அட்வைஸை ஃபாலோ பண்றேன்...’’ - `அக்கா உடையார் விமர்சனங்களுக்கு அஞ்சார்' என்கிறது டி.டி-யின் கூற்று.

‘`டி.டி ரொம்பப் பிடிவாதம். எந்தப் பிரச்னையையும் சட்டுனு யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்க மாட்டா. சில நேரம்  ‘சொல்லித் தொலையேன்’னு உலுக்கிக் கேட்க வேண்டியிருக்கும். தன் பிரச்னையை அடுத்தவங்ககிட்ட சொல்லிக் கஷ்டப்படுத்த வேண்டாமேங்கிற எண்ணம்தான் காரணம். 

‘எந்த விஷயத்தையும் மனசுக்குள்ளே போட்டு அழுத்திக்காதே... வெளியில கொட்டிடு’னு  அவகிட்ட சொல்வேன். ஆனா கேட்க மாட்டா. அந்த வலியை நான் உணர்ந்த தருணம் உண்டு. அப்பா இறந்தபோது எனக்குக் கல்யாணமாகிடுச்சு. டி.டி அப்போ ரொம்பச் சின்னவள். என்னைவிட அவதான் அப்பாவுக்கு க்ளோஸ். அப்பா ஸ்தானத்தை யாராலயும் ஈடுசெய்ய முடியாது.  ஆனா, இழப்பை ஒவ்வொருவரும் எப்படி எடுத்துக்கறோம்கிறதைப் பொறுத்துதான் அந்த சோகத்துலேருந்து வெளியில வர்றதும் தீர்மானிக்கப்படுது. அப்பா தவறினபோது அந்த இழப்பு அவளை எவ்வளவு பாதிச்சிருக்குனு அவ அப்பல்லாம் மனம்விட்டுப் பேசினதில்லை. ஆனா, சமீபகாலத்துல அதைப் பத்தி அவ அதிகம் பேசறதைக் கேட்கறோம். அப்பா இருந்திருக்கலாம். அவளுடைய இந்த வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்க லாமேங்கிற எண்ணம் எனக்குத் தோணாத நாளே இல்லை.

அவளுடைய பர்சனல் வாழ்க்கையில நடந்த சில விஷயங்கள் அவளைவிடவும் எனக்கு அதிக வலியைக் கொடுத்திருக்கு. என்னால எதுவும் பண்ண முடியலையேனு வருத்தப்பட்டிருக்கேன். ஒருத்தருக்கு வலிக்குதுனு தெரிஞ்சா நாமளும் கஷ்டப்படுவோம். ஆனா, அதைத் தாண்டி அந்த வலியை நாம வாங்கிக்க முடியாதில்லையா... வழக்கம்போல இந்தப் பிரச்னையிலேருந்தும் அவ மீண்டு வருவாங்கிற நம்பிக்கை இருக்கு’’ - ப்ரியாவின் வார்த்தைகள் வலி உணர்த்துகின்றன.

‘`அக்காவையும் என்னையும் நான் பிரிச்சுப் பார்த்ததே இல்லை. ரெண்டு பேரும் ஒரே பிளவுஸை யூஸ் பண்ணுவோம். அளவு கரெக்டா இருக்கும். நான் கட்டிட்டு வரும் பல சேலைகளும் அக்காவுடையது தான்.

தினமும் போன் பண்ணணும், அடிக்கடி மீட் பண்ணணும்கிற மாதிரியான எந்த எதிர்பார்ப்புகளும் எங்களுக்குள்ள இருக்காது. ‘இந்த நேரம் என்கூட அக்கா இருந்தா நல்லாருக்கும்ல’னு நினைக்கும்போதே என் முன்னாடி வந்து நிற்பாங்க. அதான் அக்கா...’’ - இது `அன்புடன் டி.டி.'

`` ‘ஆல் இஸ் வெல்’ - இந்த டயலாக் டி.டி-க்குத்தான் பொருந்தும். எப்போதும் சிரிச்ச முகம்தான் அவளுடைய அடையாளம். அவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்.

ரொம்ப கேரிங்... யாருக்கு என்ன தேவைனு தெரிஞ்சு அதைச் செய்யணும்னு நினைப்பா.  தன்னைச் சுற்றி இருக்கிற எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கணும்னு நினைப்பா. அது ஓர் அப்பாவுக்கான குவாலிட்டி.’’ - இது `ப்ரியமுடன் பி.டி.'

ஆர்.வைதேகி,

படம் : சு.குமரேசன்

வாங்க பேசலாம்!

விக்னேஸ்வரி சுரேஷ்

எனக்கொரு தோழி இருக்கிறாள். பெயர் சினேகா என்று வைத்துக்கொள்வோம். அவள் அடிக்கடி சொல்வது, `அது என்னவோ தெரியலப்பா, உறவுக்காரங்கள்ல எனக்கு சிலர்கிட்டதான் பேசப் பிடிக்குது.

சிலரையெல்லாம் பார்த்துச் சிரிச்சுட்டு நகர்ந்துடுவேன். இவ்வளவுக்கும் எல்லாருமே எனக்கு வேண்டப்பட்டவங்க தான், எல்லாரும் நல்லவங்களும்தான்.'

இது பலருக்கும் நடப்பது உண்டு. நம்மிடம் பேசப் பிடிக்கிறது என்று யாராவது சொன்னால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது? இதுபோலவே, ஒரு நிகழ்வு யாரும் சொல்லாததால் நமக்குத்தான் கடைசியாகத் தெரியவருகிறது என்றாலும் மனம் உடைந்துபோகிறது.

உரையாடலும் ஒரு கலை தான். மனிதர்களைப் படிப்பதுதான் வாழ்க்கைக்கான அடிப்படை தேவை. ஆனால், அதை என்னவோ நாமே பலமுறை கீழே விழுந்து, எழுந்துதான் கற்க வேண்டியிருக்கிறது.

குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொடுக்க வேண்டிய, ஒரு கலை. அப்படிப்பட்ட விஷயங்கள்தாம் இந்த இதழிலும் அடுத்த இதழிலும் `வாங்க பேசலாம்' என்ற தலைப்பில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.