Published:Updated:

நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி

நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி

எனக்குள் நான்

நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி

எனக்குள் நான்

Published:Updated:
நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி

மிழ் சினிமாவின் `தி மோஸ்ட் ரொமான்ட்டிக் கபுள்' பட்டம் தரலாம் மணிரத்னம் - சுஹாசினி தம்பதிக்கு. சமீபத்தில் தங்களுடைய 30-வது திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். மணிரத்னத்தின் படங்களில் காதல் மெருகேறிக்கொண்டே போவதைப்போல, இவர்களின் நிஜ வாழ்விலும் காதல் வற்றாமல் இருப்பதையே 30 ஆண்டு பந்தமும் பயணமும் உணர்த்துகின்றன.

அமைதிப்படையின் தலைவராக வேலைபார்த்து, டீசரிலும் ட்ரெய்லரிலுமே எதிர்பார்ப்புகளை எகிறச்செய்யும் மந்திரக்காரர் மணிரத்னம். அவருக்குச் சற்றும் சளைக்காமல், `மெட்ராஸ் டாக்கீஸ்' பணிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப்சீரிஸ் வேலை, ஃபிலிம் ஃபெஸ்டிவல், சமூக சேவை என 24 X 7 எனர்ஜி குறையாமல் ஆக்டிவ் மோடிலேயே இருப்பவர் சுஹாசினி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவருடன் சற்றே நீளமான பேட்டி...

நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி

சுஹாசினி சாருஹாசன், சுஹாசினி மணிரத்னம், சுஹாசினியாக மட்டுமே பெருமை அடைந்த தருணம் ஏதேனும் உண்டா?

கேமரா முன்னாடி நிற்கும்போது `ஸ்டார்ட் கேமரா...' சொல்றதுல தொடங்கி `கட்' சொல்ற வரைக்கும் சாருஹாசனோ, மணிரத்னமோ, மோடியோ, ட்ரம்போ யாருமே யாரையும் காப்பாத்த முடியாது. அப்ப சுஹாசினியா மட்டுமே இருக்கணும். அதனால, நான் கேமரா முன்னாடி சுஹாசினியா மட்டும்தான் இருந்திருக்கேன்.

வாழ்க்கையில எந்த ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்போதும் `சாருஹாசன்' என்ற பெயரோ, `மணிரத்னம்' என்ற பெயரோ, `கமல்ஹாசன்' என்ற பெயரோ எதுவுமே காப்பாத்தாது. நம்மளை நாமதான் காப்பாத்திக்கணும். நம்ம வளர்ச்சிக்கு நாம மட்டும்தான் காரணம். வெற்றிக்கு வேற யார் வேணும்னாலும் காரணமா இருக்கலாம். ஆனா, தோல்விக்கு நாமதான் காரணம். வெளியில வரும்போது சுஹாசினி மட்டும்தான் எழுந்து வர முடியும். சாருஹாசனோ, மணிரத்னமோ வெளியே எடுத்துட்டு வர முடியாது.

சுஹாசினியா இருக்கிறதுல மட்டும் பெருமை இல்லை. சாருஹாசனுடைய மகளா, கமல்ஹாசனுடைய அண்ணன் மகளா, மணிரத்னத்தின் மனைவியா, நந்தனுடைய அம்மாவாக இருக்கிறதுலயும் எனக்கு ரொம்பப் பெருமை. என் குடும்பத்துல எல்லோருமே எனக்குப் பெருமைக்குரியவங்கதான்; என் அன்புக்குப் பாத்திரமானவங்கதான். அவங்க என் பக்கத்துல இருக்கும்போதும், என் பேருக்குப் பக்கத்துல இருக்கும்போதும் எனக்குப் பெருமைதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி

திரைத்துறையில் பெண் படைப்பாளிகளுக்கான இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது. சினிமாப் பின்னணியோ, அனுபவமோ இல்லாதவர்களின் நிலை வேறு. ஆனால், இரண்டும் இருந்தும் திரைத்துறையில் உங்களின்  பங்களிப்பு குறைவாக இருப்பதேன்?

நடிக்கிறேன், டி.வி-யில வர்றேன். இதெல்லாம் வேண்டாம்கிறீங்களா? டைரக்ட் பண்ணா மட்டும்தான் ஏத்துப்பீங்களா? செய்ற வேலையைப் பாராட்டாம, செய்யாததை `ஏன் செய்யலை?'னு கேட்கிறீங்களே!

இது என்னுடைய சுதந்திரம். நான் ஒரு படம் டைரக்ட் பண்ணினேன். இப்பகூட ஒரு வெப் சீரிஸுக்கு  எழுதிக்கிட்டிருக் கேன். எதையும் நான் ஆசையா செய்றனே தவிர, மத்தவங்களைத் திருப்திபடுத்துறதுக்காகச் செய்றதில்லை. நீங்க இந்தக் கேள்வியைக் கேட்டதால உடனே நான் ஃபைனான்ஸ் வாங்கி டைரக்ட் பண்ணுவேன்னு மட்டும் நினைக்காதீங்க. அது எனக்குப் பெருமையாவும் சந்தோஷமாவும் இருந்தா மட்டும்தான் செய்வேன்.

திரைத்துறையில பெண்கள் வரணும்கிறதுல மாற்றுக்கருத்தே இல்லை. அதுக்காக எல்லார் முன்னாடியும் நிக்கிறேன்னு சொல்ல முடியாது. இப்பவும் நான் டி.வி-யில நிகழ்ச்சிகள் பண்றேன். படங்கள்ல நடிக்கிறேன். ஸோ... இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படலை.

நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி

நடிப்பு, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்... இவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த துறை எது?

எனக்கு ரொம்பப் பிடிச்சது மற்ற நடிகர்களை நன்றாக நடிக்கவைப்பதுதான்.  இப்படிச் சொல்றதால என்னால நடிக்க முடியாது, இயக்க முடியாது, வசனம் எழுத முடியாது, ஒளிப்பதிவு செய்ய முடியாதுனு அர்த்தமில்லை. இதெல்லாமும் தெரியும். 

ஹீரோயின் கேரக்டர் தவிர்த்து மற்ற கேரக்டரில் நடிக்கவந்த முதல் வாய்ப்பை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருந்ததா? உங்களுடன் ஜோடியாக நடித்தவர்கள் இன்றும் ஹீரோவாகத் தொடர்வது பற்றி..?

`16 வயதினிலே' படத்துல கமலோ, ரஜினியோ ஹீரோவா இருந்தாங்களா? `அபூர்வ ராகங்கள்' படத்துல ரஜினி ஹீரோவா இருந்தாரா? இல்லையே... நாகேஷ் நடிச்ச எல்லா படங்கள்லயும் ஹீரோவா இருந்தாரா? ஹீரோயின் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் சொல்லப்போனா, இப்ப ஹீரோயினா இல்லாததால ரொம்ப சந்தோஷமா இருக்கு. கலர் கலரா டிரஸ் போட்டுட்டு, நிறைய மேக்கப் போட்டுட்டு டான்ஸ் ஆடுற வேலையெல்லாம் இல்லாம, நடிக்கிற கேரக்டர் கொடுக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு.

கமல்கூட நான் ஜோடியா நடிச்சதில்லை. ரஜினியோடு நடிச்சிருக்கேன்.  மற்றபடி என்னோடு ஹீரோவா நடிச்சு இப்பவும் ஹீரோவா நடிக்கிறவங்க மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி. இவங்கள்ல சிரஞ்சீவி அரசியலுக்குப் போயிட்டு இப்ப திரும்ப வந்திருக்கார். அவங்க எல்லாம் நடிக்கிறதைப் பார்த்து சந்தோஷமா இருக்கு. இது எப்படி இருக்குத் தெரியுமா? `நம்ம வீட்டுல கரன்ட் போனா பரவாயில்லை. ஆனா, பக்கத்து வீட்டுல கரன்ட் இருக்கக் கூடாது. கரன்ட் இருந்தா கோபப்படுவோம்'னு சொல்ற மாதிரி இருக்கு. அவங்க ஹீரோவா நடிச்சிட்டுப்போகட்டுமே... பரவாயில்லை. இது வாழ்க்கைதானே!

  •  மணி சார் படங்களின் காதல் சீக்ரெட்ஸ்...
  •  மகன் நந்தன் சினிமாவுக்குள் வருவாரா?
  •  மணி சாரின் `ஆல் உமன்' டீம் ரகசியம்...

இன்னும் பல விஷயங்களைப் பற்றி...

அடுத்த இதழிலும் பேசுகிறார் சுஹாசினி

- ஆர்.வைதேகி