தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நயன்தாராவுக்கு கோபம் பிடிக்காது!

நயன்தாராவுக்கு கோபம் பிடிக்காது!
News
நயன்தாராவுக்கு கோபம் பிடிக்காது!

ஸ்டார்

* நயன்தாரா சினிமாவுக்கு வராமலிருந் திருந்தால், சார்ட்டர்ட் அக்கவுன்டன்டாகவோ, நடனக் கலைஞராகவோ ஆகியிருப்பாராம். எட்டு வயதிலிருந்து பரதம் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தாலும், சில காரணங்களால் அரங்கேற்றம் வரை செல்ல முடியவில்லை. கூடிய விரைவில் மேடையில் பரதம் ஆட வேண்டும் என்பது நயனின் கனவுகளுள் ஒன்று!

* வீட்டிலிருப்பவர்கள் இவரைச் செல்லமாக ‘மணி’ என்றும் நட்பு வட்டாரத்தில் ‘டயானா’ என்றும் அழைக் கிறார்கள்.

* நயன்தாராவின் ஃபேஷன் பட்டியலில் அதிகம் இருப்பவை பிளாட்டினம் நகைகள், காட்டன் பட்டுப்புடவைகள் மற்றும் பிரவுன் நிற காலணிகள்.

நயன்தாராவுக்கு கோபம் பிடிக்காது!

* பயணங்களில் அதிகமாக விருப்பமில்லை என்றாலும், மன உளைச்சலில் இருக்கும் நேரங்களில் காரில் ரவுண்ட்ஸ் செல்வது இவரது ஸ்ட்ரெஸ்-பஸ்டர்களுள் ஒன்று. அப்போது ஆங்கிலப் பாடல்கள் ஒலிப்பதையே அதிகம் விரும்புகிறார் நயன்தாரா.

* “எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதைத் தாண்டி வர வேண்டும்”, “தெரியாத விஷயங்கள் பற்றி வாய் திறக்கக் கூடாது”, “தோல்விகளை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்”, “ஹ்யூமருக்கும் சீரியஸ் விஷயங்களுக்குமான வித்தியாசங்களை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்பது போன்ற அறிவுரைகளை தன் நட்பு வட்டாரத்திலுள்ளவர்களுக்கு அடிக்கடி கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்.

* சைனீஸ் மற்றும் வட இந்திய உணவு வகைகள் - குறிப்பாக ‘கச்சோரி’ இவருக்கு அதிகம் பிடிக்கும். மாதத்தில் ஒருநாள் மட்டும் இவருக்குப் பிடித்த உணவு வகைகளைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மற்ற நாள்களில் கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை மட்டும்தான் சாப்பிடுவார்.

* அதிகமாகக் கோபப்படுபவர் களையும், முதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்பவர்களையும் தன்னிடமிருந்து விலக்கி வைப்பது நயன்தாராவின் குணம்.

* நயனுக்குப் பவள மூக்குத்தி மிகவும் பிடிக்குமாம். இடதுபுறத்தில் மூக்குக் குத்தியபோது அவர் முதன்முதலில் அணிந்த மூக்குத்தி சிவப்பு நிறம் என்பதால், பவளம் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

- சுஜிதா சென்