Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘சர்கார்’ படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. தன்னுடைய பகுதிகளை மொத்தமாக நடித்துக்கொடுத்துவிட்டாராம் விஜய். சீக்கிரமே படத்தின் டப்பிங் வேலைகளையும் தொடங்கவிருக்கிறாராம். படத்தில் விஜய்க்கு முதலமைச்சர் வேடம் எனக் கிசுகிசுக்கிறார்கள். ‘தலைவா’ இப்போ ‘முதல்வா!’

இன்பாக்ஸ்

கத் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது யாஷிகாவோடு நெருங்கிப் பழகிவந்தார். இருவருக்கும் இடையே காதல் இருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனால் கோபமாக அவருடைய காதலி ப்ராச்சி சமூகவலைதளங்களில் ‘இனி எனக்கும் மகத்துக்கும் இடையில் எதுவும் இல்லை’ என்றெல்லாம் எழுதியிருந்தார். இப்போது மகத் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் ‘`எனக்கும் யாஷிகாவுக்கும் இருந்தது வெறும் ஈர்ப்புதான். மற்றபடி ப்ராச்சியும் நானும் இன்னமும் லவ்வர்ஸ்தான். வெளியே வந்தபிறகு ப்ராச்சியிடம் பேசினேன். அவர் புரிந்துகொண்டார். யாஷிகா குட்கேர்ள். ப்ராச்சிதான் மை கேர்ள்’’ எனப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஓடவும் முடியாது...

இன்பாக்ஸ்

கால்கடோட் நடித்த ‘வொண்டர் வுமன்’ திரைப்படம் உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘வொண்டர் வுமன் 1984’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் இந்திய நடிகை சௌந்தர்யா ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தியில் ‘ரான்சி டைரீஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சௌந்தர்யா ஷர்மா. இண்டியன் வொண்டர்!

இன்பாக்ஸ்

த்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்று கூறி, நாடு முழுக்க முக்கியமான ஐந்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்தது அரசு. இதையடுத்து நாடு முழுக்க இருக்கிற மாற்றுச்சிந்தனை கொண்ட இளைஞர்கள் #metoourbannaxal (நானும் நகர நக்சலே!) என்ற ஹேஷ்டேகில் இந்தக் கைதுகளை எதிர்த்து அணிதிரண்டு தங்கள் எதிர்ப்பினைப் பரவலாகப் பதிவு செய்தனர். இந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. `மத்திய அரசின் மக்கள் விரோதக் கைது நடவடிக்கைகள் மக்களின் போராடும் உரிமையைப் பறிக்கிற செயல்’ என்று கடுமையாக விமர்சித்துத் தள்ளினர். அடங்க மறு!

இன்பாக்ஸ்

ந்தியாவிலேயே முதல்முறையாக பயோ எரிபொருளில் விமானத்தை இயக்கி சாதனை செய்திருக்கிறது ‘ஸ்பைஸ் ஜெட்’. சமையல் எண்ணெய், விவசாய மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் இந்த பயோ எரிபொருள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தயாரிப்பதில் 500க்கும் அதிகமான விவசாயிகளைப் பயன்படுத்தியிருக்கிறது டேராடூனைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம். தொடர்ச்சியான விமானத்திற்கான பயோ எரிபொருள் உற்பத்தியின் மூலம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்கிறார்கள். அதோடு பயோ எரிபொருள் பயன்படுத்துவதால் விமானப்பயணங்கள் மாசற்றதாகவும், மலிவாகவும் மாறுமாம்! அட!

இன்பாக்ஸ்

‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படம் மீண்டும் தொடங்குமா, கிடப்பில் போடப்படுமா என்று தெரியாத நிலை நீடிக்க, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார், இயக்குநர் சிம்புதேவன். வெங்கட் பிரபு தயாரிக்கவிருக்கும் இப்படம், வழக்கம்போல காமெடி என்டர்டெயினராக உருவாகவிருக்கிறது. முழுக்க நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் நிறைந்த படம் என்பதால், இதில் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். அப்போ இம்சை அரசன் இல்லையா!

இன்பாக்ஸ்

‘யூ - டர்ன்’, ‘சீமராஜா’ படங்களைத் தொடர்ந்து சமந்தா ஃபேன்டஸி காமெடி படம் ஒன்றில் 70 வயது மூதாட்டியாக நடிக்கவிருக்கிறார். 2014-ஆம் ஆண்டு வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் வெற்றிபெற்ற ‘மிஸ் கிரானி’  படத்தின்  ரீமேக்தான் இப்படம். பிரபல தெலுங்குப் பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். வயசான பொன்வசந்தம்!

இன்பாக்ஸ்

விரைவில் தமிழுக்கு வரவிருக்கிறார் நஸ்ருதீன் ஷா. ஏற்கெனவே காந்தி வேடத்தில் ‘ஹேராம்’ படத்தில் நடித்திருந்தாலும் முதல்முறையாக  தமிழ்ப் படம் ஒன்றில் பிரதான பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சீக்கிரமே படம் அறிவிப்பு வெளிவரும் எனச் சொல்லப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் `உயர்ந்த மனிதன்’ படம் மூலமாக அமிதாப் பச்சனும் தமிழுக்கு வருகிறார். வாங்கண்ணா வணக்கங்கண்ணா!