‘இரும்புத்திரை’ வெற்றி விழாவுக்காக சென்னை வந்திருந்த சமந்தா, திருவல்லிக்கேணி ஜாம் பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றார். இந்தப் பணத்தை தனது ‘பிரத்யுஷா’ அமைப்பின் மூலம் நலிந்த மக்களின் மருத்துவச் செலவுக்கும், ஏழை குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் பயன்படுத்த இருக்கிறாராம். அவர் காய்கறி விற்கும் புகைப்படம், இணையத்தில் செம வைரல்!

தனது ஐம்பதாவது படமான ‘மகா’வை மிகவும் நம்பியிருக்கிறார் ஹன்சிகா. மேலும், ‘‘எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்பவர்கள் அதை மாற்றிக்கொள்ளுங்கள். கடந்த வருடம் மட்டும் 18 படங்களை மறுத்திருக்கிறேன். நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்’’ என்கிறார் அவர்.

தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ் நடித்து வெளியான ‘நின்னுக்கோரி’ படம், தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. நானி கேரக்டரில் வைபவ் நடிக்க, நிவேதா தாமஸ் கேரக்டரில் அவரையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

நயன்தாரா போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க, காஜல் அகர்வால் ஆர்வம் காட்டுகிறார். அதனால், அப்படிப்பட்ட கதைகளைக் கேட்டுவருகிறார். தெலுங்கு இயக்குநர் பானு ஷங்கர் சொன்ன ஒன் லைன் அவருக்கு மிகவும் பிடித்துள்ளதால், ஸ்க்ரிப்ட் ரெடி செய்யச் சொல்லியிருக்கிறார்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்குகிறது. நவம்பரில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில், கேமியோ ரோலில் கமல்ஹாசன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி கார்னர்

தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாக உங்களைப் பார்க்கமுடியலையே?

சுனைனா: ‘‘அப்படி எல்லாம் இல்லைங்க. ‘காளி’ படத்துக்குப் பிறகு ‘நிலா நிலா ஓடிவா’னு ஒரு வெப் சீரிஸ் நடிச்சிட்டு இருந்தேன். அதுக்கு இப்போ நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இப்போ ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துல ஒரு முக்கியமான ரோல் பண்ணியிருக்கேன். ஒரு தெலுங்கு வெப் சீரிஸ்லயும் ஒரு மலையாளப் படத்திலும் கமிட் ஆகியிருக்கேன்.’’

மும்பையில் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன், “என் பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்துகொள்ளவே ஓர் ஆண்டு பிரேக் எடுத்துக்கொண்டேன். இப்போது கதைகள் கேட்கத் தொடங்கிவிட்டேன். சீக்கிரம் பெரிய திரையில் என்னைப் பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.

சைலன்ஸ்

நாட்டிய நடிகர்மீது சுந்தரத் தெலுங்கில் நடிகை அளித்த ஏடாகூட புகாரால், நடிகரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் கொந்தளித்துக் கிடக்கிறது. ஆனால், நடிகருடன் போன வருஷம் ஒரு படத்தில் நடித்து பாதிக்கப்பட்ட நடிகை மட்டும் ஹேப்பி. மகிழ்ந்து சிரித்ததில் அவருக்கு ‘விக்கி’விட்டதாம்.

போட்டோ ஷாப்

நந்திதா

‘‘சின்ன வயசுல ஸ்கூல்ல இருந்து நந்தி ஹில்ஸுக்கு ட்ரிப் கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து வர மனசே இல்லை. ஒரு நாள் இங்கே கண்டிப்பா வந்து ரொம்ப நேரம் இருக்கணும்னு நினைச்சுட்டு வந்துட்டேன். சமீபத்துல என் ஃப்ரண்ட்ஸ் கூட இந்த இடத்துக்கு வந்து ஒரு நாள் முழுக்க இருந்தேன். அப்போ எடுத்த போட்டோதான் இது. எனக்கு எப்போவும் பிடிச்ச இடம் இந்த நந்தி ஹில்ஸ்தான். இயற்கையை ரசிச்சபடி அங்கே நின்னு விதவிதமா போட்டோ எடுக்கிறதுதான் என் ஆசை!’’