Published:Updated:

“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”
பிரீமியம் ஸ்டோரி
“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

Published:Updated:
“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”
பிரீமியம் ஸ்டோரி
“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

மீபகாலமாக சினிமா மேடைகளைவிட அரசியல் மேடைகளை அதிகமும் அலங்கரித்துக்கொண்டிருந்தார் பாரதிராஜா. ஆனால், சினிமாவையும் விடவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஓம்’ என்ற படத்தை நடித்து, இயக்கியிருக்கிறார். 

“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

“உங்கள் ஹீரோயின்கள் எல்லோருக்குமே முதல் எழுத்து ‘ஆர்’ சென்டிமென்ட் எதற்கு, ‘ஓம்’ பட நாயகியின் பெயர் ராசி நட்சத்திரா... ஏன்?”
 
“ ‘கிழக்கே போகும் ரயில்’ ஆரம்பித்து ராதிகாவுக்கு, ரதிக்கு, ராதாவுக்கு, ரஞ்சனிக்கு, ரேகாவுக்கு என்று எல்லோருக்குமே மாற்றிவிட்டேன். யாரோ பெற்ற பெண் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஆசை ஆசையாய் வைத்த பெயரை நான்பாட்டுக்கு இஷ்டத்துக்கு மாற்றுகிறேனே என்றுகூட சில சமயம் நினைப்பதுண்டு. இடையில் ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் ‘ஆர்’ இல்லாமல் சுகன்யா பெயரைச் சூட்டினேன். நான் வைக்கும் ‘ஆர்’ முதல் எழுத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கு நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை. நான் சூட்டிய அத்தனை பெயர்களும் பிரபலமாகி உச்சத்துக்குப் போனதும் உண்மை. எனக்கு ‘ஆர்’ எழுத்தில் சென்டிமென்ட் இருக்கிறதோ இல்லையோ... என்னை  நம்பி வருகிறவர்கள் நம்பிக்கையை நான் சிதைக்க விரும்பவில்லை.”

“ஒரு பக்கம் சினிமா வேலைகள். இன்னொரு பக்கம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, நீதிமன்றத்தில் வழக்கு, காவல் நிலையத்தில் கையெழுத்து... எனப் பரபரப்பாக இருக்கிறீர்களே?”

“நான் தமிழ் மக்களை சந்தோஷப்படுத்துவதற்குப் படமெடுக்கிறேன் அவ்வளவுதான். மக்கள் கொடுத்த காசில் அவர்கள் போட்ட சோற்றுக்குக் கைம்மாறாக இதுவரை என்ன செய்தேன்... தமிழ்நாடு இப்போது ஐசியூவில் இருக்கிறது. இப்போதுகூட மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கவில்லை என்றால், பிறகு எப்போதுதான் கொடுப்பது? சமூகநலன் கருதிக் குரல் கொடுத்தேன். நீதிமன்றத்தையோ, நீதிபதியையோ அவமதிக்கும் எண்ணம் எனக்குக் கடுகளவும் இல்லை. நீதிமன்ற நடைமுறைப் பழக்க வழக்கங்கள் எனக்குத் தெரியாது. என் வழக்கு வந்தபோது என் வக்கீல், ‘வர முடியாவிட்டால் பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டார். இப்போது நீதிமன்ற அவமதிப்பு என்று சொன்னவுடன்தான், ‘சமூகத்தின் ஒரு குடிமகனாக நீதிமன்ற சட்ட திட்டங்களை மதிக்கத் தவறிவிட்டேனோ!’ என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. 

“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

எனக்கு மன உளைச்சலை உண்டாக்குவதற்காக என்மேல் வழக்கு போட்டார்கள். நான் வாழ்க்கையில் பார்க்காத கஷ்டமா?  சென்னை வந்த புதிதில் தங்குவதற்கு இடமில்லாமல், பிளாட்பாரத்தில் மூன்று நாள்கள் தூங்கி, அதிகாலை 6 மணிக்கு எழுந்து தெருவோரக் குழாய்களில் பல் துலக்கி, குளித்துவிட்டு பையில் வைத்திருக்கும் துணியை மாற்றிக்கொண்டு வாய்ப்புக்காக அலைந்து திரிந்தவன் பாரதிராஜா. அதைவிட எனக்குப் பெரிய கஷ்டத்தையா கொடுத்துவிடப்போகிறீர்கள்? யாருக்காகவும் எதற்காகவும் என்னுடைய கருத்துச்சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்.”

“ `ஈழத் தமிழரின் வாழ்க்கை முறையைத் திரைப்படமாக இயக்கித் தாருங்கள்’ என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உங்களிடம் கேட்டாரே... அது இப்போது சாத்தியப்படுமா?”


“ ஈழத்தில் பிரபாகரனைச் சந்தித்தபோது, ஈழத்தமிழர் வாழ்க்கையைப் படமாக இயக்குவது குறித்து என்னிடம் கேட்டார். நான் அந்தச் சமயத்தில் தமிழில் முன்னணி இயக்குநராக இருந்த ஒருவரின் பெயரை அவரிடம் சிபாரிசு செய்தேன். பிரபாகரன் மறுத்துவிட்டார். ‘நீங்கள்தான் இயக்க வேண்டும். எங்கள் மக்களின் வலிகளைத் திரைப்பட ஆவணமாக உருவாக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

`என் மகன், மகளுக்குத் திருமணம் செய்யவேண்டிய இரண்டு கடமைகள் இருக்கின்றன. அதை முடித்துவிட்டு இலங்கைக்கே வந்து செட்டிலாகி, திரைப்படம் இயக்குகிறேன்’ என்று நான் சொன்னதும் குபீரெனச் சிரித்துவிட்டார், பிரபாகரன். `ஈழப் பிள்ளைகளுக்குத் திரைப்பட இயக்கத்தைக் கற்றுக்கொடுங்கள்’ என்று கேட்டார். ‘சினிமா ஷூட்டிங்கிற்காக நான் வெளிநாடு எல்லாம் செல்லவேண்டி இருக்கிறது’ என்று சொன்னேன். ‘எந்தநாடு என்று சொல்லுங்கள், விசா இல்லாமலேயே எங்கள் பிள்ளைகள் அங்கே வந்து நிற்பார்கள்’ என்று பதில் சொன்னார். 

“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்!”

பேசும்போது, ‘சீமான் யார்?’ என்று விசாரித்தார். நான் அதிர்ந்துவிட்டேன். பிரபாகரன் பொட்டு அம்மானை ஏறிட்டுப் பார்த்தார். உடனே தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களைப் பற்றி சீமான் பேசிய பத்திரிகைச் செய்திகளை டேபிளில் வைத்தார் பொட்டு அம்மான். ‘தமிழின மற்றும் மொழி ஆளுமையும் கொண்டவன்’ என்று சீமான் குறித்து பிரபாகரனிடம் சொன்னேன். பிறகுதான் சீமானை இலங்கைக்கே வரவழைத்துப் பார்த்தார், பிரபாகரன்.”

“ ‘ஓம்’ படத்தில் உங்கள் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க, வேறு யாரையாவது நினைத்திருந்தீர்களா?”
 
“ படத்தில் நான் நடித்துள்ள கேரக்டருக்கு முதலில் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியை யோசித்தேன். அவரிடம் கேட்கவும் செய்தேன். ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டார். ‘ஓம்’ படத்தைப் பார்க்கும்போது கண்களில் பாரதிராஜா என்கிற பிம்பத்தைச் சுமந்துகொண்டு பார்ப்பார்களோ என்றொரு எண்ணம் எனக்கு இருந்தது. இயல்பாகவே ரஃப் அண்டு டஃப் கேரக்டராக நேரில் பார்த்த டைரக்டர் பாரதிராஜாவை மறந்து, ‘பாண்டியநாடு’ ‘குரங்கு பொம்மை’ படங்களில் உலகம் தெரியாத கேணப்பயல் கேரக்டரில் மக்கள் எப்படி ரசித்தார்களோ... அதேபோன்று, ‘ஓம்’ படத்தில் நான் நடித்துள்ள கேரக்டரையும் ஏற்றுக்கொண்டு என்னை அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சினிமாவில் நடிப்பதைவிட டைரக்‌ஷன் செய்வதுதான் கம்பீரமானது; எனக்கு ரொம்பவும் பிடித்தது.”

“ ‘16 வயதினிலே’ படத்தில் ரயிலுக்காகக் காத்திருக்கும் ஸ்ரீதேவி, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ரயில் வழியே காதல் தூதுவிடும் ராதிகா, ‘முதல் மரியாதை’யில் க்ளைமாக்ஸில் ரயிலில் உயிர்விடும் ராதா... ரயிலுக்கும் உங்களுக்கும் என்ன சென்டிமென்ட்?”

“பொதுவாகவே பயணம் என்பது சுவாரஸ்யமானது. வாழ்க்கையில் எனக்கு எப்போதாவது எரிச்சல் வந்தால், உடனே  இரண்டு நாள் எங்கேயாவது பறந்துவிடுவேன். ரயில் பயணம் என்பது ஒரு சுகானுபவம். ஜன்னல் வழியே உங்கள் கண்களைத் தாண்டிச் செல்லும் மரம், செடி, நதிகள், மலைகள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, மனசுக்கு இதமாக இருக்கும். மனசுக்குள் கவலை வரும்போது ரயில் பயணம் செல்லுங்கள். அங்கே நீங்கள் காணும் காட்சிகளில் லயிக்கும்போது, உங்கள் கவலைகள் காணாமல்போய்விடும். பொதுவாக ரயிலில் செல்வது என்பது ஒரு புத்தகத்தை முழுசாய் வாசித்த அனுபவத்தைத் தரும். ஒருவேளை நான் ரயிலை அதிகம் நேசித்ததாலோ என்னவோ, என் படங்களில் அதுவும் ஒரு அங்கம் வகித்துவருகிறது.

இப்போது இயக்கியிருக்கும் ‘ஓம்’ படம்கூட ரயில் பயணம் பற்றிய கதைதான். வெளிநாட்டில் ரயில் பயணத்தில் ராசி நட்சத்திராவைச் சந்திக்கிறேன். தற்கொலை செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவளிடம், உன் உயிரை நீயே மாய்த்துக்கொள்ள உனக்கு உரிமையில்லை என்று சொல்கிறேன் அப்போதும் அவள் அடம்பிடிக்கிறாள். இறுதியாக ‘உனக்குப் பத்து நாள்கள் அவகாசம் தருகிறேன். அதற்குப் பிறகும் இந்த உலகம் உனக்குப் பிடிக்கவில்லை என்றால், நானே உன்னைச் சுட்டுக் கொல்கிறேன்’ என்று சொல்வேன். நான் கெடுவாகக் கொடுத்த பத்து நாள்களில் என்ன நடக்கிறது என்பதுதான், ‘ஓம்’ படத்தின் கதை.”

“ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவது எந்த நிலையில் இருக்கிறது?” 

“படமாக உருவாக்கும் அளவுக்குத் தகுதியுள்ள தைரியமான பெண்மணியாக வாழ்ந்தவர் ஜெயலலிதா. ஏன், எம்.ஜி.ஆர், கலைஞர் வாழ்க்கையைக்கூடத் திரைப்படமாக எடுக்கலாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், எப்படி வருகிறது, யார் வாயிலாக வருகிறது என்றெல்லாம் யோசித்த பிறகு அதுபற்றிய முடிவை எடுப்பேன்.”

எம்.குணா - படம்: ஜெ.வேங்கடராஜ்