Published:Updated:

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...
பிரீமியம் ஸ்டோரி
சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

Published:Updated:
சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...
பிரீமியம் ஸ்டோரி
சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

சீரியல் உலகின் புதுவரவுகள் இவர்கள். தங்களுடைய நடிப்பால் கவனம் ஈர்க்கத் தொடங்கியிருக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பற்றி ஒரு மினிடேட்டா!

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

‘நாயகி’ தொடரின் ஆனந்தி. தமிழ், கன்னடம் என இருபது படங்களுக்கு மேல் நடித்துவிட்டு, சின்னத்திரைப் பக்கம் வந்திருக்கிறார். தமிழில் ‘சைவம்’, ‘பசங்க 2’ படங்களில் நடித்திருக்கிறார். சொந்த ஊர் ஆலப்புழா. அப்பா மிலிட்டரியிலிருந்து ஓய்வு பெற்றவர். பயோ டெக்னாலஜி படிப்பில் டாக்டரேட் வாங்கியிருக்கும் வித்யா, சென்னையில் பிரபல கண் மருத்துவமனைக் குழுமத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் தற்போது ஜூனியர் சயின்ட்டிஸ்டும் கூட. ``ஆரம்பத்துலயே மீடியா ஆர்வம் எனக்குள்ள நிறைய இருந்துச்சு. முதலில் விளம்பரப் படங்கள், அப்படியே சினிமா, வெப் சீரிஸ்னு நகர்ந்து இப்ப சீரியல் அமைஞ்சிருக்கு. என்னைப் பொறுத்தவரை டிவி, சினிமான்னு வித்தியாசம் கிடையாது, எல்லாமே நடிப்புதான்! எது செஞ்சாலும் முழுமையா அர்ப்பணிப்போட வேலை செய்யணும்’’ என்கிறார் வித்யா.

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடர் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர் அஷ்வினி. சீரியல் ஹீரோயின்களுக்கான இலக்கணங்களை உடைத்திருப்பவர். அஷ்வினியின் சொந்த ஊர் பெங்களூரு. பருமனான பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ரியாலிட்டி ஷோ ஒன்றில் பேசப் போய், அதுவே சீரியல் வாய்ப்புக்கும் காரணமாகிவிட்டது. ``என்னோட வெயிட்டுக்குக் காரணம் ஜீன். ஆரம்பத்துல கல்யாணம் ஆகுமாங்கிற கவலை வீட்டுல உள்ளவங்களுக்கு இருந்திருக்கு. அதனால எடை குறைக்க வைக்க ரொம்ப மெனக்கெட்டாங்க. எந்த எடையைப் பார்த்து என்னைச் சுத்தி உள்ளவங்க கவலைப்பட்டாங்களோ, அந்த எடைதான் என்னை இப்போ பிரபலமாக்கியிருக்கு’’ என நம்பிக்கையுடன் பேசும் அஷ்வினிக்குத் திருமணமாகிவிட்டது. கணவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

‘பொண்ணுக்குத் தங்க மனசு’ தொடரின் நாயகி திவ்யா, பெங்களூருப் பொண்ணு. தமிழ் சின்னத்திரை ஏரியாவுக்கு இப்போதுதான் வருகிறார். பரதநாட்டிய டான்ஸர். மீடியா பின்னணி இல்லாத பிசினஸ் குடும்பத்திலிருந்து வந்தவரை ரெட் கார்ப்பெட் விரித்து வரவேற்றது, கன்னட சீரியல் உலகம். முதல் சீரியல் ஹிட் ஆக, கன்னடத்தில் ‘லுங்கி’ என்கிற படத்திலும் நடித்தார். உறவினர் ஒருவர் மூலம் தமிழ் மெகா சீரியல் வாய்ப்பு கிடைக்க, ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘`ரச்சிதா, சைத்ரான்னு எங்க ஊர்ல இருந்து வந்து இங்க சீரியல்ல சாதிச்சிட்டிருக்கிறவங்க வரிசையில என்னையும் தமிழ் சீரியல் உலகம் ஏத்துக்கும்னு நம்புறேன்’’ என்கிற ராதிகாவுக்கு, தென்னிந்தியத் திரையுலகில் ஒரு ரவுண்டு வர வேண்டுமென்பதே ஆசை.

சீரியல் வரலாற்றில் முதன்முறையாக...

லர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘வந்தாள் ஸ்ரீதேவி’ தொடர்தான் அனன்யாவுக்கு அடையாளம். மசினகுடிதான் சொந்த ஊர். அப்பா டூரிஸ்ட் கைடு. கோயம்புத்தூரில் பி.காம் முடித்துவிட்டு வேலை தேடி சென்னை வந்தார். ஐ.டி துறையில் வேலையும் கிடைத்தது. அதில் திருப்தி இல்லாமல் சினிமாவைத் தேர்ந்தெடுத்தார். ‘சினிமா சரிப்பட்டு வராது; போதும் சென்னை வாழ்க்கை’ எனக் கிளம்பி வரச்சொன்னது குடும்பம்.  அனன்யா  முயற்சியைக் கைவிடாமல் போராட ‘பைரவா’ படத்தின் மூலமே சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாருஹாசனுடன் ‘தாதா’ படத்திலும் நடித்திருக்கிறார். சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு கிடைத்த வரவேற்பைப் பார்த்து தன் நடிப்பு ஆசையை வீட்டினர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அய்யனார் ராஜன்