Published:Updated:

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

Published:Updated:
“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“நிர்பயா வழக்கும் ஹாசினி வழக்கும் என்னை ரொம்பவே பாதிச்சது. அந்த பாதிப்போட வெளிப்பாடுதான், ‘அடங்க மறு’ படம்!” - கோபமும் உற்சாகமுமாகப் பேசுகிறார், இயக்குநர் கார்த்திக் தங்கவேல். 

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“ ‘தனி ஒருவன்’, ‘போகன்’னு அடுத்தடுத்து போலீஸ் படங்கள்ல நடிச்ச ஜெயம் ரவி,  இந்தக் கதைக்கு எப்படி ஓகே சொன்னார்?”

“நான் இயக்குநர் சரண் சார்கிட்ட உதவி இயக்குநரா என் கரியரைத் தொடங்கியதே, ‘இதயத் திருடன்’ படத்துல இருந்துதான். தவிர, ரவி சார் என் காலேஜ் சீனியர். ‘கதை எனக்குப் பிடிச்சிருந்தா கண்டிப்பா பண்றேன்’னு சொன்னார். ‘சங்கமித்ரா’ படம் தொடங்க இருந்த சமயம், எந்தப் படமும் கமிட் ஆகாம இருந்தார். அப்போ இந்தக் கதையைச் சொல்லி ஓகே வாங்கி, உடனே ஷூட்டிங் போயிட்டோம். ஏற்கெனவே அவர் போலீஸ் படங்கள்ல நடிச்சிருக்கிறதால, ‘தனி ஒருவன்’, ‘போகன்’ சாயல் இந்தப் படத்துல கொஞ்சமும் இருந்திடக்கூடாதுனு ரொம்பவே மெனக்கெட்டேன். நேர்மையா இருக்கணும்னு நினைக்கிற போலீஸ்காரன், அந்தத் துறைக்கு உள்ளேயும் வெளியேயும் எப்படியெல்லாம் அவஸ்தைப்படுறான்?! அவனுக்குள்ள இருக்கிற கோபம், அவனுடைய மனநிலை... ‘அடங்கமறு’ பேசப்போற விஷயம் இவைதான்.”

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“ ‘அடங்கமறு; அத்துமீறு; திமிறி எழு; திருப்பி அடி..’ வசனங்கள் ரொம்ப ஆக்ரோஷமா இருக்கே...?” 

“விஜி சாரும் நானும் வசனம் எழுதினோம். இந்த வசனம் ஒரு அரசியல் தலைவரோட வசனம்னு சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரை, இது மக்களுக்கான பொதுவான வசனம். பெண்களை, குழந்தைகளை வன்புணர்வு பண்ணுனவங்களுக்குத் தூக்கு தண்டனை வேண்டுமா, வேணாம்கிறதே இன்னைக்கு வரைக்கும் பெரிய விவாதமாதான் போய்க்கிட்டிருக்கு. இதெல்லாம்தான் ‘அடங்கமறு’ வசனங்கள்ல எதிரொலிக்கப் போகுது. பாலியல் வன்முறைக்கு மரணதண்டனை வேணும்கிறதுதான் என் ஆணித்தரமான கருத்து!”  

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“ஹீரோயினா ராஷி கண்ணா... எப்படி செட் ஆகியிருக்காங்க?”

“ஒரு தெலுங்குப் பட நிகழ்ச்சியில பார்த்தப்பவே, நம்ம கதைக்கு இந்தப் பொண்ணு சரியா இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன். ஸ்கிரிப்ட்டை நான் முடிக்கிறதுக்குள்ள, அவங்க அங்கே டாப் ஹீரோயின் ஆயிட்டாங்க. உலகத்துல என்ன நடக்குதுனே தெரியாம, மேட்சிங்கா டிரெஸ் பண்ணிட்டு, பிங்க் கலர் ஸ்கூட்டியை வெச்சுக்கிட்டு, கார்ட்டூன் சேனல்கள் பார்க்கிற ஹீரோயின்களைத் தான் தமிழ்சினிமா அதிகமா காட்டியிருக்கு. ஆனா, உண்மையிலேயே பெண்கள் அப்படியில்லை. ‘அடங்கமறு’ படத்துல ராஷி கண்ணா இன்டீரியர் டிசைனரா நடிச்சிருக்காங்க. நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு உறுதுணையா இருக்கிற மெச்சூர்டான பொண்ணா வர்றாங்க.” 

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“ஷூட்டிங் எங்கெல்லாம் நடந்துச்சு... ஸ்பாட்ல நடந்த சுவாரஸ்யங்கள்?” 

“மொத்தப் படமும் சென்னையிலதான் ஷூட் பண்ணுனோம். அண்ணா நகர் ரோட்டுல ஷூட்டிங் பண்ண அனுமதி வாங்க சிரமமா இருந்தது. போலீஸ்காரங்ககிட்ட காட்சிகளைச் சொல்லித்தான், அனுமதி கேட்டோம். ‘படத்துல எங்களைத் திட்டப்போறீங்களோ?’னு கேட்டாங்க. ‘ஆமா, சார். உங்க டிபார்மென்ட்ல இருக்கிற மோசமான ஆபீஸர்களைத் திட்டுறோம்’னு சொன்னேன். அவங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன், ஷூட்டிங் முடியும் வரை பாதுகாப்பு கொடுத்தாங்க. நடிகர், தயாரிப்பாளர்கிட்ட கதையைச் சொன்னதை விட, போலீஸ்கிட்ட கதை சொன்னதுதான் எனக்கு சுவாரஸ்யமா இருந்தது.” 

“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”
“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்!”

“ஜெயம் ரவியோட மாமியார்தான், படத்துக்குத் தயாரிப்பாளர். இது உங்களுக்கு ஈஸியா இருந்ததா?”

“ஒரு சீன்ல பத்துப் பேர் இருக்கணும்னு சொன்னா, ‘ஏன், நூறு பேர் இருக்கக்கூடாதா... நல்லா இருக்கும்ல!’னு கேட்பாங்க. என்ன பண்ணுனாலும் பிரமாண்டமா இருக்கணும்னு நினைக்கிற தயாரிப்பாளர். நான்தான் எதார்த்தமா இருக்கணும்னு சொல்லி, கதைக்குத் தேவையானதை மட்டும் வாங்கிக்கிட்டேன். மருமகனை வெச்சு முதல் படத்தைத் தயாரிக்கிறதால அவங்களுக்கு ஆர்வம் அதிகம். படம் நல்லா வர எதுவும் பண்ணத் தயாரா இருந்தாங்க. அதுவே எனக்குப் பெரும் பலமா இருந்தது.”

மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய்ச் சிரிக்கிறார்.

உ.சுதர்சன் காந்தி