Published:Updated:

" 'If you're Bad; I am your Dad' பன்ச் செஞ்சது யாரு?" - 'மாரி 2' சீக்ரெட்ஸ்  

" 'If you're Bad; I am your Dad' பன்ச் செஞ்சது யாரு?" - 'மாரி 2' சீக்ரெட்ஸ்  

'மாரி 2' சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்கிறார், படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன்.

" 'If you're Bad; I am your Dad' பன்ச் செஞ்சது யாரு?" - 'மாரி 2' சீக்ரெட்ஸ்  

'மாரி 2' சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்கிறார், படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன்.

Published:Updated:
" 'If you're Bad; I am your Dad' பன்ச் செஞ்சது யாரு?" - 'மாரி 2' சீக்ரெட்ஸ்  

னுஷ் நடித்த 'மாரி 2' படத்தின் ட்ரெய்லர் வைரல் ஹிட்! முதல் பாகத்தில் இல்லாத சாய் பல்லவி, வரலக்ஷ்மி, கிருஷ்ணா, டொவினோ தாமஸ் எனப் பல புது வரவுகள். ரவுடி பேபி, மாரி vs மாரி 2 மீம்ஸ், If your Bad I am your Dad பன்ச், தனுஷின் சிக்ஸ்பேக்... எனப் படத்திற்கான வரவேற்பு பாசிட்டிவாக இருப்பதில் குஷியில் இருக்கிறார்கள், படக் குழுவினர்.

படத்தைப் பற்றி பேச டைரக்டர் பாலாஜி மோகனுக்கு அலைபேசினால், ரவுடி பேபி காலர்டோனில் வரவேற்றுக் கலகலப்பாகப் பேசுகிறார். சாய் பல்லவி மற்றும் வரலக்ஷ்மி தேர்விலிருந்து, தனுஷின் டயலாக் டெலிவரி வரை பதினைந்து நிமிடங்களில் பரபரவென பல சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"ட்ரெய்லருக்கு செம ரெஸ்பான்ஸ்... சந்தோஷமா?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ரொம்ப சந்தோஷம்! எல்லோருக்கும் ட்ரெய்லர் பிடிக்கும்னு தெரியும். ஆனா, இவ்ளோ பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்காததுதான். படத்துக்கும் இதே ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நம்பிக்கை இருக்கு." 

"மாரி vs மாரி 2 மீம்ஸ் பற்றி உங்க கருத்து?"

"எட்டு வருடத்துக்கு முன்னாடினு ட்ரெய்லர் தொடக்கத்துல இருந்து சில ஒற்றுமைகளைத் தெரிஞ்சேதான் சேர்த்தோம். இரண்டு படங்களுக்கான தொடர்பு அது. 'மாரி' முதல் பாகத்தை ஞாபகப்படுத்துற விஷயமும் இருக்கணும், அதேசமயம் அதை வித்தியாசப்படுத்தியும் காட்டணும்னு நினைச்சுதான் இதைப் பண்ணோம். ஆனா, அதையும் தாண்டி 'மாரி 2' இன்னும் கொஞ்சம் சீரியஸான, எமோஷனலான  படம். அழுத்தமான திரைக்கதை இருக்கு. சீரியஸான சாய் பல்லவியோட லவ் டிராக் இருக்கு. பல கதாபாத்திரங்கள் இருக்கு. முக்கியமா, கிருஷ்ணாவோட கேரக்டர்." 

"வரலக்ஷ்மி கதாபாத்திரத் தோற்றம் வேற படத்தை நினைவுபடுத்துதே?"

"வரலக்ஷ்மி திறமையான நடிகை. 'சண்டக்கோழி', 'சர்கார்' படங்களுக்கு முன்னாடியே, 'மாரி 2' படத்துல அவங்களைக் கமிட் பண்ணோம். அந்த இரண்டு படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் அவங்களுக்கு இந்தப் படத்துல இருக்கு. நேர்மையான, தைரியமான அரசு அதிகாரியாக நடிச்சிருக்காங்க. துரதிர்ஷ்டவசமா, 'சர்கார்' வரலட்சுமிக்கும், 'மாரி 2' வரலட்சுமிக்கும் உடையில் கொஞ்சம் ஒற்றுமை இருக்கு. ஆனா, படம் பார்த்தா, அது வேற, இது வேறனு புரிஞ்சிடும்." 

"If your Bad; I am your Dad, ரவுடி பேபி, செஞ்சிருவேன்... இப்படியான பன்ச் வசனங்களை எப்படிப் பிடிக்கிறீங்க?"

" 'செஞ்சிருவேன்' பன்ச் 'மாரி'யில ஹிட் ஆனது, எதிர்பார்க்காம நடந்ததுதான். ஆனா, பழைய வசனத்தைப் இந்தப் படத்துல பயன்படுத்தக் கூடாதுனு நான் உறுதியா இருந்தேன். 'If your Bad; I am your Dad' வசனம், திரைக்கதை எழுதும்போதே எழுதியதுதான். ரொம்ப சிம்பிளான டயலாக். ஆனா, அதை ஸ்பெஷலா மாத்துனது தனுஷ் சார். அந்த டயலாக் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எப்படி அதைச் சொல்லப் போறார்னு நானும் ஆர்வமாதான் இருந்தேன். இரண்டு புருவத்தைத் தூக்கி அவர் செம மாஸ் பெர்பாமன்ஸ் கொடுத்தார். அதுதான் ட்ரெய்லர்ல ஹைலைட். அந்த வசனத்தை டப்ஸ்மாஷ், டிக் டாக்ல பலரும் பயன்படுத்துறாங்க. டிரெண்டிங்ல இருக்கிறது ரொம்ப சந்தோஷம். ரவுடி பேபி, தனுஷ் சாரோட  வார்த்தை. அந்தப் பாடலுக்கு வரிகள் எழுதும்போது, 'ரவுடி பேபி'னு எழுதினார். எங்களுக்கும் அது பிடிச்சதால, படத்துல சேர்த்துக்கிட்டோம்." 

"குறும்படம் டூ சினிமாவுக்கு வந்த முதல் நபர் நீங்க. தமிழில் வெப் சீரிஸை அறிமுகப்படுத்துனதிலும் முன்னோடி. அடுத்து என்ன?" 

" 'As I am Suffering from காதல்' என் வெப் சீரிஸ். அதோட முதல் சீசன் வைரல் ஹிட். வெப் சீரிஸுக்கு நல்ல ஒரு தளம் இருக்கும்னு தெரிஞ்சுதான் அதைப் பண்னேன். 'மாரி 2' ரிலீஸூக்குப் பிறகு, 'As I am Suffering from காதல்' சீஸன் 2-தான் என் பிளான். தவிர, அடுத்த படத்துக்கான கதையையும் ரெடியா வெச்சிருக்கேன். எது சரியா இருக்குமோ, அதைச் செய்வேன்." 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism