பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

சுனைனா

சி
ன்ன வயசிலிருந்து இப்போ வரை என் பெஸ்ட் ஃபிரெண்ட் காயத்ரி. ஸ்கூல் காலத்திலிருந்து தோழி. அவ கல்யாணத்துல எடுத்த போட்டோதான் இது. அவள் கல்யாணத்துக்குப் போனதுல, என்னவோ என் தங்கச்சி கல்யாணத்துல இருந்த ஃபீலிங். என் லைஃப்ல இந்த போட்டோ ஆல் டைம் ஃபேவரைட்!

மிஸ்டர் மியாவ்

• இயக்குநராக அடுத்த படத்துக்கு தனுஷ் ரெடி. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா,    எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். 

மிஸ்டர் மியாவ்

• ‘இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை’ என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, ‘இதுதான் உண்மையான சுதந்திரம்’ என ஸ்ரேயா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் ‘லவ் இஸ் லவ்’, ‘லவ் வின்ஸ்’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் ஓரினச் சேர்க்கையாளர்களின் அடையாளமான வானவில் கொடியைப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

மிஸ்டர் மியாவ்

• ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மலையாளப் படத்தின் மூலம் நிவின் பாலிக்கு ஹீரோயினாக அறிமுகமான மஞ்சிமா மோகன், பிறகு தமிழ்ப் படங்களில் பிஸியாகிவிட்டார். தற்போது மீண்டும், ‘மைக்கேல்’ எனும் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

• ராம் சரண் - கியாரா அத்வானி நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பை அஜர்பைஜானில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் ஓபராயும் பிரஷாந்தும் நடிக்கின்றனர். அஜர்பைஜானில் எடுக்கும் முதல் தெலுங்குப் படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

என்ன படிச்சிருக்கீங்க?

நடிப்பு தவிர உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகம்?


மஹிமா நம்பியார்:

இப்போ எம்.ஏ இங்கிலீஷ் படிச்சுட்டு இருக்கேன். நடிக்கிறதைத் தவிர எனக்கு டான்ஸ் பிடிக்கும். முறைப்படி க்ளாசிக்கல் டான்ஸ் பயிற்சி எடுத்திருக்கேன். ஆனா, இதுவரை எனக்கு நல்லா டான்ஸ் பண்றதுக்கான வாய்ப்பு சினிமாவில கிடைக்கலை. ஒரு படத்துலயாவது ஹை எனர்ஜியுடன் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்னு ரொம்ப ஆசை.

மிஸ்டர் மியாவ்

• ‘சாஹோ’ படத்துக்குப் பிறகு, பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிறது இந்தப்படம். 

• விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிய இயக்குநர் மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ படத்தில், தன் போர்ஷனை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி. தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துவரும் இவர், அடுத்து விஜய்சந்தர் இயக்கும் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார்.

சைலன்ஸ்

லக டான்ஸர் பெயரைக் கொண்ட தயாரிப்பாளர் படத்தில் நடித்தபோது, படப்பிடிப்புக்கே வராமல் டிமிக்கி கொடுத்தார் வம்பு நடிகர். ‘துட்டு’ டைரக்டரின் ஆகாயப் படத்துக்கு மட்டும் கரெக்டாக ஆஜராகி நடித்துக்கொடுத்ததைப் பார்த்து கடுப்பில் கதகளி ஆடுகிறார், டான்ஸ் தயாரிப்பு. அதனால், ஏற்கெனவே நடிகர்மீது புகார் கொடுத்த கவுன்சிலில், மீண்டும் பஞ்சாயத்து வைக்கச் சொல்லியிருக்கிறாராம்.

ன்னர் டைட்டில் படத்தில் கண்டிப்பாக நடிக்க முடியாது என முரண்டு பிடிக்கிறார் புயல் காமெடி. விஷயம் பஞ்சாயத்துக்குப் போனது. இப்போது, ‘‘குலதெய்வம் கோயிலில் போய் உத்தரவு கேட்கிறேன். சாதகமாக வந்தால் நடிக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு