Published:Updated:

நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்

நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்
பிரீமியம் ஸ்டோரி
நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்

பேட்டி-2

நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்

பேட்டி-2

Published:Updated:
நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்
பிரீமியம் ஸ்டோரி
நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்

‘தெறி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படங்களில் சுட்டித்தனமான நடிப்பால் லைக்ஸ் அள்ளியவர், நைனிகா. படிப்பு, நடிப்பு இரண்டிலும் கலக்கும் க்யூட் பேபியுடன் ஒரு ஜாலி சந்திப்பு. 

“நைனிகாவுக்குப் பிடிச்ச விஷயங்கள் என்னென்ன?”

“விளையாட ரொம்பப் பிடிக்கும். காலையில் எழுந்ததுமே அம்மாகிட்ட, ‘விளையாடலாமா மம்மி?’னு கேட்பேன். ‘காலங்காத்தால ஆரம்பிச்சுட்டீயா?’னு செல்லமா கோபிச்சுப்பாங்க. விளையாட்டோடு ஆரம்பிச்சா, அது எனக்கு சூப்பரான நாளாக அமையும்.”

“பிடிச்ச விளையாட்டுகள்...”

“பேட்மிட்டன், ஹைடு & ஸீ.”  

நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்

“நைனிகா, சமத்துப் பொண்ணா, குறும்புப் பொண்ணா?”

(அம்மா மீனாவைப் பார்த்து சிரித்தபடியே) “ரெண்டும்தான். சின்ன வயசுல ஸ்கூல் முடிஞ்சு வந்ததுமே, டிவி பார்ப்பேன். இப்போ ஸ்கூல்விட்டு வந்து, குளிச்சுட்டு, ஹோம்வொர்க் பண்ணிட்டுத்தான் டிவி பார்க்கிறேன். அப்போ நான் சமத்துப் பொண்ணுதானே! சம் டைம் குறும்பு பண்ணுவேன். ஐஸ்கிரீம் கேட்டு, கேம் விளையாட, டிவி பார்க்க, அடிஷனலா தூங்கிறதுக்கு...  இதுக்காக மட்டும் என்னைக் குறும்பு பொண்ணுனு சொல்லக்கூடாதுதானே!’’

“படிப்பில் எப்படி?”

“நல்லா படிப்பேன். முன்னாடியெல்லாம் சரியா ஹோம்வொர்க் பண்ண மாட்டேன். இப்போ பெரிய கிளாஸ் வந்துட்டேனில்லையா? கரெக்ட்டா பண்ணிடறேன்.”

“செலிப்ரிட்டி பொண்ணு. செலிப்ரிட்டி குழந்தை என உங்களுக்கு ஸ்கூல்ல ஸ்பெஷல் கவனிப்பு இருக்கா?”

“இல்லவே இல்லை. என் படம் நல்லா இருந்தா பாராட்டுவாங்க. நான் சரியா படிக்கலைன்னா, தப்பு செஞ்சா கண்டிப்பாங்க. அம்மாகிட்டயும் கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க. ஸ்கூல்ல எல்லோர்கிட்டயும் இயல்பாதான் பழகுவேன்.”

“படிப்பைத் தவிர, வேற என்னென்ன ஆக்டிவிடிஸ்ல கவனம் செலுத்துறீங்க?”

“பெயின்ட்டிங், டான்ஸ்ல இன்ட்ரஸ்ட் இருக்கு. அதுக்காக கிளாஸ் போறேன்.”

“அம்மா அடிப்பாங்களா?”

“சம் டைம் அடிப்பாங்க. என்னை அடிக்கிறதுக்கு அவங்க யூஸ் பண்ற ஸ்டிக்கை மறைச்சுவெச்சுடுவேன். நான் சினிமாவில் நடிக்கிறேன்ல. கன்னத்துல மட்டும் அடிக்க மாட்டாங்க. அதனால், அவங்க அடிக்க வர்றப்போ, கன்னத்தைக் காட்டிட்டே இருப்பேன். சிரிச்சுட்டே போய்டுவாங்க. எப்படி என் பிளான்?’’ (சிரிக்கிறார்).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நைனிகா... சமர்த்தா, குறும்பா? - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்

“அம்மா நடிச்சதில் எந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்?”

“ ‘அன்புள்ள ரஜினிகாந்த்’.”

“அடிக்கடி எந்த ஊருக்கு டிராவல் பண்ணுவீங்க?”

“பெங்களூரு. அங்கேதான் அப்பா இருக்கார். திருவனந்தபுரம், மஸ்கட் போவோம். அங்கே சொந்தக்காரங்க இருக்காங்க.”

“எதிர்காலத்தில் என்னவாக ஆசை?”

“சயின்டிஸ்ட்.”

“பிடிச்ச படங்கள்?”

“ ‘முனி’, ‘காஞ்சனா’, ஹாலிவுட் ஹாரர் மூவீஸ் ரொம்பப் பிடிக்கும்.”

“பிடிச்ச கார்ட்டூன் கேரக்டர்ஸ்?”

“டாம் அண்டு ஜெர்ரி, மிராகுலஸ் லேடிபக்.”

- கு.ஆனந்தராஜ்

படங்கள்: சு.குமரேசன்