Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• ‘செக்கச் சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ படங்களைத் தொடர்ந்து ராஜ் எனும் அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஜோதிகா.

மிஸ்டர் மியாவ்

• சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இப்படத்தை முடித்தவுடன் விஷாலை இயக்குகிறார் சுந்தர்.சி. இந்தப் படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகிய இருவரும் ஹீரோயின்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

பிந்துமாதவி:
சமீபத்துல என் தோழில் எடுத்த போட்டோ இது. இதுவரை நிறைய போட்டோ ஷூட் எடுத்திருக்கேன். ஆனாலும், இந்த போட்டோ என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. இதுல நான் ரொம்ப அழகா இருக்கேன்ல..?

மிஸ்டர் மியாவ்

• விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் பிர்ஸாடா நடிக்கும் ‘நோட்டா’ படத்தில் தன் குருவான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருக்கிறார், இயக்குநர் ஆனந்த் சங்கர். 

மிஸ்டர் மியாவ்

• ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’ படங்களுக்குப் பிறகு, நகுல் - சுனைனா ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறது. சச்சின் தேவ் எனும் புதுமுக இயக்குநர் இந்தப்
படத்தை இயக்குகிறார்.

மிஸ்டர் மியாவ்

• மலையாளத்தில் பிஸியாக இருக்கும் நடிகை நமீதா பிரமோத், ‘‘என்னைப் பற்றி வரும் தேவையில்லாத கிசுகிசுக்களும் வதந்திகளும் மிகவும் பாதிக்கின்றன. நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்’’ என வேதனையுடன் சொல்கிறார்.

சைலன்ஸ்

‘உ
ச்ச நடிகருடன் ஒரே ஒரு டூயட் பாடினால் என் டார்கெட் ஓவர். அப்புறம்தான் மேரேஜ் ஃபீவர்’ என்று சொல்லிவந்த மூன்று எண் நடிகை இப்போது உற்சாகத்தில் மிதக்கிறார். நடிகை வீட்டில் டும்டும் சத்தம் விரைவில் கேட்குமாம்.

• இது இன்னொரு நம்பர் நடிகையின் சீக்ரெட். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகப் பார்த்து நடிக்கும் அவரின் லேட்டஸ்ட் படங்கள் இரண்டும் நல்ல கலெக்‌ஷன் பார்த்தன. எனவே, இப்போது சம்பளமாக ஐந்து விரல்களைக் காட்டி தயாரிப்பாளர்களை அதிர வைக்கிறாராம் அவர். காலத்தின் ‘கோலம்’ என திகைத்து நிற்கிறார்கள் புரொட்யூஸர்கள்.

மிஸ்டர் மியாவ்

• மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் முதன்முறையாக டப்பிங் பேசியுள்ளார், நடிகை ‘கயல்’ ஆனந்தி. அவர் பேசியிருக்கும் நெல்லைத் தமிழ், படத்தில் ஸ்பெஷலாக இருக்குமாம்.

மிஸ்டர் மியாவ்

• மலையாளத்தில் ‘காயங்குளம் கொச்சுண்ணி’ படத்துக்குப் பிறகு, ‘நீதி’ எனும் படத்தில் நடிக்கிறார் ப்ரியா ஆனந்த். ஹீரோ, திலீப். இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க மம்தா மோகன்தாஸ் கமிட்டாகியுள்ளார்.

கறுப்பு நிற கார் என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமாமே?

சமந்தா:
ஆமாங்க. அது மட்டுமல்ல. அதுல கண்டிப்பா சின்னதா தலையணை இருக்கணும். எனக்கு கார் ஓட்டத் தெரியாது. எனக்கு நாக சைதன்யா கார் ஓட்டுறதை ரசிக்கப் பிடிக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி நாக சைதன்யாவுக்கு பைக் ப்ரசென்ட் பண்ணேன். இப்போ அவருக்கு ப்ளாக் கலர்ல சூப்பரா ஒரு கார் ப்ரசென்ட் பண்ணப்போறேன். அவர்கிட்ட சொல்லிடாதீங்க!