Published:Updated:

`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது!’ - கார்த்திக் சுப்புராஜ்

`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது!’ - கார்த்திக் சுப்புராஜ்
`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது!’ - கார்த்திக் சுப்புராஜ்
`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது!’ - கார்த்திக் சுப்புராஜ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'பேட்ட'. ரஜினி, விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக்கி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா எனப் பெரும் பட்டாளமே இதில் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சமுத்திரகனி தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ``என் வாழ்க்கையில் நான் சினிமா பண்ணுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. மதுரையில இருக்கும்போது சினிமாதான் பொழுதுபோக்கு. குடும்பத்தினருடன் படம் பார்க்கச் செல்வோம். அவரை ஸ்கிரின்ல பார்க்கும்போது பிரமிப்பா இருக்கும். சினிமா மீது எனக்கு ஆசை வருவதற்கே அவர்தான் காரணம். நான் இதற்கு முன்பு எடுத்த படத்தை அவர் பார்ப்பாரா என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். சினிமா துறையில் மனம் விட்டுப் பாராட்டுவது ரஜினி மட்டும் தான். பீட்சா படத்தைப் பார்த்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார். 

`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது!’ - கார்த்திக் சுப்புராஜ்

மதுரையில் நான், என் மனைவி, பாபி சிம்ஹா ஆகியோர் காரில் பயணம் மேற்கொண்டு இருக்கும்போது ஒரு போன் கால் வந்தது. சென்னை நம்பர் அது. `நாங்க ரஜினி சார் வீட்ல இருந்து பேசுறோம்னு’ ஒரு குரல். நான் நம்பவே இல்லை நம்ம பய எவனோதான், கலாய்க்கறாங்கனு நினைச்சேன். பக்கத்துல இருந்த பாபி ஸ்பீக்கர் போட சொன்னார். ரஜினி சார் குரல் கேட்டது பிட்சா பார்த்தேன் `brilliant’ சொன்னார்.

அவருடன் படம் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை. ஜிகர்தண்டா படம் முடிஞ்சது. கருணாகரன் லிங்கா படத்துல நடிச்சிட்டு இருந்தார். ரஜினியைப் பார்க்க நண்பர்களுடன் கர்நாடகாவுக்குச் சென்றோம். அவரைப் பார்த்து பேசினோம். `ஜிகிர்தண்டா படம் பார்த்தேன் பரட்டையைப் பார்த்த மாதிரி இருந்தது’ என்றார். நான், `உங்கள மனசுல வெச்சுதான் வொர்க் பண்ணுனேன்’ என்றேன்.  `என்கிட்டயே சொல்லியிருக்கலாமே’ என்று கூறினார் ரஜினி. முதல் நாள் அவரைப் பார்த்த சந்தோஷத்தில் ஆட்டோகிராஃப் வாங்க மறந்துட்டேன். அடுத்த நாள் ஆட்டோகிராஃப் வாங்கப் போனேன். என்னை நேரில அழைத்துப் பேசினார். எதாவது ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். அவரு சொன்னத நம்புறதுக்கே இரண்டு நாள் ஆச்சு. 

`ரஜினி சார் குரல்ல முதன்முதல்ல கேட்ட தருணத்தை மறக்கவே முடியாது!’ - கார்த்திக் சுப்புராஜ்

ஷூட்டிங்போது இயக்குநருக்கு நிறைய பணி இருக்கும். ஆனா என் கண்னு ரஜினி சார் மேலயேதான் இருக்கும். அவரு என்ன பன்றார். எப்படி புத்தகம் படிப்பார் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். என் உதவியாளர்தான் அதிகமாக ரஜினி சார் கிட்ட பேசுவார். எனக்கு பொறாமையாக இருக்கும். நான் வலுக்கட்டாயமாக அவரிடம் போய் பேசுவேன். என் மனைவிகிட்ட கூட கோவிச்சுக்கிட்டேன், தலைவர் கிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தாங்கன்னு. நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். அவரின் அரசியல் அறிவிப்பு சந்தோஷத்தை கொடுத்தது. கலாநிதி மாறன் கூட, ரஜினி ரசிகர்தான்.  ரஜினி படம் எப்படி இருக்குமோ அப்படி வரணும்னு மட்டும்தான் சொன்னார்’’ என்றார். தன் பேச்சின் இறுதியில், பாட்ஷா படத்தின் வசனத்தையும் பேசிக் காட்டினார் கார்த்திக் சுப்புராஜ்