Published:Updated:

"விஜய் சேதுபதி இல்லேன்னா ரொம்ப கஷ்டம்தான்" - இயக்குநர் பாலாஜி தரணிதரன்

"விஜய் சேதுபதி இல்லேன்னா ரொம்ப கஷ்டம்தான்" - இயக்குநர் பாலாஜி தரணிதரன்
News
"விஜய் சேதுபதி இல்லேன்னா ரொம்ப கஷ்டம்தான்" - இயக்குநர் பாலாஜி தரணிதரன்

`ஒரு பக்க கதை' படம் தியேட்டரில் வெளியாகாமல் ஆன் லைனில் வெளியாகவிருக்கிறது. அது குறித்து, இயக்குநர் பாலாஜி தரணிதரன் பகிர்ந்துகொண்டவை.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்குப் பிறகு, இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான படம், 'ஒரு பக்க கதை'. தயாராகி சில காரணங்களால் திரைக்கு வராமலே இருந்தது. இப்போது, இந்தப் படத்தை ஜீ 5 நிறுவனம் வாங்கி ஆன்லைனில் வெளியிட உள்ளது. இது குறித்து, இயக்குநர் பாலாஜி தரணிதரனிடம் பேசினோம்.  
 

"இத்தனை நாள் படம் வெளியாகாமல் இருந்ததற்கு என்ன காரணம்?'' 

"படம் எடுக்கிறது மட்டும்தான் எனக்கு தெரியும். படத்தை விநியோகம் பண்றது, அதுல இருக்க சில நுணுக்கங்கள்லாம் எனக்கு தெரியாது. அதான் பிரச்னையே. இந்தப் படம் கடைசி வரைக்கும் வராமலே போயிடும்னு ரொம்ப பயந்தேன். இப்போ ஜீ5 மூலமா படம் மக்கள்கிட்ட போய் சேரப்போகுதுன்னு நிம்மதியா இருக்கு."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"ஜீ 5 அணுகாம இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?''

" 'சீதக்காதி' படம் வந்ததுக்கு அப்புறம் நான் நல்ல இடத்துல இருப்பேன்னு நம்புறேன். அதுக்குப் பிறகு, இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய என்னால் முடிந்த முயற்சிகளை கண்டிப்பா எடுத்திருப்பேன். "

"ஆன் லைன் ப்ளாட்ஃபார்ம் எந்தளவுக்கு ஆரோக்யமா இருக்கும்னு நினைக்கிறீங்க?"

"இப்போ நிறைய க்ரியேட்டர்கள் வந்துட்டாங்க. எல்லோரும் சினிமாவிலேயே வரணும்னு இல்லாம வெப் சீரிஸ், ஒரிஜினல்ஸ்னு அவங்க திறமையை வெளிக்காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இணையதளம்தான் இதுக்கு ஒரு நல்ல ப்ளாட் ஃபார்மா இருக்கு. எனக்கும் ஒரு ஒரிஜினல் பண்ணணும்னு ரொம்ப ஆசை. படம் வெளியிட சென்சார் பிரச்னைகள், படம் எடுத்தா ஆடியன்ஸ்கிட்ட ரீச் எப்படி இருக்கும், பாக்ஸ் ஆபீஸ்னு நிறைய பிரச்னைகள் இருக்கு. ஆனா, ஆன்லைன் ஸ்ட்ரீமிங்ல எந்தப் பிரச்னையுமே இல்லை. நம்ம என்னலாம் பண்ணணும்னு நினைக்கிறோமோ அது எல்லாத்தையும் பண்ணலாம். நம்ம கிரியேஷனும் மக்களுக்குப் போய் சேரும். அதனால, இதை ஆரோக்கியமாதான் பார்க்கிறேன்."
 

`` `ஒரு பக்க கதை' படத்துக்கு காளிதாஸ் - மேகா ஆகாஷ்னு எப்படி நடிகர்களை தேர்வு செஞ்சீங்க?"

`` `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட முடிச்ச சமயத்துல எங்க டீமோட விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில கலந்துகிட்டோம். அப்போ, ஜெயராம் சாருடைய பையன் காளிதாஸ் மேடையில மிமிக்ரி பண்ணார். அப்பவே, இந்தக் கதைக்கு இவர் சரியா இருப்பார்னு முடிவு பண்ணிட்டேன். அதே மாதிரி இருபது வயசுல மிடில் க்ளாஸ் குடும்பத்துல இருக்கிற மாதிரி ஒரு பொண்ணு இருக்கணும். எல்லா நண்பர்கள்கிட்டயும்  சொல்லி வெச்சிருந்தேன். பார்த்திபன் சார் பொண்ணு கீர்த்தனா இதுக்கு ரொம்ப உதவி பண்ணாங்க. அப்படிதான் மேகா ஆகாஷை தேர்வு செஞ்சோம்."

``இந்தப் படம் என்ன பேசுது?"

``சாமானிய மனிதர்களுக்குள்ள ஒரு அசாதாரண விஷயங்கள் நடக்கும்போது அதை எப்படிப் புரிஞ்சுக்கிறோம், எப்படி ஏத்துக்கிறோங்கிறதைதான் சொல்லியிருக்கேன் "

``படத்தை எடுக்கிறதைவிட வெளியிடுறது சிரமமா இருக்குனு சொல்றாங்களே... அதை எப்படிப் பார்க்குறீங்க?" 

``உண்மைதான். ஒரு படத்துக்கு கதை, வசனம் எழுதி, நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வெச்சு, எடிட்டிங், டப்பிங்னு எல்லாத்தையும் முடிச்சிடலாம். ஆனா, அதை பத்திரமா ரிலீஸ் பண்றது பெரிய சிரமமா இருக்கு. வாரத்துக்கு ரெண்டு, மூணு, ஆறுன்னு வருஷத்துக்கு நிறைய படங்கள் வருது. விஜய் சேதுபதி இருக்கிறதால்தான் இதுவும் சாத்தியம். அப்படி வெளி வர்ற படங்கள்லேயும் தகுதியானதுதான் தப்பிப் பிழைக்கும்!"
 

``இதை எப்படிக் கடந்து வரணும்னு நினைக்கிறீங்க?"

``இதை கடந்து வரமுடியுமானு தெரியலை. கன்டென்ட் மட்டும் போதும்னு சொல்ல முடியாது. கன்டன்டோட பிசினஸும் சேர்ந்து இருக்கு. ஏன்னா, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்கு தியேட்டர் கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். 'பரியேறும் பெருமாள்' படத்தை ரஞ்சித் பண்ண மாதிரி, படம் மக்களுக்கு பிடிக்கிற வரைக்கும் யாராவது ஒருத்தர் தாங்கிப் பிடிச்சு அதை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோக வேண்டி இருக்கு. " 

``நீங்க அறிமுகப்படுத்தணும்னு நினைச்ச மேகா ஆகாஷ் இப்போ நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்காங்களே?"

``ரொம்ப சந்தோசமா இருக்கு. `ஒரு பக்க கதை' படத்துக்குப் பிறகு வாய்ப்பே இல்லாமல் இருந்திருந்தால்தான் குற்ற உணர்ச்சியா இருந்திருக்கும். இப்போ அவங்க அடுத்தடுத்து படங்கள் பண்ணும்போது சந்தோஷமா இருக்கு." என்று முடித்துக்கொண்டார்.