தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

படிக்கச் சொல்லுது பஞ்சாபி பொண்ணு! - ரகுல் ப்ரீத் சிங்

படிக்கச் சொல்லுது பஞ்சாபி பொண்ணு! - ரகுல் ப்ரீத் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
படிக்கச் சொல்லுது பஞ்சாபி பொண்ணு! - ரகுல் ப்ரீத் சிங்

ஸ்டார்

டிப்பைத் தாண்டி சமூகப் பணிகளில் ஆர்வம்காட்டுகிற வித்தியாசமான நட்சத்திரங்களில் ரகுல் ப்ரீத் சிங்கும் இடம்பிடிக்கிறார். அண்மைக்காலமாக சமூகப் பணிகளில் இவர் காட்டும் ஆர்வம் பலரையும் ஆச்சர்யப்படுத்துகிறது.

படிக்கச் சொல்லுது பஞ்சாபி பொண்ணு! - ரகுல் ப்ரீத் சிங்

அப்பா... அம்மா... ரகுல்?

நான் பஞ்சாபி பொண்ணு. அப்பா ஆர்மி மேன். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வேற வேற ஊருக்கு மாத்திக்கிட்டே இருப்பாங்க. அதனால நானும் இந்தியாவுல பல இடங்கள்ல வாழ்ந்திருக்கேன். எனக்கு டிராவல் ரொம்பப் பிடிக்கும். இப்போ குடும்பம் டெல்லியில இருக்கு. நான் ஹைதராபாத்ல இருக்கேன்.

எந்த முடிவாக இருந்தாலும், ‘நீதான் எடுக்கணும்’னு அம்மா சொல்வாங்க. ஆனா, அதுக்கான பக்குவம் இன்னும் எனக்கு வரலை.  சின்னப்பொண்ணுதானே நான்! அதனால, எந்த ஒரு விஷயத்தையும் அப்பாகிட்ட கேட்டுத்தான் முடிவு பண்ணுவேன்...

`பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தின் தெலங்கானா தூதரா இருக்கீங்களே... அது பற்றி..?

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதுதான். பெண் குழந்தை களுக்குப் படிப்பு, மருத்துவம், தொழில் தொடங்குவது... இப்படி எந்தச் செலவாக இருந்தாலும், அதை அரசாங்கம் ஏத்துக்கும். ஒரு பெண் குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது அந்தக் குடும்பத்துக்கே கல்வி அளிப்பதற்குச் சமம்.

பிரபலங்களுக்கும் இந்த விஷயத்தில்  பெரிய பொறுப்பு இருக்கு. கிராமங்களில் நடிகர்களைக் கடவுள் மாதிரி நினைக் கிறாங்க. அதனால, மக்கள்கிட்ட நேரடியா போய் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி னோம்னா, நிச்சயம் மாற்றம் உருவாகும்.

நான் சொல்வது இதுதான்... குழந்தை வளர்ப்புல ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது. யாரும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது. தொடர்ந்து கல்வி அளிப்பதன் மூலமா சிசுக் கொலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கு. பெண் குழந்தைகளை யாரும் சுமையா பார்க்கக் கூடிய நிலை இனி வரவே கூடாது.

ரகுலின் வார்த்தைகளில் அழகான அர்த்தம் தொனிக்கிறது!

- சுஜிதா சென்