Published:Updated:

டான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்...! 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku

டான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்...! 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku
டான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்...! 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku

அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகியுள்ளது.


சிவா-அஜித் கூட்டணியில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம், 'விஸ்வாசம்'. சிவாவுடன் அஜித் இணையும் நான்காவது படம் இது. இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கெனவே, ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் அஜித் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின்மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி தயாரிக்கும் இந்தப் படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. இதனிடையே,  'விஸ்வாசம்' அப்டேட் வேண்டும் என்று கூறி, ட்விட்டரில் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டுள்ளது.