பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“முதல் பால் நாங்க போடறோம்!”

“முதல் பால் நாங்க போடறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“முதல் பால் நாங்க போடறோம்!”

“முதல் பால் நாங்க போடறோம்!”

`` ‘அப்பா - மகளுக்கான பாட்டுக்காக உண்மையான அப்பா - மகளை வெச்சுப் பாட வைக்கணும்’னு சிவகார்த்திகேயனையும் ஆராதனாவையும் பாட வெச்சோம். பொண்ணு பாடுறதை வீடியோ பண்ணிக்கலாம்னு ஒரு ஆசையில் எடுத்த வீடியோதான், இப்போ யூடியூப்ல செம ஹிட்.” - உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

“முதல் பால் நாங்க போடறோம்!”

“இந்தியாவின் முதல் மகளிர் கிரிக்கெட் படமா ‘கனா’ இருக்கிறதுனால உங்களுக்கு என்னென்ன பொறுப்புகள் இருந்துச்சு?”

`` ‘கனா’வுக்கு முன்னாடி மகளிர் கிரிக்கெட்டை மையமா வெச்சு ஒரு படம் வந்திருந்தா, அந்தப் படத்திலிருந்து இதை வித்தியாசமா காட்டணும்கிற பிரச்னை இருந்திருக்கும். அப்படி எதுவும் இல்லாததால, என்னால சுதந்திரமா செயல்பட முடிஞ்சது. முதல் பாலை நாங்கதானே போடறோம்? அதேசமயம், `கனா’வுக்கு அடுத்து வரப்போற மகளிர் கிரிக்கெட் படங்களுக்கு இது ஒரு ரெஃபரென்ஸா இருக்கும்கிறதை மனசுல வெச்சுக்கிட்டு, நிறைய விஷயங்களை மெனக்கெட்டு செஞ்சிருக்கோம். படத்தோட கடைசி 20 நிமிடங்கள் இன்டர்நேஷனல் கிரிக்கெட் மேட்ச் எப்படி இருக்குமோ, அப்படியே இருக்கணும்னு நினைச்சோம். கேமராமேன் தினேஷ் அதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டார். கிரிக்கெட் மேட்சை ஷூட் பண்ற கேமராமேன்களோட தலைமையிலதான் க்ளைமாக்ஸைப் படமாக்கினோம்.” 

“முதல் பால் நாங்க போடறோம்!”

“இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த விஷயங்களில் எது உங்களுக்கு பிரமிப்பா இருந்துச்சு?”

``அவங்க நிச்சயமா ஒரு நல்ல நடிகை. ஆனா ஆரம்பத்துல அவங்க என் லிஸ்ட்ல இல்லை. இது ஒரு கிரிக்கெட் படம்ங்கிறதால கிரிக்கெட் விளையாடத் தெரிஞ்ச ஆளா இருக்கணும்; புதுமுகமா இருந்தாலும் ஓகேனு ஆடிஷன் பண்ணுனோம். யாரும் வரலை. அப்போதான் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘என்னை வெச்சு டிரை பண்ணிப் பாருங்க. செட் ஆனா நடிக்கிறேன். இல்லைனா, நானே விலகிக்கிறேன்’னு சொன்னாங்க. அவங்களோட அந்தப் புரிதல் எனக்குப் பிடிச்சிருந்தது. பயிற்சி கொடுத்தோம். 

“முதல் பால் நாங்க போடறோம்!”

நானும் ஒரு கிரிக்கெட்டர். கிரவுண்டுல நின்னு பிராக்டிஸ் பண்றது எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்துக்குமேல  ஆச்சுனா, டயர்ட் ஆயிடுவோம். ஆனா, ஐஸ்வர்யாகிட்ட ‘ரெஸ்ட் எடுங்க’னு சொன்னாலும், `பரவாயில்லை இன்னும் பத்துப் பந்து போட்டுக்கிறேன்’னு சொல்லிட்டு பயிற்சி எடுப்பாங்க. பந்தை எப்படிப் பிடிக்கிறதுன்னே தெரியாம பயிற்சிக்கு வந்த ஐஸ்வர்யா, இப்போ பக்காவா பவுலிங் போடுற அளவுக்கு வந்திருக்காங்க.’’

“ஸ்போர்ட்ஸ் படங்களுக்கு ஒரே டெம்ப்ளேட்தான்.  `கனா’ எந்த விதத்தில் ஸ்பெஷல்?”

“நூறு வருட தமிழ் சினிமாவில் ஆயிரக் கணக்கான காதல் படங்கள் வந்திருக்கு. அது எல்லாத்துக்கும் ஒரே டெம்ப்ளேட்தான். இருந்தாலும், அதில் இருக்கிற சில தனித்துவமான விஷயங்கள் அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கும். ஆயிரம் படங்கள் வந்த ஜானர்லேயே இப்படினா, சில படங்கள் மட்டுமே வந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர்ல டெம்ப்ளேட் பெரிய பிரச்னையா இருக்காது. அதுமட்டுமில்லாம, இந்த டெம்ப்ளேட்டை மாற்றவும் முடியாது. அப்படி மாற்றி எடுத்தா, அதைப் பார்க்க யார் ரெடியா இருக்காங்க?’’

“முதல் பால் நாங்க போடறோம்!”

“சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் என்ன ரோல்?”

``சிவகார்த்திகேயன்தான் இந்தப் படத்தோட ஹீரோ. அவர் இல்லைனா இந்தப் படம் தொடங்கியிருக்காது. அவர் தயாரிக்க முன் வரலைனா, இந்தப் படம் இவ்வளவு பெரிய படமா வந்திருக்காது. ‘கனா’வில் அவருக்கு மெக்கானிக் ரோல்; டீஸரைப் பார்த்தாலே அது உங்களுக்குத் தெரியும். படத்தில் சிவா நடிக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட, ‘நான் ஹீரோவா நடிக்கிற படங்களில் என்னால செய்யமுடியாததை உன் படத்துல செய்யணும்; அப்படி ஒரு ரோலா இருக்கணும்’னு சொன்னார். அதனாலதான் இந்தப் படத்துக்காக முடி, தாடி வளர்த்து, சால்ட் அண்டு பெப்பர் லுக் வெச்சு, அவரோட படங்களிலிருந்து வித்தியாசமா இருக்கணும்னு இந்த ரோலைப் பண்ணியிருக்கார்.’’

மா.பாண்டியராஜன்