பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

டென்மார்க்கைச் சேர்ந்த டென்னிஸ் பிளேயர் மாத்தியாஸ் போவைக் காதலிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் டாப்ஸி. ‘‘காதல்தான் முக்கியம்; கல்யாணம் அல்ல. நான் எப்போது குழந்தைகள் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேனோ, அப்போதுதான் திருமணம் செய்துகொள்வேன். அதுவரை, மாத்தியாஸோடு ஒன்றாக வாழ்வேன்’’ என்றும் கூறியிருக்கிறார். முடியாதுன்னு சொல்ல முடியலையே!

டந்த சில ஆண்டுகளாக சூப்பர்மேனாக நடித்துவரும் ஹென்றி கேவில் இனி அந்தப் பாத்திரத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார் எனப் பரபரக்கிறது ஹாலிவுட். டிசி நிறுவனத்துடன் ஏற்பட்ட கால்ஷீட் குழப்பத்தால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள். எது எப்படியோ இனியொரு முறை ஹென்றியை `மேன் ஆப் ஸ்டீலாகப்’ பார்க்க முடியாது. சூப்பர் மேன் ஹென்றி கேவில் மட்டுமல்ல, பேட்மேனாக நடித்துவரும் பென் அஃப்லெக்கும் ஒப்பந்தங்களை முடித்துக்கொள்ளப்போகிறார் என்கிறார்கள். பைபை சூப்பர்மேன்!

இன்பாக்ஸ்

சென்னையில் ஆண்டுதோறும் நடக்கும் ‘நியான் ரன்’ ரொம்பவே ஃபேமஸ். இந்த ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி நியான் ரன் நடக்கவிருக்கிறது. இரவு நேர சென்னைச் சாலைகளில் நியான் விளக்கொளியில் ஃப்ளோரசென்ட் டிஷர்ட்டில் மூன்று கிலோமீட்டர் ஓட வேண்டும். ஓடி முடித்ததும் டிஜே நைட்டில் ஜூம்பா டான்ஸ் ஆடி ஆட்டம் பாட்டத்தோடு முடிகிற செம ஜாலியான ஓட்டம் இது. இதில் கலந்துகொள்ள https://www.eventjini.com/mirchineonrun2018 என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.  ஓடி ஓடி உழைக்கணும்...

இன்பாக்ஸ்

24 ஆண்டுகளுக்கு முன்பு தேசத்துரோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டவர் நம்பி நாராயணன். தான் நிரபராதி என இத்தனை ஆண்டுக்காலமாகப் போராடி இப்போதுதான் உச்ச நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர்மீது போடப்பட்ட வழக்கு அநாவசியமானது எனக் கேரள அரசைக் கோபமாகச் சாடியிருக்கிறது உச்ச நீதிமன்றம். கூடவே கேரள அரசு 50 லட்ச ரூபாய் தொகையை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறது. தாமத நீதி

இன்பாக்ஸ்

ரீம் அசிர் ஆப்கானிஸ்தானின் சார்லி சாப்ளின் என அழைக்கப்படுபவர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளைச் சிரிக்கவைப்பதுதான் கரீமின் ஒரே வேலை. கலை நிகழ்ச்சிகளுக்கு தாலிபான்கள் தடைவிதித்திருந்த காலகட்டத்திலும் அவர் விடாமல் ஸ்டாண்ட் அப் காமெடிகள் செய்துகொண்டிருந்தார். இப்போதும் அவருக்கு தாலிபான்களால் அச்சுறுத்தல் இருந்தாலும், தொடர்ந்து ஆப்கன் மக்களைத் தன் காமெடிகளால் மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார். ‘மக்கள் புன்னகைக்க ஒரு காரணமாக இருக்க வேண்டும். அதுதான் என் வாழ்க்கையின் லட்சியம்’ என்கிறார் கரீம்.  புன்னகை மன்னன்

இன்பாக்ஸ்

ஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. படத்தை எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட்டே ஆகவேண்டும் என அஜித்குமார் விரும்புகிறாராம். அதனால் அடுத்த முப்பது நாள்களில் சூட்டிங்கை முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் இறங்கவிருக்கிறது படக்குழு. படத்தில் அஜித்குமார் மதுரை ஸ்லாங் பேசவிருக்கிறாராம். அதற்காக அதைத் துல்லியமாகப் பேச வேண்டும் எனத் தீவிரப் பயிற்சியும் எடுத்துக்கொண்டாராம். தாரை தப்பட்டை கிழியப்போகுது!

இன்பாக்ஸ்

ஸ்பெயினில் நடந்த உலக மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பாட்டி மன் கவுர் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். அவருக்கு வயது 102! பஞ்சாபின் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் இந்தப் பாட்டி. தன் 93வது வயதிலிருந்துதான் விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபட ஆரம்பித்தவர் சென்ற ஆண்டுகூட நியூஸிலாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். ஆசம் ஆசம்

இன்பாக்ஸ்

மீபத்தில் அனுஷ்கா சர்மா மற்றும் வருண் தவான் நடிப்பில் வெளியாகவுள்ள `சுயி தாகா’ படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியானது. அந்த டிரெய்லரில் அனுஷ்கா சர்மா ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சி இணையத்தில் பரவலாகக் கிண்டலடிக்கப்பட்டது. மீம் பாய்ஸ் விதவிதமாக அதைக் கேலி செய்திருந்தனர். ஆனால், அனுஷ்காவோ இந்த வரம்பு மீறிய கேலி, கிண்டல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், `இந்தியன் ஐடல்’ எனும் நிகழ்ச்சியில் அதே ஆனந்தக்கண்ணீர் ரியாக்‌ஷனைச் செய்துகாட்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.  அப்படிப் போடு அனுஷ்கா