Published:Updated:

பிரியாணி வித் ரஜினி! நச் ‘பேட்ட’ டீசர் #Petta

பிரியாணி வித் ரஜினி! நச் ‘பேட்ட’ டீசர் #Petta
பிரியாணி வித் ரஜினி! நச் ‘பேட்ட’ டீசர் #Petta

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் பரிசாக `பேட்ட' படக்குழு அப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. 

பிரியாணி வித் ரஜினி! நச் ‘பேட்ட’ டீசர் #Petta

'எந்திரன்' படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படம், `பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடிக்கின்றனர். சிம்லா, டார்ஜிலிங், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுவந்தது. கிட்டத்தட்ட படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.  அதை முன்னிட்டு, படத்தை புரொமோஷன் செய்யும் வேளைகளில் சன் பிக்சர்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. 

பிரியாணி வித் ரஜினி! நச் ‘பேட்ட’ டீசர் #Petta

முன்னதாக வெளியான இப்படத்தின் புகைப்படங்கள், ’மரண மாஸ் ’ பாடல்கள் போன்றவை வெளியாகி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது. இதற்கிடையில் இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பர்த்டே கிஃப்டாக  “பேட்ட பர்த்டே ட்ரீட் டீசர்”  என்ற கேப்சனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அனிருத்தின் தெறிக்கவிடும் பேக்ரவுண்டு மியூசிக்கில்  ரஜினிக்கே உரிய தனி ஸ்டைலில் அவர் நடந்து வரும் காட்சிகள்  இடம்பெற்றுள்ளன. இரண்டு வேறுபட்ட கெட்டப்பில் மாஸாக வெளியாகியுள்ளது `பேட்ட' டீசர்.