Published:Updated:

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி! #Lucifer

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி! #Lucifer
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி! #Lucifer

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் டீசரை மம்மூட்டி வெளியிட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் சக போட்டியாளர்களுக்குள் எப்போதும் ஒரு நல்ல நட்பு இருக்கும். உச்ச நட்சத்திரங்கள் சர்வ சாதாரணமாக ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்கள். தற்போது நடிகர் பிரித்விராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இயக்குநராக அவரது முதல் படத்தின் ஹீரோ, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால். 

`லூசிஃபெர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை இன்று காலை முகநூலில் வெளியிட்டார் நடிகர் மம்மூட்டி. மோகன்லால், மம்மூட்டி இடையே உள்ள நட்பை மீண்டும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக இரு நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். 

இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இந்திரஜித், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகர் முரளி கோபி இப்படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.