சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

சென்றவாரம் டெல்லியில் 20 அடி ஆழமுள்ள செப்டிங் டாங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது அனில் என்ற துப்புரவுத் தொழிலாளி இறந்துபோனார். வறுமையான நிலையில் இருந்த அனிலின் குடும்பத்தினர் அடக்கம் செய்யக்கூட பணமின்றித் தவித்தனர். இதை ஸ்டேடஸாக ஆன்லைனில் ஒருவர் வெளியிட, விஷயம் நாடு முழுக்க வைரலானது.  அடுத்த ஒரே நாளில் இந்தியா முழுவதிலுமிருந்து, அனிலின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் வரை உதவிகள் குவிந்துவிட்டன.  அன்பே சிவம்!

1972க்குப் பிறகு நிலாவுக்கு யாருமே சென்றதில்லை. 46 ஆண்டுகளுக்கு பிறகு நிலாவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவிருக்கிறது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம். இந்தப் பயணத்தில் இடம்பெறப்போகிற முதல் நபர் ஜப்பானிய கோடீஸ்வரரான யுசாக்கு மேசாவா. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் 2023க்குள் அவர் நிலவுக்குக் கிளம்பிவிடுவார்.  தன்னோடு எட்டு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களையும் அழைத்துச்செல்லவிருக்கிறார்.  உலகில் இருக்கிற யார்வேண்டுமானாலும் யுசாக்குவிடம் விண்ணப்பிக்கலாமாம்.  எழுத்தாளர்கள் ப்ளீஸ் நோட்.

இன்பாக்ஸ்

மிதாப் பச்சன், அமீர்கான், காத்ரீனா கயீஃப், ஜாக்கி ஷராஃப் எனப் பெரிய நட்சத்திரங்கள் கூட்டணி சேரும் படம் ‘தி தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’. 1839ல் எழுதப்பட்ட ‘தி கன்ஃபெஷன்ஸ் ஆப் எ தக்’ என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. அமீர்கானை எப்ப காட்டுவீங்க?

இன்பாக்ஸ்

த்ரிஷா அமெரிக்கா சென்றுள்ளார். ஸ்கூபா டைவிங், பாரா கிளைடிங் என அட்வென்ச்சர் பயணம் இது. இந்தப் பயணத்தில் டால்பினைக் கட்டிக்கொண்டு முத்தமிடும் படத்தைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பீட்டாவில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் இப்படி டால்பினை சித்ரவதை செய்யலாமா என வறுத்தெடுத்துவிட்டார்கள் விலங்குநேசர்கள். த்ரிஷாவுக்கு வந்த சோதனை!

டகிழக்கு மாநிலங்களில் உள்ள சில அணிகள் உள்பட 9 புதிய அணிகளுக்கு `முதல் தர’ போட்டிகளில் பங்கேற்க ‘க்ரீன் சிக்னல்’ கொடுத்துள்ளது பி.சி.சி.ஐ. இதில் புதுச்சேரியும் ஒன்று.  ‘நமக்கும் எதிர்காலத்தில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்’ என ஒருபுறம் புதுச்சேரி வீரர்கள் நம்பிக்கையுடன் இருக்க, முன்னாள் இந்திய வீரர்களான அபிஷேக் நாயர், பங்கஜ் சிங், தமிழக வீரர்கள் என வீரர்களை ஒப்பந்தம் செய்தது புதுச்சேரி கிரிக்கெட் போர்டு. கடுப்பான புதுச்சேரி லோக்கல் பாய்ஸ், ‘எதுக்கு உருட்டிகிட்டு’ மோடில் இருக்கிறார்கள். பாவம் பாய்ஸ்!

ப்பா வழியில் மகளும் சின்னத்திரைக்கு வரவிருக்கிறார். சமூகப் பிரச்னைகளைப் பேசும் டாக்‌ஷோ ஒன்றை தமிழ் சேனலுக்காகத் தொகுத்து வழங்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் லண்டனில்  முதல் மியூசிக் கான்செர்ட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியிருக்கும் ஸ்ருதி, அதே குஷியோடு டிவி ஷூட்டிங்கிற்கும் தயாராகிவிட்டாராம். ஸ்மால் பாஸ்!

ந்தியாவில் ஒரு எம்.எல்.ஏ-வின் வருட வருமானம் (நேர்மையாக சம்பாதிப்பது மட்டும்) எவ்வளவு இருக்கும்? யூகிக்க முடிகிறதா?  ஒரு கோடி என்கிறது ‘நேஷனல் எலெக்‌ஷன் வாட்ச்’ ஆய்வறிக்கை. இந்தியாவிலேயே கர்நாடக எம்.எல்.ஏ-க்கள்தான் மிக அதிகமாக சம்பாதிக்கிறார்களாம். இந்த விஷயத்தில் தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லை.  ஆனா ரெய்டு இங்கேதான் அதிகம் நடக்குது!

இன்பாக்ஸ்

100 மீட்டர் ஓட்டத்திற்கு எப்படி உசேன் போல்ட்டோ அப்படித்தான் மாரத்தானுக்கு எலியூத் கிப்சோகே. கடைசியாகக் கலந்துகொண்ட எட்டு மாரத்தான்களிலும் தங்கம் வென்று சாதனை படைத்தவர். ஒரு மனிதனால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்ற எல்லா எல்லைகளையும் உடைத்துத் தள்ளிச் சாதனைகள் செய்பவர். சென்றவாரம் நடந்த பெர்லின் மாரத்தானில் 2:01:39 நிமிடங்களில் போட்டி தூரத்தைக் கடந்து சாதனை செய்திருக்கிறார். இது முந்தைய சாதனையை விட ஒருநிமிடம் 18 விநாடிகள் அதிகம். ஓட்ட நாயகன்!