சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“கல்யாணம் செஞ்சுவெச்சது பிக்பாஸ்தான்!”

“கல்யாணம் செஞ்சுவெச்சது பிக்பாஸ்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கல்யாணம் செஞ்சுவெச்சது பிக்பாஸ்தான்!”

“கல்யாணம் செஞ்சுவெச்சது பிக்பாஸ்தான்!”

78 நாள்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்துவிட்டு வெளியில் வந்த மறுநாள், காதலி டெனிஷாவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார் டேனியல் அன்னி போப். 

“கல்யாணம் செஞ்சுவெச்சது பிக்பாஸ்தான்!”

“முகநூல் மூலமா எனக்கு அறிமுகமானவங்க, டெனிஷா. அமெரிக்காவுல இருந்து மீடியா கம்யூனிகேஷன் படிக்க சென்னைக்கு வந்தாங்க. நானும் லயோலாவுல விஸ்காம் படிச்சவன். படிப்பு முடியுற நேரத்துல இன்டர்ன்ஷிப்பைக் காரணமா வெச்சு, ஃப்ரெண்ட்ஷிப் இன்னும் நெருக்கமாச்சு. ரெண்டுபேருக்குள்ளேயும் காதல் இருக்க,  யார் அதை முதல்ல  சொல்றதுங்கிறதுலதான் போட்டி. கடைசியில அவங்க சொல்ல, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் டேனி’னு நானும் துள்ளிக் குதிச்சேன். ஆனா பாருங்க, சூழல் காரணமா இன்டர்ன்ஷிப்பை சேர்ந்து பண்ணவே இல்லை. அதுனால என்ன, ‘லைஃப் ஷிப்’ல சந்தோஷமா சேர்ந்துட்டோமே...

 அதேநேரம், ரகசியம் காக்கணும்கிற திட்டமெல்லாம் இல்லை. என்ன ஒரு விஷயம்னா,டெனிஷா குடும்பத்துல முன்னாடி ஒரு காதல் திருமணத்தால் நிகழ்ந்த சில கசப்பான அனுபவங்களால காதலுக்கு எதிர்ப்பு. அதை உடைக்க நாங்க ரெண்டுபேரும் எவ்வளவோ முயற்சி செஞ்சோம். அது பலனளிக்காமல் போகவே, நிச்சயதார்த்தத்தையும் கல்யாணத்தையும் ரொம்ப சிம்பிளா பண்ணவேண்டியதா போச்சு. சில மாதங்களுக்கு முன்னாடி நிச்சயதார்த்தம் நடந்தப்போவே, எங்க காதல் எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சு.

ஆனா ப்ரோ, இப்போ கடவுள் கண்ணைத் தொறந்துட்டாரு. ஆமா! நம்ம ‘பிக்பாஸ்’தான் டெனிஷா வீட்டுல எல்லோருடைய மனசையும் மாத்திட்டார்!” என்றவரிடம், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி குறித்துப் பேசினேன்.

“கல்யாணம் செஞ்சுவெச்சது பிக்பாஸ்தான்!”

“உண்மையிலேயே இன்ட்ரஸ்டிங்கான விளையாட்டு இது. ‘போனா காலியாகிடுவ!’னு பசங்க சொன்னாங்க. நூறு நாள்கள் சாப்பாடு போட்டு, விளையாடுங்கனு அனுப்பி வைக்கிறாங்க. ஆட்டம்னாலே விதிமுறைகள் இருக்கத்தான் செய்யும். மத்தபடி, நடிக்கிறதா, இயல்பா இருக்கிறதாங்கிறது நம்ம கையில்தானே இருக்கு.

அப்பா அக்ரிகல்சர் ஆபீஸரா இருந்தவர், மிடில் கிளாஸ் ஃபேமிலியில இருந்து வந்தேன் நான். காலேஜ் நாள்கள்ல போட்ட மேடை நாடகங்கள் மூலமா மீடியா வெளிச்சம் கிடைக்க ஆரம்பிச்சது. முதல் முதலா ‘பொல்லாதவன்’ படத்துல சின்ன கேரக்டர்ல தலையைக் காட்டினேன். அடுத்து, ‘ரௌத்ரம்’ படத்துக்காக இருபது நாள் லீவு போட்டு ஷூட்டிங் போனேன். ஆனா, நான் நடிச்சதுல 99% கட் ஆகிடுச்சு.  பிறகு, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்னைப் பிரபலப்படுத்துச்சு. தொடர்ந்து சில படங்கள், டிவி ஷோனு டிராவல் பண்ணிக்கிட்டிருந்த நிலையிலதான், பிக்பாஸ் வாய்ப்பு கிடைச்சது. இந்த நிகழ்ச்சி மூலமா இன்னும் அதிகமான மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்திருக்கேன்!” - சந்தோஷமாகச் சொல்கிறார்.

“கல்யாணம் செஞ்சுவெச்சது பிக்பாஸ்தான்!”

“இப்ப மாமனார் வீட்டுல ஏத்துக்கிட்டாங்களா?”

“என்ன இருந்தாலும் நான் மாப்பிள்ளை இல்லையா... ‘உள்ளே என்னதான் பண்றான் இவன்?’னு பிக்பாஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ‘நல்ல பையனாதானே இருக்கான்’னு அவங்களுக்குத் தோணவே, முடிவு சுபம். எங்க காதலையும் கல்யாணத்தையும் நல்லபடியா முடிச்சு வெச்ச கிரெடிட்ஸ் எல்லாம் பிக்பாஸுக்குத்தான்! அடுத்த சில நாள்கள்ல டெனிஷா வீட்டுல இருந்து எல்லோரும் இங்கே வந்து பெரிய அளவுல ரிசப்ஷனை நடத்தப் போறாங்க. அன்னைக்கு ஊரையே கூட்டிச் சோறு போட்டுடலாம். கூடவே, இன்னொரு சந்தோஷமான செய்தி. நான் ஹீரோவா நடிச்சிருக்கிற படமும் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு!”

ஃப்ரெண்டு கூல் ஆயிட்டாப்ல!

அய்யனார் ராஜன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்