Election bannerElection banner
Published:Updated:

’ஹேப்பி’ 45 வயது விக்ரம் பிரபு!   

’ஹேப்பி’ 45 வயது விக்ரம் பிரபு!   
’ஹேப்பி’ 45 வயது விக்ரம் பிரபு!   

’ஹேப்பி’ 45 வயது விக்ரம் பிரபு!   

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரில்லிங் காப் ஸ்டோரி வரிசையில், டிசம்பர் 14 அன்று உலகெங்கும் திரையில் களம் காண வருகிறது விக்ரம் பிரபு நடித்துள்ள 'துப்பாக்கி முனை' திரைப்படம். கலைப்புலி S தாணு தயாரிப்பில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றவிருக்கிறார்...

’ஹேப்பி’ 45 வயது விக்ரம் பிரபு!   

கமர்ஷியல் கலாட்டாவா?

போலீஸ் திரைப்படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. பைட்டு, பஞ்ச், பாட்டு, செண்டிமெண்ட் என கலந்துகட்டி வரும் தமிழ்ப்படங்களை ஓரங்கட்டி நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் இப்போதைய இளம் இயக்குனர்களின் ஸ்டைலாக இருக்கிறது. ஆக்ஷன் என்றாலும் இந்த மசாலாக்கள் எல்லாம் இல்லாமல், சொல்ல வந்ததை த்ரில்லிங் ஆக, இறுக்கம் நிறைந்த திரைக்கதையாக அமைத்திருக்கிறார் இளம் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். 24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால், விறுவிறுவென படம் இருக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது துப்பாக்கி முனை...

’ஹேப்பி’ 45 வயது விக்ரம் பிரபு!   

விக்ரம் பிரபுவின் வேடம் என்ன?

துப்பாக்கி ஏந்தி, தோட்டாக்'கலை'ஞனாக  விக்ரம் பிரபு மிரட்டவிருக்கிறார்... எஸ், படத்தின் நாயகனான பிர்லா போஸ் எனும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-டின் வாழ்க்கையைத் திருப்பிப் போடும் ஒரு சம்பவத்தின் மீட்சிதான் அந்த 24 மணி நேரமாம். படத்தில் யங்காக ஒரு லுக்கிலும், சால்ட் & பெப்பர் லுக்கிலும் வருகிறார் விக்ரம் பிரபு. கதையில் அவருக்கு வயது 45ஆம்!!!, வயதான கதாபாத்திரத்தில் சீக்கிரம் இளம் ஹீரோக்கள் கமிட் ஆக மாட்டார்கள், ஆனால் தினேஷ் செல்வராஜிடம் கதை கேட்ட விக்ரம் பிரபு உடனே ஓகே சொல்லிவிட்டாராம், 'கதையின் வெயிட் அப்படி' என கிசுகிசுக்கிறது கோலிவுட்.

’ஹேப்பி’ 45 வயது விக்ரம் பிரபு!   

படம் பார்த்த மணிரத்தினம்...

தினேஷ் செல்வராஜ் இயக்குனர் மணிரத்தினத்தின் அசிஸ்டண்ட் என்பதால், முதலில் குருவிற்குத் தன்  படத்தைப் போட்டு காட்டியிருக்கிறார். இரத்தினச் சுருக்கமாக கதைப்பதுதானே மணிரத்தினத்தின் இயல்பு, படத்தைக் கண்ட மணிரத்தினம் அதையும் மீறி தாராளமாக சிஷ்யனைப் பாராட்டினாராம்! இதையறிந்த விக்ரம் பிரபு ரசிகர்கள் குதூகலமாக இந்தப் படத்தை எதிர்ப்பார்த்துள்ளனர். 60 வயது மாநிறம் படத்தில் நடித்து நல்ல பெயர் வாங்கிய விக்ரம் பிரபுவிற்கு தொடர்ச்சியாக 'துப்பாக்கி முனை', திருப்புமுனையாக இருக்கும் என இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்துவிட்டனர் அனலிஸ்டுகள்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு