Election bannerElection banner
Published:Updated:

"ரிலீஸ் டைம்ல நெட்டிசன்கள் கிளப்புற பிரச்னை கஷ்டமா இருக்கு!" - விக்ரம் பிரபு

"ரிலீஸ் டைம்ல நெட்டிசன்கள் கிளப்புற பிரச்னை கஷ்டமா இருக்கு!" - விக்ரம் பிரபு
"ரிலீஸ் டைம்ல நெட்டிசன்கள் கிளப்புற பிரச்னை கஷ்டமா இருக்கு!" - விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு பேட்டி.

``இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததுக்கான பலன் `துப்பாக்கி முனை' படம் மூலமா எனக்குக் கிடைச்சிருக்கு. மணிரத்னம் சார், பாரதிராஜா சார், பாலாஜி சக்திவேல் இவங்க எல்லோருமே படத்தைப் பார்த்து பாசிட்டிவ் கமென்ட்ஸ் கொடுத்ததுக்குப் பிறகு, தைரியம் அதிகமாகியிருக்கு. ரசிகர்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்!" - `துப்பாக்கி முனை' குறித்து ஆவலுடன் பேசுகிறார், விக்ரம் பிரபு.  

``சின்ன வயசுலேயே, அதிக வயதான ஒரு கதாபாத்திரத்துல நடிக்கிறப்போ, என்னென்ன தயக்கம் இருந்தது?" 

``இந்தப் படத்துக்காக 45 வயது போலீஸ் அதிகாரியா நடிக்கணும்னு இயக்குநர் தினேஷ் சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சேன். பிறகு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்ல ஒரு போட்டோஷூட் பண்ணோம். அது பக்காவா செட் ஆச்சு. ஏற்கெனவே, போலீஸா `சிகரம் தொடு' படத்துல நடிச்சிருக்கேன். அதுல இளமையான போலீஸ். ஆனா, இந்தப் படத்துல வயசான போலீஸ் அதிகாரியா வர்றேன். 33 என்கவுன்டர் பண்ண போலீஸ் எப்படி இருப்பார், அவரோட மனநிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு நடிச்சிருக்கேன். அதுக்குப் பின்னாடி காவல் துறையைப் பற்றி பல ஆராய்சிகள் இருக்கு. ஆரம்பத்துல சில தயக்கங்கள் இருந்தாலும், படத்தின் கதை அதை உடைச்சு என்னை பாசிட்டிவ் மனநிலைக்குக் கொண்டு வந்திருச்சு."

``படத்தோட இயக்குநர் தினேஷ், மணிரத்னம் பட்டறையிலிருந்து வந்தவர்... ஸ்பெஷலா என்ன எதிர்பார்க்கலாம்?" 

``இது, ஒரேநாள் நடக்கும் கதை. படத்துல வர்ற கலர்ஃபுல் காட்சிகள் உங்களை வேற மனநிலைக்குக் கொண்டுபோகும். ராமேஸ்வரத்துல ஷூட்டிங் நடந்தப்போ, இயக்குநர் தினேஷ் மணிரத்னம் சார்கிட்ட வேலை பார்த்த அனுபவங்களைச் சொன்னார். `கன்னத்தில் முத்தமிட்டால்' சமயத்துல இருந்தே, தினேஷுக்கு ராமேஸ்வரத்துல ஷூட்டிங் நடத்தணும்னு ஆசை இருந்துச்சாம். இதுதான் என்னோட முதல் ராமேஸ்வரம் விசிட். அந்த ஊரோட அழகை காட்ட பல கேமராமேன்கள் முயற்சி பண்ணமாட்டாங்க. ஆனா, ராசாமதி சார் இந்த விஷயத்துல அப்படியே தலை கீழ். அவர் ராமேஸ்வரத்தை ரசிச்சுப் படமாக்கிய விதம் பார்க்கிறவங்களை ரொம்பவே ஈர்க்கும். படத்துல எம்.எஸ்.பாஸ்கர் சார், அம்மு அபிராமி ரெண்டுபேருக்கும் முக்கியமான கேரக்டர்."

``வழக்கமான போலீஸ் கதையிலிருந்து `துப்பாக்கி முனை'யை எப்படி வித்தியாசமாச் சொல்லப்போறீங்க?" 

``போலீஸ் - திருடன் ஸ்டோரி நம்ம ஊருக்குப் பழக்கப்பட்டதுதான். இதுல திருடனுக்குப் பல ட்விஸ்ட் வெச்சிருக்கோம். படத்தோட டிரெய்லர்ல பார்த்தா தெரியும். ஒரு பக்கம் ஹன்சிகாவை ரொமான்ஸ் பண்ணிக்கிட்டே, இன்னொரு பக்கம் என்கவுன்டர் பண்ணுவேன். இந்தப் படத்தோட காட்சியமைப்புகள் மற்ற படங்கள்ல இருந்து இதை வித்தியாசப்படுத்தும். வழக்கமான மசாலா படங்கள் மாதிரி பாடல்கள், கவர்ச்சிக் காட்சிகள் எதுவும் இதுல இல்லை. ஹன்சிகாவுக்கு அவங்களோட சினிமா பயணத்துல இந்த மாதிரியான கதைகள் அமைந்ததில்லைனுகூட சொல்லலாம்."

``ஸ்பாட்ல நீங்களும், எம்.எஸ்.பாஸ்கரும் சிவாஜி பற்றியே பேசுவீங்களாமே?!" 

``ஏற்கெனவே `அரிமா நம்பி', `வெள்ளைக்கார துரை' படத்துல எம்.எஸ்.பாஸ்கர் சாரோட சேர்ந்து நடிச்சிருக்கேன். அவர் எப்போவுமே தாத்தாவைப் பற்றி அதிகமா பேசிக்கிட்டே இருப்பார். எங்க தாத்தாவோட நடிப்புதான் அவருக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்வார். அவரோட வசனங்களை ஸ்பாட்ல பேசிக் காட்டுவார். தாத்தாவோட அவர் பழகிய நாள்களைப் பத்தி சொல்வார். எனக்கு யாராவது தாத்தா, அப்பா பத்தி சொன்னா ஆர்வமா கேட்க ஆரம்பிச்சிடுவேன். அப்படித்தான் நாங்க ரெண்டுபேரும் இருந்தோம்." 

``முதல் படமான `கும்கி' படத்துல சம்பாதிச்ச நல்ல பெயரைத் தக்க வெச்சுக்க, என்னென்ன முயற்சிகள் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"  

``பொதுவா நடிகர்களுக்கு எல்லாப் படமும் ஹிட் ஆகாது. சில படங்கள்தான் மக்கள் மனசுல பதியும். அப்பாவுக்கு `சின்னத்தம்பி', `அக்னி நட்சத்திரம்' படங்கள் அப்படி இருந்தது. எனக்கு, `கும்கி' படம். அந்தப் படத்துக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸைத் தக்க வெச்சுக்க, வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க ஆசைப்படுறேன், ஒரேமாதிரியான விஷங்களைத் திரும்பத் திரும்பப் பண்றதில்லைனு இருக்கேன். அதனால, வெற்றி - தோல்வி ரெண்டுமே என் கரியர்ல இருக்கு. காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ்னு எல்லா ஜானரிலும் நடிக்க ஆசைப்படுறேன். பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ஈஸியா இருந்துச்சு. இப்போ எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை சோஷியல் மீடியா ஆள்கள் கிளப்பி விடுறாங்க. இதனால நடிகர்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு."

``படத்துக்கான இசைக்காக மெசபடோமியா வரைக்கும் போனீங்களாமே?!"  

``ஆமா, படத்தோட எடிட்டிங் முடிச்சதும் மியூசிக் இல்லாம பார்த்த தயாரிப்பாளர் தாணு சார், எங்க மொத்த டீமையும் பாராட்டினார். முத்து கணேஷ் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர். இசைக்காக, மெசபடோமியா வரைக்கும் போய் கம்போஸ் பண்ணிட்டு வந்தார். இது அத்தனைக்கும் தயாரிப்பாளர் தாணு சார்தான் காரணம். இந்தப் படம் `கும்கி' படம் ரிலீஸான அதே தேதியிலேயே ரிலீஸாகப்போறதால, சென்டிமென்ட்டா ஃபீல் பண்றேன்." 

``சினிமா துறையில அப்பா, தாத்தா எடுத்த பெயரை நீங்களும் எடுக்கணும்ங்கிற அழுத்தம் உங்களுக்கு இருக்கா?"

``யார் என்ன வேலை செய்றோமோ, அதுக்கான பலன் கட்டாயம் கிடைக்கும். நான் சினிமாவுல நல்லா நடிக்கிறதுக்கான அத்தனை முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி, அந்தக் கதை படமா வந்தா, நான் தியேட்டர்ல போய்ப் பார்ப்பேனானுதான் முதல்ல யோசிப்பேன். இப்படி நானும் நடிப்புல நிறைய மெனக்கெடுறேன். நேரமும் நமக்குக் கைகூடி வரணும்; வரும்!" என பாசிட்டிவாக முடித்தார், விக்ரம் பிரபு.  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு