Published:Updated:

IMDB-யின் டாப் 10 இந்தியத் திரைப்படங்களில் இரண்டு தமிழ் படங்கள்!

IMDB-யின் டாப் 10 இந்தியத் திரைப்படங்களில் இரண்டு தமிழ் படங்கள்!
IMDB-யின் டாப் 10 இந்தியத் திரைப்படங்களில் இரண்டு தமிழ் படங்கள்!

மக்களின் ரேட்டிங்களை மையமாக வைத்து இயங்கும் பிரபல திரைப்பட ரேட்டிங் தளமான IMDB 2018-ன் டாப் 10 இந்திய திரைப்படங்கள் என்னவென்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற 'ராட்சசன்' இரண்டாவது இடத்திலும், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த '96' மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தெலுங்கு படமான 'மகாநதி' 4-வது இடத்தில் உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இந்த படம்  தமிழில் 'நடிகையர் திலகம்' என்று வெளியானது. இந்த டாப் 10 பட்டியலில் இருந்த மற்ற படங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. அந்தாதுன் (ஹிந்தி)
2. ராட்சசன் (தமிழ்)
3. 96 (தமிழ்)
4. மகாநதி (தெலுங்கு)
5. பதாய் ஹோ (இந்தி)
6. பட்மேன் (இந்தி)
7. ரங்கஸ்தலம் (தெலுங்கு)
8. ஸ்ட்ரீ (இந்தி)
9. ராசி (இந்தி)
10. சஞ்சு (இந்தி)

கடந்த வருடம் 'விக்ரம் வேதா' முதல் இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தளம் வெறும் மக்களின் ரேட்டிங்களின் சராசரியை வைத்து மட்டும் முடிவெடுக்காமல் சிறப்பு அல்காரிதங்கள் மூலம் போலி ரேட்டிங் மற்றும் விருப்பமான நடிகரின் படங்களுக்கு வேண்டும் என்றே அதிகமான ரேட்டிங் கொடுக்கப்பட்டவை போன்றவற்றையும் கண்டறிந்து இறுதியான ரேட்டிங்கை அப்டேட் செய்யும்.