Election bannerElection banner
Published:Updated:

"குறும்படங்களில் மட்டும்தான் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது!"

புதுவை திரைவிழாவில் வசந்தபாலன்

"குறும்படங்களில் மட்டும்தான் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது!"

சினிமாவையே வாழ்க்கையாக நினைக்கும் இளைஞர்களின் தாகம் தணிப்பதாக இருந்தது அந்த விழா. மும்பை மத்திய திரைப்படப் பிரிவு - புதுச்சேரி பல்கலைக்கழகம் - முற்போக்கு எழுத்தாளர்கலை ஞர்கள் சங்கம் மூன்றும் இணைந்து நடத்திய திரைப்பட விழாதான் அது. நான்கு நாட்களில் 38 படங்களைத் திரையிட்ட விழாவின் தொடக்க நிகழ்ச்சி உப்பளம், பெத்தி செமினார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 'சப்தர் ஹாஷ்மி’ இசைக் குழுவினரின் தமிழ்ப் பாடல் களோடு தொடங்கிய விழாவில், எடிட்டர் லெனின், சென்னை மண்டல தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி, திரைப்பட இயக்குநர் வசந்த பாலன், த.மு.எ.க.ச. தலைவர் ச.தமிழ்ச்செல்வன் போன்றோர் பங்கேற்றனர்.

"குறும்படங்களில் மட்டும்தான் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது!"
##~##

''இன்று கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து படம் எடுத்தும் அதைத் திரையிட திரையரங்கு கிடைக்காமல் அவதிப்படும் நிலைதான் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற, தெருக்களையே தியேட்டர்களாக மாற்றுவோம் என்ற கொள்கையோடு இளைஞர்களும்பெண் களும் கிளம்பவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். அடுத்ததாகப் பேசிய  இயக்குநர் வசந்தபாலன், ''தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 'அங்காடித் தெரு’வில் நான் செல்லியிருக்கும் கதை வெறும் 10 சதவிகிதம்தான். அரசியல், அரசாங்கம், தணிக்கைக் குழு போன்றவற்றின் கட்டுப்பாடுகளால் என்னால் அதைத்தான் செய்ய முடிந்தது. எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல் உண்மையைப் பதிவுசெய்யும் சுதந்திரம், குறும்படங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. எனவே யாருக்கும் பயப்படாமல் துணிவோடு படம் எடுங்கள்'' என்றதும் இளைஞர்கள் கண்களில் எதிர்பார்ப்பு மின்னியது.

''இப்போது எல்லாம் படம் எடுப்பவர்களுக்கே நாம் எப்படி எடுக்கிறோம் என்று தெரியவில்லை. சமீபத்தில் கூட ஒரு படம் எடிட் செய்ய என்னிடம் வந்திருக்கிறது. இரண்டரை மணி நேரம் ஓடக் கூடிய படத்துக்கு 100 மணி நேரம் எடுத்திருக்கிறார்கள் டிஜிட்டலில். எடிட்டருக்குத்தான் வேலை அதிகம். ஆனால், குறைவான சம்பளம்'' என்று வேதனையைப் பகிர்ந்துகொண்ட எடிட்டர் லெனின், ''படங்களைப் பார்த்துவிட்டு விவாதியுங்கள். விவாதிக்க வேண்டும் என்பதற்காக விவாதிக்காமல், கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக விவாதியுங்கள்'' என்று முடிக்க, விழாவின் ஒருங்கிணைப்பாளர் கருணா, ''உங்கள் பாணியில் ஒரு பாட்டுப் பாடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார். ''சொல்றதைச் சொல்லிப்புட்டேன் கேக்கறவங்க கேட்டுக்கங்க'' என்ற சந்திரபாபுவின் பாடலைப் பாடிவிட்டு லெனின் அமர... கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

"குறும்படங்களில் மட்டும்தான் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது!"

மறுநாள் புதுவை பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு அரங்கில் திரையிடல் நடைபெற்றது. எழுத்தாளர்கள், படைப்பாளிகளை விட, மாணவர்கள் அரங்கத்தில் அதிகமாகக் காணப்பட்டது ஆரோக்கிய மான தொடக்கம் எனலாம். தேநீர் இடைவேளையில் லெனின், தமிழ்ச்செல் வன், வசந்தபாலன் ஆகியோரை அணுகி மாணவர்கள் சினிமா குறித்து உரையாடி யது நம் நம்பிக்கையின் பரப்பை இன்னும் அதிகப்படுத்தியது!

- ஜெ.முருகன்
படங்கள்: ஆ.நந்தகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு