Published:Updated:

`மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்!’ - விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் `வேட்டி கட்டு'

`மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்!’ - விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் `வேட்டி கட்டு'
`மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்!’ - விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் `வேட்டி கட்டு'

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலான வேட்டிகட்டு பாடல் வெளியாகியுள்ளது.


`வீரம்’, `வேதாளம்', `விவேகம்' படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா காம்போவில் உருவாகிவரும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பில்லா, ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்துடன் இணைகிறார் நயன்தாரா. அஜித் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் டி.இமான். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வெற்றியின் ஒளிப்பதிவுக்கு ரூபன் படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். தம்பிராமையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான `அடிச்சுத் தூக்கு’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கான வேட்டிகட்டுப் பாடல் வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலே ஏராளமான ரசிகர்கள் பாடலைக் கண்டுகளித்துள்ளனர். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளநிலையில், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.