Published:Updated:

அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட்! விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு

அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட்! விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு
அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட்! விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு

`வீரம்’, `வேதாளம்', `விவேகம்' படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா காம்போவில் உருவாகிவரும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பில்லா, ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்துடன் இணைகிறார் நயன்தாரா. அஜித் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் டி.இமான். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட்! விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு

வெற்றியின் ஒளிப்பதிவுக்கு ரூபன் படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான `அடிச்சுத் தூக்கு’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கான வேட்டிக்கட்டுப் பாடல் இன்று வெளியானது. வெளியான சில நிமிடங்களிலே ஏராளமான ரசிகர்கள் பாடலைக் கண்டுகளித்துள்ளனர். 

அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட்! விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு

இதற்கிடையே படத்தின் முழு ஆல்பமும் இன்று (16/12/18) வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நள்ளிரவு வெளியிட்டு ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தயாரிப்பு நிறுவனமும் இதனை தற்போது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இன்று எத்தனை மணி அளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கவில்லை. 

அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட்! விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு

அதேநேரம் ஆல்பம் வெளியாகவுள்ளது என்பது குறித்த போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. பொங்கலுக்குப் படம் வெளியாக உள்ளநிலையில், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். 

அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட்! விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு