Published:Updated:

“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”

“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”

“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”

“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”

“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”

Published:Updated:
“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”

“ஒரு இடத்தோட அழகைக் கெடுக்கணும்னா, அந்த இடத்தில ரோடு போட்டா போதும்னு சொல்வாங்க. அதனாலதான், காந்தி இந்தியாவுக்கு ரயிலைக் கொண்டுவர வேணாம்னு சொன்னாராம். ஒரு ஊர்ல ரோடு போடுறதுனால, அந்த மக்களோட கலாசாரமும் அந்த ஊரோட அழகும் போயிடும்கிறதைப் பேசுற படம்தான், ‘பசுமை வழிச்சாலை.’ இப்போ, இந்தப் படத்துக்காக இந்தியா முழுக்க டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கேன்.” - பயணங்களுக்கு இடையே நம்மிடம் பேசினார், நடிகர் கிஷோர்.

“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”

“வெற்றிமாறன் படங்களில் உங்களோட ரோல் ஸ்பெஷலா இருக்கும். ‘வடசென்னை’யில் எப்படி?”

“நான் எவ்வளவு சுமாரான நடிகர்னு அவருக்குத் தெரியும்; அவர் எவ்வளவு நல்ல இயக்குநர்்னு எனக்குத் தெரியும். வெற்றி எப்போதுமே அவருக்குப் பழக்கமான நடிகர்களை வெச்சு வேலை வாங்குறதைத்தான் விரும்புவார். அதனாலதான் என்னை, டேனியல் பாலாஜியை, சமுத்திரக்கனியைத் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்க வெச்சுக்கிட்டிருக்கார்.

வடசென்னையோட 30 வருட வாழ்க்கையைச் சொல்லியிருக்கார். அங்கே வாழ்ற மக்கள்; அவங்களோட வாழ்க்கைப் பயணம்னு எல்லாத்தையும் சொல்லியிருக்கார். படத்தில் எல்லா கேரக்டர்களும் ரொம்ப லைவா இருக்கும்; கதைக்கு முக்கியமா இருக்கும். இதெல்லாத்தையும்விட, படத்தோட பெரிய பலம், ஆர்ட் டைரக்‌ஷன்தான். இந்தப் படத்துக்கு ஆர்ட் டைரக்டர் ஜான்சனும் ஒரு ஹீரோனு சொல்வேன். படம் பார்க்கிற யாருமே அதை செட்னு நம்பமாட்டாங்க. அந்த அளவுக்கு தத்ரூபமா காட்டியிருக்கார்.

தனுஷோடு `பொல்லாதவன்’, `ஆடுகளம்’னு ரெண்டு படங்கள் வொர்க் பண்ணியிருக்கேன். இப்போ அவர் தயாரிச்சு நடிக்கிற `வடசென்னை’யிலும் வொர்க் பண்ணியிருக்கேன். எந்த இடத்திலும் அவர் ஒரு தயாரிப்பாளர்னு எனக்கு ஃபீல் வரவே இல்லை. வேற யாரோ ஒரு தயாரிப்பாளரோட படத்தில் வொர்க் பண்ற ஃபீல்தான் வந்தது. `வடசென்னை’ ஷூட்டிங் முழுக்க நடிகராக மட்டும்தான் இருந்தார்.’’

“நீங்க எந்த வில்லன் நடிகரோட நடிப்பை ரசிச்சுப் பார்ப்பீங்க?”

“இப்போ வில்லனுக்கான விளக்கமே மாறிடுச்சுனு நினைக்கிறேன். ‘பொல்லாதவன்’ படம் பண்ணும்போது என்னை நல்ல வில்லன்னு சொன்னாங்க. சாக்லேட் ஹீரோவா இருந்த அரவிந்த் சுவாமிசார் வில்லனா நடிக்கிறார். நெகட்டிவ் ரோலில் நடிச்ச பாபி சிம்ஹா இப்போ ஹீரோவா நடிச்சுக்கிட்டிருக்கார். இப்படிப் பல விஷயங்கள் மாறிடுச்சு. மக்களுக்கும் ஒரு நடிகரை வேற வேற மாதிரி பார்க்கத்தான் ஆசைப்படுறாங்க.’’
 
“உங்களோட பெங்களூரு தோட்டத்தில் விளையும் காய்கறிகள் எல்லாம் சென்னையில இருக்கிற உங்க நண்பர்களுக்குக் கொடுத்துட்டிருக்கீங்களாமே?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்!”

“பெங்களூருல எட்டு ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்றேன். சிலபேர் இணைந்து விவசாயம் பண்றோம். பெங்களூரில் விளையிற காய்கறிகளை எல்லாம் அங்கேயே ஒரு கடை வெச்சு விற்பனை பண்ணிக்கிட்டிருக்கோம். விளைச்சல் அதிகமா இருந்தா, சென்னையில இருக்கிற நண்பர்களுக்குக் கொடுத்தனுப்புவோம். அவங்களும் எங்களுக்கு சப்போர்ட் பண்ணணும்னு எங்ககிட்ட காய்கறிகள் வாங்கிட்டிருக்காங்க.”

“விவசாயம் பண்ற நீங்க விவசாயம் சார்ந்த படங்களில் நடிக்கலாமே?”

“சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லணும்னு படம் எடுக்குறவங்க கேட்டா பண்ணலாம்தான்.  இப்போ கன்னடத்துல நாங்க அப்படி ஒரு படம் பண்ணிக்கிட்டிருக்கோம். விவசாயம் சார்ந்த பல விஷயங்கள் அந்தப் படத்துல இருக்கும்.”

“விவசாயம் சார்ந்த படங்களுக்கு சம்பளம் வாங்காம, சம்பளத்தைக் குறைச்சுக்கிட்டு நடிப்பீங்களா?”

“விவசாயம் சார்ந்த படத்திற்கு மட்டும்தான் அப்படிப் பண்ணணும்னு இல்லை. எனக்குப் பிடிச்ச கதை, கேரக்டர் இருந்தா நான் சம்பளம் வாங்காம, சம்பளத்தைக் குறைச்சுக்கிட்டு நடிச்சிருக்கேன். நல்ல படங்களுக்கு என்னோட பங்களிப்பு நடிப்பைத் தாண்டியும் சில விஷயங்களில் இருக்கும். அது சம்பளம் சார்ந்ததாகவும் இருக்கலாம்; புது இயக்குநர்களோட படங்களுக்கு ஸ்கிரிப்ட் வொர்க்ல உதவி பண்றதாகவும் இருக்கலாம்.”

மா.பாண்டியராஜன்